இஸ்லாத்தில் சமூக உறவுகள்.அ) குலங்களும், இனங்களும், குடும்பங்களும் கிளைவிடுகின்ற பாலைவனமும், கோத்திர வாழ்வும்

ஆ) அவர்கள் வாழும் வலயங்களினதும், நிலங்களினதும் வேறுபாடுகள்.

மக்களுக்கு இரண்டாவது இயல்பொன்றை அறிவூட்டுவதில் புவியியல் காரணிகள் முக்கிய பங்கினைச் செலுத்தின. இந்தக் காரணிகள் மனிதவர்க்கத்தை குழக்களாகவும் கோத்திரங்களாகவும் பிளவுபடுத்தியதோடு நிறரீதியான மொழிரீதியான வேறுபாடுகளையும் தோற்றுவித்தன.

இவ்விரு காரணிகளும், ஒவ்வொரு குழுவுக்கும் தமக்கென ஒரு நிலத்துண்டை கைப்பற்றிக் கொள்ளச் செய்தன. ஒவ்வொரு குழுவினதும் முயற்சி, உழைப்பு என்பவற்றைப் பொறுத்து இந்த நிலத்துண்டுகள் அளவில் வித்தியாசப்பட்டன. ஆவர்கள் பலமிக்கவர்களாக இருந்தால் பெரிய துண்டு நிலத்தையும், அப்படி இல்லாத போது சிறுதுண்டு நிலத்தையும் பெற்றுக் கொண்டனர். ஒவ்வொரு குழுவும் அந்த நிலத்தை தனது தந்தைநாடு எனக் கூறி தமது முழு பலத்தையும் கொண்டு அதனைப் பாதுகாத்தது.

இந்த விடயம் மனிதனுடைய இயற்கைத் தேவையின் முடிவாக இருந்த போதிலும், தேசியப்பிரிவு, ஒரே சமூகமாகக் கூடி வாழும் மனிதனின் இயல்புக்கு முரணாகவே உள்ளது. சிதரிக்கிடக்கும் எல்லா சக்திகளையும் சேகரித்து ஒன்றிணைக்க வேண்டும் என்பதே இயற்கையின் விருப்பம் என்பது தெளிவானதாகும். அதுவே தமது இலக்கினை பரிபூரணமானதும் பொருத்தமானதுமான வழியில் அடைந்து கொள்வதற்கான புதிய ஐக்கிய சக்தியை உருவாக்கிக் கொள்ள வழிவகுக்கும்.

இந்த நடைமுறையை ஒரு மூலமாக உருப்பெரும் மூலப் பொருளில் அவதானிக்கலாம். அத்துடன் அது படிப்படியாக தாவரமாகவும், மிருகமாகவும், மனிதனாகவும் தோற்றமளிக்கிறது. இது இயற்கையின் தொழிட்பாடாகும். அனால் தந்தை நாடு என்ற பெயரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பிரிவுகள், ஒரு தேசத்தை , குறிப்பிட்ட தமது சொந்த சமூகத்தின் கீழ் ஐக்கியப்பட வழிவகுத்ததோடு ஏனைய தேச சமூகங்களில் இருந்து அவர்கனைப் பிரித்தது. இவ்வாராக பெயதீக ரீதியாகவும், ஆத்மீக ரீதியாகவும் ஒரு தேசிய அலகிலிருந்து வித்தியாசமான இன்னொரு அலகு உருவாக்கப்பட்டது. இதன் முடிவு ஐக்கியத்தில் இருந்தும், இணைப்பில் இருந்தும் மனிதாபிமானம் வாபஸ் பெரப்படுகின்றது. மேலும் மனிதாபிமானம் எதனைத் தவிர்க்க விரும்பியதோ அதனாலேயே அது பாதிக்கப்படுகின்றது. இது ஒரு ஆபத்தான நிலைமையில் முடிவுறும். இயற்கையில் உள்ள பொருட்கள் சம்பந்தப்பட்ட வரையில் மனிதன் எப்படி நடந்து கொள்கின்றானோ அதே முறையில் தான் ஒரு தேசிய அலகு இன்னொரு இன்னொரு சமூக அலகோடு நடந்து கொள்ளும். அதாவது மனிதன் இயற்கைப் பொருள்களை வேலைக்கு அமர்த்தி சுரண்டுவது போல் ஒரு தேசிய அலகு இன்னொரு தேசத்தை சுரண்டும்.

ஆரம்ப காலம் முதல் பெற்ற விசாலமான அனுபவம் இந்தக் கூற்றினை நிரூபிக்கின்றது. நாம் ஏற்கனவே குறிப்பிட்ட குர்ஆன் வசனங்கள் கூட இதனை உறுதி செய்கின்றன.

இஸ்லாம் சமூகத்தை விசுவாசத்தின் அடிப்படையில் அமைக்கின்றதே ஒழிய இனம், தேசம், தந்தை நாடு ஆகியவற்றின் அடிப்படையில் அமைப்பதில்லை. திருமணம் மற்றும் இரத்த உறவு சம்பந்தமான விடயங்களிலும் கூட பாலியல் அனுபவம், பரம்பரைச் சொத்து ஆகியவற்றின் கண்ணோட்டத்தில் கூட இதே விசுவாசத்தின் அடிப்படையே உள்ளது. திருமனம் இரத்;த உறவுமுறை என்பவற்றின் சுற்றுப்பாதை ஏகதெய்வக் கோட்பாடேயன்றி வீட்டோடும் நாட்டோடும் சம்பந்தப்பட்டதல்ல. இதற்கான சிறந்த அத்தாட்சி, இந்த நம்பிக்கையின் சட்டங்களைப் பற்றி கலந்துரையாடுகின்ற போது, எந்த வகையிலும் சமயம் நிராகரிக்கப்படுவதில்லை என்பதை நாம் அவதானிக்கலாம்.

இஸ்லாமிய சமூகம் அதன் பெருமையின் உயர்விலும், வெற்றியின் உச்சகட்டத்திலும் சமயத்தின் உயர்வினையே கடமையாகக் கொண்டிருந்தது. அத்துடன் அது சமய விடயங்களில் வழிகேட்டை அனுமதிக்கவுமில்லை. மீண்டும் இஸ்லாமிய சமூகம் வெற்றி கொள்ளுமானால் சமய புரனமைப்புக்கும், அதன் போதனைகளின் மறுமலர்ச்சிக்குமான எல்லா முயற்சிகளையும் அது செய்ய வேண்டும்.

ஒரு முஸ்லிம் வரையரைகளுக்கு மத்தியில் வாழ்ந்தாலும், அவன் சமயச் சட்டங்களை தன்னால் இயன்றவரையிலும் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாராக இஸ்லாமியச் சமூகம் என்பது எல்லா சூழ்நிலைகளிலும் வாழக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகின்றது. அது ஆதிக்கம் அல்லது அடிபணிவு, வெற்றி அல்லது தோல்வி முன்னேற்றம் அல்லது, பின்னடைவு, தெளிவு அல்லது மயக்கம், பலம் அல்லது பலவீனம் போன்ற எந்த நிலையிலிருந்தாலும் பேண்ப் பாதுகாக்க முடியும். குர்ஆனின் எச்சரிக்கைமிக்க வசனங்கள் இதனை; தெளிவாக உறுதி செய்கின்றன.

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26