இஸ்லாத்தில் சமூக உறவுகள்.இந்த நிலைமை எமது கண்களுக்கு முன்னே இருக்கின்றது. மேலும் பலம் மிக்க நாடுகள் பலவீனமான நாடுகள் மீது செலுத்திவரும் அட்டூழியங்களும் அடக்குமுறைகளும் வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்டிருப்பது போலவே நாம் காணக் ;கூடியதாக உள்ளது. முன்பு பிர்அவ்ன், சீஸர், அல்லது கஸ்ரா ஆகியோர் நிர்கதியற்ற பலவீனமான மக்கள் மீது தாங்கள் விரும்பியவாறு இன்னல்களை இழைத்து வந்தனர். சில வேளைகளில் அவர்களுக்கு இதற்காக வருந்தி மன்னிப்புக் கேட்குமாறு கூறப்பட்டபோது தன்னுடைய ஆட்சியின் பெருமையையும், நாட்டின் நலனையும், அரசாங்க அத்திவாரத்தின் உறுதியையும் கருத்தில் கொண்டே அந்தக் காரியங்களைச் செய்ததாகக் கூறினர். ஓரு ஆட்சியாளர் தனது திறமைக்கும், தலைமைக்கும் சரியானதாகவே இந்தக் காரியங்களை நம்பினார். ஆத்தோடு அவர் தன்னுடைய வாளை தனது செயல்களுக்கான நியாயவாதமாகப் பாவித்தார். இதுதான் பண்டைய முறை, மேலும் புதிய முறையிலும் எவ்வித வித்தியாசமும் இல்லை. பலம்மிக்க நாடுகளுக்கும், பலவீனமான நாடுகளுக்கும் இடையில் நிலவுகின்ற அரசியல் உறவுகளை நீங்கள் படித்தால், வரலாறும், வரலாற்று உண்மைகளும் மீண்டும் மீண்டும் மீட்டப்பட்டிருப்பதையும், தொடர்ந்தும் அவை மீட்டப்பட்டுக் கொண்டு வருவதையும் நீங்கள் காணலாம். இதில் உள்ள ஒரே ஒரு வித்தியாசம், முன்னைய தனிநபர் வடிவம் இப்போது ஒரு சமூக வடிவமான உருமாறியுள்ளது. ஆனால் சூழ்நிலைகளும், உணர்வுகளும் இன்னும் மாற்றமடையவில்லை.

இவ்வாறு ஆசைகளுக்கு அடிபனியும் வழிமுறையில் இருந்து விடுபட்டு இஸ்லாமிய வழி வேறுபட்டு நிற்கின்றது. மேலும் இதற்கான காரணம் நபிமார்களின் வழிமுறைகளும் வெற்றிகளும் உடன்பாடுகளும் ஆகும்.

ஆ) இஸ்லாமிய அரசாங்க முறைகளும், ஏனைய அரசாங்க முறைகளுக்குமான இன்னொரு வித்தியாசம் வரலாற்றில் பதியப்பட்டிருப்பதுபோல் அத்தகைய சமூகங்களில் எப்போதுமே ஒரு வர்க்கபேதம் செல்வம், அந்தஸ்து அல்லத P பதவி என எந்தக் கண்ணோட்டத்தில் இருப்பினும் அவற்றின் முடிவு ஊழலாகவே இருந்துள்ளது. ஆனால் இஸ்லாத்தினால் உருவாக்கப்பட்ட சமூகம், ஓர் உறுப்பினர், இன்னோர் உறுப்பினரை விட முன்னுரிமை பெறாத, உயர்வுகளை வேண்டாத, இறுமாப்பு அற்ற, அகம்பாபாவம் அற்ற பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. மனிதப் பண்புகளில் அடிப்படை வித்தியாசம் சீரிய ஒழுக்கமாகவே இருந்தது. மேலும் இந்த சீரிய ஒழுக்கம் மனிதர்களோடு அன்றி, இறைவனோடு தொடர்புடையதாக இருந்தது.

இவ்வாராக சட்டத்தின் வழிமுறையையும், சமூக விடயங்களில் வர்க்க பேதத்தை நீக்குவதையும் பொறுத்தமடடில் ஒரு வழக்கின் வெற்றியாளர், தோல்வியடைந்தவர், ஆட்சியாளர், ஆளப்படுவோர், தலைவன், தொண்டன், சுதந்திர மனிதன், அடிமை, ஆண், பெண், ஏழை, பணக்காரன், சிரியவன், பெரியவன் அனைவருமே இஸ்லாத்தின் பார்வையில் ஒரே அந்தஸ்தினை உடையவரே. இதற்குரிய மிகச்சிரந்த அத்தாட்சி, நபியவர்களின் பண்பாகும்.

இ) இஸ்லாத்தில் நிர்வாக அதிகாரம் என்பது சமூகத்தில் சிறப்புரிமை பெற்ற ஒரு வர்க்கத்தைக் கொண்டிருக்க வில்லை. சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் அதில் பங்குண்டு. ஒவ்வொரு தனிநபருக்கும் மற்றவர்கள் நன்மையையும், கருணையையும் நோக்கி வழிகாட்ட வேண்டிய கடமை உள்ளது. அது போலவே தீமைகளைக் கலையுமம் கடமையும் உள்ளது. சுரக்கமாகக் கூறின் இஸ்லாமிய சிந்தனைகளுக்கும், ஏனைய சிந்தனைகளுக்கும் இடையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன. அவற்றை உண்மையான ஒரு அறிவாளியின் கண்களில் இருந்து மறைக்கவும் முடியாது. மேலே குறிப்பிட்ட எல்லா விடயங்களும் நபி(ஸல்) அவர்களின் வாழ்நாளில் இருந்தவை. சுமூகத்தின் தலைமைத்துவமும், பாதுகாப்பும் நபி(ஸல்) அவர்களுக்கே சொந்தமாக இருந்தது. மேலும் அவர்களுடைய ஆட்சிமுறை வேறு எந்த அரசாங்கங்களின் ஆட்சிமுறையோடும் ஒத்த பண்பினைக் கொண்டிருக்க வில்லை. ஆனால் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் சமூகம் என்ற வகையில் முஸ்லிம்கள் எல்லா முஸ்லிம்களையும் கருத்தில் கொண்டு ஆட்சியாளராக ஒரு கலீபாவை நியமிக்க வேண்டும் என நம்பினர். ஏவ்வாராயினும் ஷீஆ பிரிவினர் கலீபா என்பவர் வெளிப்படையாக இறைவனாலும் நபி(ஸல்) அவர்களாலும் தெரிவு செய்யப்பட்டவர்கள் என நம்புகின்றனர். மேலும் சமய சாஸ்திர புத்தகங்களில் குறிப்பிடப்பட்டிருப்து போல நபி(ஸல்) அவர்களுக்கும் பின் இமாம்களின் எண்ணிக்கை பன்னிரண்டு எனவும் நம்புகின்றனர்.

எவ்வாராயினும் நபி(ஸல் அவர்களுக்குப் பின், இன்றை நிலையில் இமாம் ஒருவர் இல்லாத நிலையில் சந்தேகமின்றி இஸலாமிய அரசாங்கமே முஸ்லிம்கள் சம்பந்தபபட்ட பொறுப்பை ஏற்கிறது இந்த விடயம் தொடர்பாக குர்ஆனில் இருந்து அனுமானிக்கக் கூடியது எதுவெனில், நபி(ஸல்) அவர்கள் பிரயேகித்த முறைக்கு ஏற்ப முஸ்லிம்கள் தமது சமூகத்தின் ஆட்சியாளரைத் தெரிவு செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதே. அவருடைய முறை ஒரு முடியாட்சியாகவோ பேரரசாகவோ இருக்கவில்லை மாராக மரபுரீதியான இமாமின் தூதுத்துவ மறையாகவே இருந்தது. இறைவனுடைய கட்டளைகளை எவ்வித மாற்றமும் இன்றி மக்கள் மத்தியில் பரப்புவதே அவரின் வழிமுறையாக இருந்தது. சட்டங்கள் இல்லாத விடயங்களில் பல்வேறு காலப்பகுதியிலும் இடங்களிலும் நிகழ்ந்த சம்பவங்களைப் பொறுத்மடடில் அவர்கள் முஸ்லிம்களை ஒரு சபையாகக் கொண்டு ஆலோசனை செய்து அவற்றைத் தீர்த்தனர்.

நபிமார்கள் தலைமைத்துவம். பாதுகாவலர் ஆகிய விடயங்களில் ஏற்கனவே நாம் குறிப்பிட்ட பல்வேறு வசனங்களே இதற்குரிய அத்தாட்சிகளாகும். இவற்றுக்கு இன்னும் மேலதிகமாக அத்தியாயம் 33 இன் 21 ஆவது வசனமாகிய இறைவனின் நபியின் வழியே உங்களுக்கு சிறந்த உதாரனமாகும் என்பதையும் சேர்த்துக் கொள்ளலாம் எனக் கூறி எமது கலந்துரையாடலை முடிக்கின்றோம்.

இஸ்லாமிய இராஜ்ஜியத்தின் எல்லை விசுவாசம் இயற்கையான சம்பிரதாயமான வரையரைகள் அல்ல

மனிதவர்க்கத்தை  தேசங்களைப் பாகுபடுத்தும் எண்ணக்கருவை இஸ்லாம் நிராகரிக்கின்றது. மேலும் ஒரு சமூக உருவாக்கத்துக்கு அடிப்படையாக உலகாயத வாதம் அமைவதையும் அது அனுமதிக்கவில்லை.

தேசியப் பிரிவுகளுக்கு இரண்டு உதாரனங்கள் உள்ளன.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next