இஸ்லாத்தில் சமூக உறவுகள்.இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் சமூகத்தின் பாதுகாவலனாக செயல்பட வேண்டியவர் யார்? அவரின் வழிமுறை எது?

இஸ்லமிய சமூகத்தின் கடிவாளத்தை வைத்திருந்தவர் நபி அவர்களே. மேலும் நபி அவர்களுக்கு ஒள்வுமறைவின்றி அடிபணிpவதை குர்ஆன் மக்கள் மீது கடமையாக்குகின்றது. குர்ஆனின் ஒவ்வொரு வசனமும் இஸ்லாமிய சமூகத்தில் நபி அவர்களின் பொதுவான மேற்பார்வையை விளக்குகிறது. இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடுகிறவர்களை நிரைவு செய்யக் கூடியது எதுவெனில் முதலாவதாக, நபி அவர்களின் பண்புகளையும், வழிமுறையினையும் மிக அவதானத்துடன், ஆழமாகப் படிக்க வேண்டும். இரண்டாவது கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். அது போலவே வணக்க வழிபாடு, கொடுக்கள் வாங்கல், அரசியல் மற்றும் ஏனைய உறவுகளோடு தொடர்புடைய திட்டமிடப்பட்ட சட்டங்கள் பற்றிய வசனங்களையும் மதிப்பீடு செய்ய வேண்டும். தெய்வீக வெளிப்பாடுகளில் இருந்து ஒரு அறிவாளி பெற்றுக் கொள்கின்ற காரணங்கள் தெளிவானவையாகவும் போதிய அளவுடையதாகவும் இருக்கும் ஆனால் அதனை ஒன்று இரண்டு வசனங்களின் மூலம் கண்டு கொள்ள முடியாது.

இது பற்றி விவாதிப்பவர்கள் நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு விடயம், வணக்கத்தோடு தொடர்புடைய எல்லா வசனங்களும், புனித யுத்தம் போன்ற விடயங்களோடு அதாடர்புடைய வசனங்களும் விசுவாசிகளை நோக்கி கூறப்பட்டுள்ளன. இந்த வசனங்கள் நபியை நோக்கி மட்டும் பேசவில்லை.

இந்த வசனங்கள் எல்லாமே சமயம் என்பது இறைவனால் மனிதர்களுக்கு அருளப்பட்ட ஒரு சமூக வெளிப்பாடு என்பதையே காட்டுகின்றன. அவன் தன்னுடைய படைப்புக்கள் (இறை) நம்பிக்கை அற்றவர்களாக இருப்பதை விரும்பவில்லை. மேலும் அவர்கள் எல்லோருமே சமயத்தைப் பராமரிக்க வேண்டும் எனவும் அவன் விரும்புகிறான். இதன் முடிவு தனி மனிதனின் சேர்க்கையான சமூகத்தின் எல்லா நடவடிக்கைகளும் அந்த சமூகத்தை உருவாக்கிய அவர்களோடு தொடர்புபட்டதாகவே உள்ளது.

இந்த அடிப்படையில், எந்த ஒரு தனிமனனிதனும் மற்றவரை விட மேலானவர் அல்ல. மேலும் சமூகத்தில் ஒரு சிலரை ஒதுக்கிவிட்டு ஒரு குறிப்பிட்ட சில தனி நபர்களிடம் மட்டுமே சமூக விடயங்கள் காட்டப்படுவதில்லை. இந்த விடயத்தில் கீழ் மட்டத்தில் உள்ள ஏனைய மக்களிலிருந்து நபி அவர்களும் வித்தியாசப்படவில்லை. இறைவன் கூறுகின்றான்:

உங்களில் ஆணோ பெண்ணோ எவர்(நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டான்(ஏனெனில் ஆணாகவோ பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரின் உள்ளவர்தாம்.. (3:195)

 இந்த வசனத்தைப் பொதுவாக ஏற்றுக் கொள்வது இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்கள் என்ற வகையில் ஒருவர் மற்றவர் மீது செல்வாக்கு கொண்டிருப்பதையும் அந்த செல்வாக்கை இறைவன் பாழாக்க வில்லை என்பதையும் காட்டுகின்றது. மீண்டும் இறைவன் கூறுகின்றான்: பூமி இறைவனுடையது அவன் தான் விரும்பிய அடியானுக்கு அதனை விட்டு வைக்கின்றான். மேலும் ஒழுக்கமற்றவர்களுக்கே சிறந்த முடிவு உண்டு.

நபி அவர்களிடம் காணப்படாத அழைப்பு, வழிகாட்டல், கல்வி போன்ற விஷேட சிறப்பம்சத்தையும் இங்கே மறந்துவிடக் கூடாது.ஆகவே தன்னைப் பின்பற்றுகின்றவர்களின் எல்லா விவகாரங்களையும் கவனிப்பதற்காகவும், அந்த விடயங்களின் பாதுகாவலராக இருப்பதற்காகவும் இந்த உலகிலும் மறுவுலகிலும் அவர்கள் இந்த மக்களின் தனித்துவமான ஒரே தலைவராகவும், இமாமாகவும் வாழுகின்ற வரைக்கும் அவர்களின் விவகாரங்களைக் கவனிக்கவும் பாதுகாக்கவும் இறைவன் நபி அவர்களை நியமித்தான்.

இங்கு அலட்சியம் செய்ய முடியாத ஒரு விடயம் என்னவென்றால் இந்த ஆட்சி முறை முடியாட்சி முறையில் இருந்தும் வேறுபட்டது. ஏகாதிபத்திய முடியாட்சி முறையில் இறைவனின் சொத்துக்கள் யாவும் மகுடத்துக்கும் சிம்மாசனத்துக்கும் உரியவருக்கே சட்டபூர்வமானதாகக் கருதப்படுகின்றன. மேலும் இறைவனின் படைப்புக்களை, தமது சேவகர்களாகவும், தாம் விரும்பியவற்றை செய்வதற்காகவும் பயன்படுத்தலாம். ஆத்துடன் அவர்கள் மீது தமக்கு விருப்பமான தீர்ப்பினை வழங்க முடியும் எனவும் கருதப்படுகின்றது.

இன்னும் இஸ்லாமிய ஆட்சிமுறை என்பது சுரண்டலையும், உலகாயத சந்தோஷங்களையும் அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட ஜனநாயக அல்லது சோஷலிஸ வழிமுறையும் அல்ல. இவற்றுக்கு மாறாக இவற்றுக்கு எந்த வகையிலும் ஒத்துப் போகாத அளவுக்கு பாதுகாப்பான வழிமுறையைக் கொண்டுள்ளது. இது பின்வருமாறு வர்ணிக்கப்படுகின்றது.

அ) இந்த சிந்தனைப் பிரிவுகளுக்கும், இஸ்லாத்துக்கும் இடையிலான மிகப் பெரிய வித்தியாசங்களில் ஒன்று முன்னையவற்றின் சமூகங்கள் உலகாயத சந்தோஷத்தின் அடிப்படையிலானவை அவற்றிடையே சுரண்டல் உணர்வு உள்ளது. இந்த உணர்வானது மனித மமதையாகும். இது மனித விருப்பம், செயல் என்பவற்றுக்காக எல்லாவற்றையும் கீழ்ப்படியச் செய்யும் மேலும் ஒரு மனிதனைக் கூட இன்னொரு மனிதனின் விருப்பத்துக்காக கீழ்ப்படியச் செய்யக் கூடியது. அது மனிதனுக்கு தான் விரும்பிய வழியில் ஒரு இலக்கினை அடைந்து கொள்ள அனுமதிக்கிறது. அவனுடைய சொந்த நலனுக்காக வேண்டப்படுவதில் எல்லாம் அதில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இது முழுக்க முழுக்க முன்பு நடைமுறையில் இருந்த முடியாட்சி அதிகாரமாகும். இது இப்போது ஒரு நாகரிக சமூகத்தின் வடிவத்தைப் பெற்றுள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next