இஸ்லாத்தில் சமூக உறவுகள்.அந்தக் காலத்தில் வாழ்க்கையை ஒழுங்குபடுத்த அமைக்கப்பட்ட சட்டங்களால் இன்று விசாலமடைந்தது, சிக்கலடைந்திருக்கும் வாழ்க்கை முறையை எவ்வாறு நிர்வகிக்க முடியும்? இவ்விரண்டு வாழ்க்கை முறையும் ஒன்றின் சுமையை இன்னொன்று எவ்வாறு தனது தோழில் சுமக்க முடியும்?

இதற்குரிய பதில் இதுதான் இரு யுகங்கள் வித்தியாசமானதாகத் தென்பட்டால், அதன் கருத்து அவற்றினது வாழ்க்கையின் பொதுவான நிலைகள் வித்தியாசமடைந்துள்ளது என்பதல்ல. மாறாக, சில குறிப்பிட்ட விடயங்கள் வித்தியாசமடைந்துள்ளன என்பதுதான். வேறு வார்த்தையில் கூறுவதாயின், வாழ்க்கையில் மனிதனுக்கு உணவு தெவைப்படுகின்றது. உடை, உறையுள், போக்குவரத்துச் சாதனங்களும் வசதிகளும், வாழ்வதற்கு ஒரு சமூகம், பாலியல் உறவுகள், வர்த்தக, தொழில் நுட்ப, செயல் முறை உறவுகள் என்பனவும் வாழ்க்கையில் தேவைப்படுகின்றன.

இவை மாற்ற முடியாத பொதுவான தேவைகள். முனிதனுக்கு ஒரு மனிதன் என்ற வகையிலும், அவனுடைய மனித வாழ்வின் இயற்கையான கட்டமைப்பு உள்ளவரைக்கும் அவனுக்கு இவை தேவைப்படுகின்றன. இந்த எல்லா விடயங்களிலும் ஆதிகால மனிதன் தற்கால மனிதனில் இருந்து வித்தமியாசப்பட்டுக் காணப்படவில்லை.

இந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்ட உபாயங்களிலேயே வித்தியாசம் உள்ளது. படிப்படியாக அவன் தெரிந்து கொண்ட தேவைகளிலும், அவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்காக அவன் கற்றுக் கொண்ட வழிகளிலுமே வித்தியாசங்கள் உள்ளன. இந்த விடயத்தை விவரிக்க ஆதிகால மனிதன் பழங்களின் மூலமாகவும், தான் தேடிக் கொண்ட இறைச்சி போன்ற ஏனைய உணவுகளின் மூலமாகவும் இலகுவாக தனது பசியைத் தீர்த்துக் கொண்டான். ஆனால் இன்று மனிதன் ஆயிரக் கணக்கான வித்தியாசமான பண்டங்களைத் தயாரிக்கின்றான். அவனுடைய புத்திசாதுரியம், ஆற்றல் மிகு சிந்தனை என்பவற்றைக் கொண்டு ஒவ்வொன்றும் வித்தியாசமான பண்புகளையும், சுவையினையும், திறதினையும், மனத்தினையும் கொண்டதாகவும், இன்னும் விவரிக்க முடியாத விஷேடமான பண்புகளைக் கொண்டதாகவும் தயாரிக்கின்றான்.

உணவினைப் பொறுத்தமட்டில் இரண்டு வகையான வாழ்க்கை முறையிலும் எல்லா வகையான வித்தியாசங்களும் அப்பால், மனிதன் தனது பசியைத்தீர்த்துக் கொள்ளவே உணவைத் தயாரிக்கின்றான். என்பதில் எவ்வித வித்தியாசமும் இல்லை. உடை உறையுள் ஆகியவற்றிலும் இதே நிலைதான்.

உணவு, உடை, உறையுள் மற்றும் வாழ்க்கையின் ஏனைய தேவைகளைப் பொறுத்த மடடில் இந்தப் பொதுவான நம்பிக்கைகள் மனித வாழ்வின் முதல் நாளில் இருந்தே இருந்து வந்துள்ளதையும, வேறுபட்ட காலப்பகுதிகளில் அது மாற்றங்களுக்கு உட்படவில்லை என்பதையும் நீங்கள் காணலாம். மேலும் அதுபோலவே முதலாவது நம்பிக்கை, நம்பிக்கையின் முன்னேற்றகரமான கடைசிக் கட்டத்தோடு ஒத்திருக்குமானால் இயற்கையின் அழைப்புக்கு ஏற்பவும், மகிழ்ச்சியைப் பாதுகாப்பதற்குமாகவே திட்டமிடப்பட்டுள்ள இஸ்லாத்தின் பொதுச் சட்டங்கள் வாழ்க்கையின,; ஓர் உபாயத்தை, இன்னொன்றால் ஈடுசெய்வதற்காக அவற்றை இல்லாதொழித்து விடவில்லை என்பதையும் காணலாம். நவீன உபாயங்கள் அவற்றினிடையே பிரிவினை இன்றி இயற்கையோடு இசைந்ததாக இருப்பின் இஸ்லாம் அதனோடு ஒத்துப் போகின்றது. ஆனால் அவை படைப்பின் அடிப்படைச் சட்டங்களுக்கு முரணாக இருப்பின் அது நவீன காலத்துக்கு உரியதாயினும் சரி, ஆதிகாலத்துக்கு உரியதாயினும் சரி அஸ்லாம் அதனை ஏற்றுக் கொள்வதில்லை.

செல்வ அந்தஸ்து, பாதுகாப்பு, விதிகள், தொலைத்தொடர்பு சாதனங்களின் வசதி, நெருங்கிய தொடர்புகள், நகரம் ஒன்றினை நிர்வகிப்பதற்கான விதிமுறைகள் போன்றவை, வித்தியாசமான காலப்பகுதிகளுக்கு சொந்தமானவையாகவும் விரைவாக மாறுகின்றவையாகவும் உள்ள தற்செயலாக நடக்கின்ற சம்பவங்களாகும். இவை எல்லாமே இஸ்லாமிய சமூகத்தில் அல்லது அரசாங்க விவகாரங்களுக்கான பொறுப்பில் ஓர் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்த இஸ்லாமிய அதிகாரி, அல்லது ஆளுனர் தனது இராச்சியத்துக்குள், ஒரு வீட்டின் எஜமான் தனது வீட்டு விவகாரங்களை முடிவு செய்து நிர்வகிப்பது போலவே செயல்படுகின்றார். ஒரு முஸ்லிம் சமூகத்தின் உள்ளார்ந்த வெளிவாரியான எல்லா விடயங்களிலும் முடிவு செய்யும் உரிமை இஸ்லாமிய சமூக அதிகாரிக்கு உண்டு.

ஒரு முஸ்லிம் அதிகாரிக்கு யுத்தம்: சமாதானம் தொடர்பாக முடிவு செய்யும் உரிமை உண்டு. நிதி ,நிதி சம்பந்தமற்ற விடயங்களிலும் அவர் முடிவு செய்யலாம். அவருடைய முடிவு முஸ்லிம்களுடன் கலந்தாலோசனை செய்தபின் சமூகத்தின் நன்மையைக் கருதியதாக இருக்க வேண்டும். இறைவன் கூறுகின்றான்.

..சகல காரியங்களும் அவர்களுடன் கலந்தாலோசனை செய்யும் பின்னர்(அவைபற்றி) நீர் முடிவு கட்டினால் அல்லாஹ்வின் மீதே பொறுப்பேற்படுத்தும்.. (அத்தியாயம்3:159)

இவை மக்களோடு தொடர்புடைய விடயங்கள். எல்லாக் காலங்களிலும், எல்லா இடங்களிலும் எடுக்கப்படும் இந்த தற்செயலான முடிவுகளும், விதிகளும், மாற்றத்துக்குரிய உபாயங்களுடனும் மாற்றமடையும், மேலும் சில வேளைகளில் அவை வெளிவரும் சில வேளைகளில் அவை மறைந்துவிடும். இந்த மாற்றத்துக்குரிய விதிமுறைகள், வேதத்தையும் மரபுகளையும் உள்ளடக்கிய பொதுவான தெய்வீக விதிகளில் இருந்தும் வித்தியாசமானவை. இவற்றை செல்லுபடியற்றதாக்க முடியாது. இவை பற்றி இன்னும் பல விடயங்கள் கூறலாம். இருந்தாலும் இப்போதைக்கு இது போதுமானதாகும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next