இஸ்லாத்தில் சமூக உறவுகள்.மனித சமூகத்துக்கு முன்னேற்றப் பாதையில் ஒன்றே ஒன்றுதான் தேவைப்படுகின்றது. அது இயற்கை நலன்களை உபயோகிப்பதில் நாள்தோரும் மாற்றங்களுக்கு உட்பட்டு பரிபூரணத்தை அடைந்து கொள்வதாகும். இந்த மாற்றமும்

வளர்ச்சியும் தொடர்ச்சியான விஞ்ஞான ஆய்வுகள் மூலம், செய்முறை விஞ்ஞானத்தின் நிலையான பிரயோகத்தின் மூலமும் பாதுகாக்கப்படுகின்றது. இந்த விடயம் ஒரு போதும் இஸ்லாத்தால் பரிசோதிக்கப்படாத தொன்றாகும்.

இன்னொரு விடயம், சமூக நிர்வாக முறையும்,சமூகங்கிளல் காணப்படுகின்ற முறைமைகளும் எப்போதுமே மாற்றங்களுக்கு உட்பட்டவை. உதாரணத்திற்கு எசேச்சதிகாரம் ஜனநாயகம் ஆனது. ஜனநாயகம் கம்யூனிஸமானது.

இந்த மாற்றங்கள் ஒரே ஒரு காரணத்தால் தான் அவசியமாகின்றன என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதாவது இந்த முறைமைகள் எல்லாம் குறைபாடுகள் உள்ளவை. அவை ஒன்றுமே மனிதனால் விரும்பப்படும் சமூகப் பரிபூரணத்துவத்துக்கு சமமானவை அல்ல. மேலும் அவற்றால் அந்த பரிபூரணத்தை வழங்கவும் முடியாது. இந்த மாற்றங்கள் குறைபாடுகளிலிருந்து பூரணத்துவத்தை நோக்கி போக வேண்டும் என்பதல்ல. இந்த ஒழுங்கு முறைகளுக் இpடையில் ஒரு வித்தியாசம் இருக்குமானால், அது சரியானதுக்கும் தவறானதுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகத்தான் இருக்கும்.பூரணத்துவத்துக்கும் பூரணத்துவமற்றதற்கும் இடையிலான வித்தியாசமாக இருக்காது. இவ்வாராக சமூக ஒழுங்கு முறை ஸ்தாபிக்கப்பட்டால், முறையான கல்வி எனும் பாதையின் கீழ் மக்கள் வாழ்ந்தால், நன்மை பயக்கக் கூடிய காரியங்களைப் படித்துக் கொண்டால், நன்மைகளையே செய்தால், இந்த வழியில் சந்தோஷத்தை நோக்கி நகர்ந்தால், கொள்கை எனும் படிக்கட்டுகளில் ஏறி பூரணத்துவத்தை நோக்கி செயல்பட்டால், ஒவ்;வொரு நாளும் சந்தோஷத்தைக் கண்டு அதனை விருத்தி செய்து கொண்டால் சமூக மரபுகளையும், வாழ்க்கை முறையையும் மாற்றி அமைப்பதற்கான அவசியம் தான் என்ன? இத்தகைய மக்களுக்கு ஏற்கனவே தம்மிடம் இருப்பதை விட மேலதிகமாகத் தேவைப்படுவதுதான் என்ன?

மாற்றங்களே தேவைப்படாத சந்தர்ப்பங்களில் கூட மனிதனுக்கு எல்லா வகையிலும் மாற்றங்கள் தேவை, என்பதை தெளிவான சிந்தனையுள்ள ஒரு மனிதன் ஊர்ஜிதப்படுத்தமாட்டான்.

நீங்கள் குறிப்பிட்ட இவை எதற்குமே மாற்றங்கள் தேவையில்லை. நம்பிக்கை பொது ஒழுக்கம் போன்ற விடயங்கள் அவசியமாக மாற்றப்பட வேண்டியவை. மாற்றத்துக்குள்ளான நிலைமைகள் வித்தியாசமான சூழல்கள் என்பவற்றோடு இவையும் மாற்றத்துக்கு உட்பட வேண்டும். பண்டைய கால கருத்துக்களை விட வித்தியாசமான கருத்துக்கள் தற்காலத்தவர்க ளிடம் இருக்கின்றன என்பதை மறுக்க முடியாது இது போலவே அவர் வாழும் வித்தியாசமான பிராந்தியங்களுடன் அவர்களின் எண்ணங்களும் வித்தியாசப்படுகின்றன. துருவ பிரதேசத்திலும், வெப்பவலயத்திலும் உள்ள வாழ்க்கை நிலை போல மேலும் பல்வேறு வாழ்க்கை நிலைமைகள் அவர்களின் எண்ணங்களிலும், கண்ணோட்டங்களிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. ஒருவர் எஜமானனாக இருக்கின்றார் மற்றவர் சேவகனாக இருக்கின்றார். ஒருவர் கூடாரத்தில் வாழ்கின்றார் இன்னொருவர் பிரஜையாகவும் இருக்கின்றார். ஒருவர் செல்வந்தனாகவும் மற்றவர் ஏழையாகவும் இருக்கின்றார் ஒருவரிடம் பணம் இருக்கின்றது மற்றவரிடம் இது இல்லை இந்த வித்தியாசங்கள் எல்லாம் மனிதனின் சிந்தனையைப் பாதிக்கின்றன. ஆகவே அவை வித்தியாசமான காரணிகளாலும் காலப்பகுதிகளாலும் மாற்றமடைகின்றன. இந்த விடயத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என ஒரு வாசகர் கூறினால் அதற்குரிய பதில் இதுதான்:

இந்த விடயங்கள் யாவும் விஞ்ஞானம் மனிதக் கண்ணோட்டம் என்பவற்றோடு சம்பந்தப்பட்டுள்ளன. இந்தக் கொள்கைக்கு அவசியமானது, சரியும், பிழையும் நன்மையும் தீமையும் மேலதிக விவகாரங்களின் வரிசைக் கோவையில் அமைய வேண்டுமே அன்றி உண்மை யதார்த்தம் என்பவற்றின் வரிசைக் கோவையாக இருக்கக் கூடாது. இந்த கோட்பாட்டின்படி பொதுக் கொள்கை ரீதியான அறிவு இந்த மூலாதாரத்துடனும், மீள உயிர்ப்பித்தலோடும் இணைக்கப்பட்டுள்ளன. அது பேல் பொது செயல்முறைக் கண்ணோட்டம், சமூகம் மனிதனுக்கு பிரயோசனமானது, அல்லது நியாயம் சிறந்தது என்ற கருத்துக்கள,; மாறும் சூழ்நிலை, காலம் என்பவற்றோடு மாற்றமடையக் கூடிய பொதுவான விதிமுறைகளாகும்.பொதுவாக கூறும் போது இந்தக் கொள்கையை பொதுத்தன்மை அந்தஸ்தோடு பேசுவது தவறானதாகும். இது பற்றி பல இடங்களில் நாம் விவரமாகக் கலந்துரையாடி உள்ளோம்.

சுருங்கக் கூறின் இந்தக் கொள்கை ஒரே வகையான பொதுக் கண்ணோட்டத்தின் பொதுவான கொள்கை ரீதியான விடயங்களை உள்ளடக்கவில்லை.இந்தக் கொள்கையின் பொதுத் தன்மையின் சந்தேகத்தைக் காட்ட, இப்படிக் கூறுவதே போதுமானதாகும். அதாவது அது பொதுத் தன்மையைக் கொண்டிருந்தால், மேலும் முழுமையான, நிலையான பொதுக் கொள்கையைக் கொண்டிருந்தால் தனித்துவமான தொடர்புபற்ற ஒரு பிரேரணை எம்மிடம் இருந்திருக்கும் என்பதே அதன் கருத்தாகும். அவ்வாராயின் அதே கொள்கை nதுவே பொதுவானதாகவும், மாறுதல் இல்லாததாகவும் இருந்திருக்கும். அது ஒரு பொதுவான பிரேரணையாக இல்லாவிட்டாலும் கூட, தற்செயலானதாக மீண்டும் எம்மிடம் தனித்துவமான ஒரு பிரேரணை இருக்க வேண்டும் என்றே கூறுகின்றது. அதாவது நாம் தனித்துவமான ஒரு முறையில் இந்தக் கொள்கை பொதுவானதல்ல என்று கூறவேண்டும். எந்த வகையிலும் இந்தக் கொள்கையின் பொதுத்தன்மை செல்லுபடியற்றதும், பயனற்றதும் ஆகும். வேறு விதமாகக் கூறின், எல்லாக் கருத்துக்களும், நம்பிக்கைகளும் ஒரு நாள் மாற வேண்டும் என்ற கருத்து உன்மையாயின், இந்தக் கண்ணோட்டம் கூட மாறவே வேண்டும். மேல் சொன்ன கருத்து மாறுமாயின், அதன் கருத்து எல்லாக் கருத்துக்களும், நம்பிக்கைகளும் ஒரு நாள் மாற வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் அதன் ஒரு பகுதி மட்டும் மாற்ற முடியாது.

தற்போதைய வாழ்க்கையில் மகிழ்ச்சியை சமயம் உத்தரவாதம் செய்யுமா

சிலர் இப்படிக் கூறலாம்: குர்ஆன் இரக்கப்பட்ட வேளையில் இருந்த மனித நாட்டங்களை எல்லாம் இஸ்லாம் எதிர்த்தது என்பது உண்மையே. மேலும் இந்தக் காரணத்தால் தான் உண்மையான மகிழ்ச்சியையும், வாழ்க்கையின் எல்லா உயர்வுகளையும் நோக்கி இட்டுச் செல்லக் கூடியதாகவும் இருந்தது. ஆனால் காலங்களின் ஓட்டம் வாழ்க்கை முறை மாறிவிட்டது. கலாசார மற்றும் நவநாகரிகத்;தின் விஞ்ஞான தொழிநுட்ப வாழ்க்கை என்பவற்றுக்கும் 14 நூற்றாண்டுகளுக்கு முந்திய வாழ்க்கை முறைக்கும் இடையில் எவ்வித ஒற்றுமையும் காணப்படவில்லை. அன்றைய வாழ்க்கைமுறை இயற்கையின் ஆதாரப் பொருள்களோடு திருப்தியடைந்தது.

மனிதன் தனது நீண்ட கடின முயற்சிகளின் விளைவாகவே இத்தகைய முன்னேற்றகரமான அந்தஸ்தையும், வளர்ச்சியையும் அடைந்துள்ளான். இதனை பல நூற்றாண்டுகளுக்கு முன்னைய சூழ்நிலையோடு ஒப்பிடுவதானது, முழுக்க முழுக்க மாற்றமான இரு வகை;களை ஒப்பிடுவது போன்றதாகும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next