இஸ்லாத்தில் சமூக உறவுகள்.அப்படி இருக்கையில் நம்பிக்கையில் சுதந்திரம் என்ற கோட்பாட்டினை இஸ்லாம் எப்படி நிறுவ முடியும்? அது ஒரு தெளிவான முரண்பாடு அல்லவா? நம்பிக்கையில் சுதந்திரம் இஸ்லாத்தில் உள்ளது என யாராவது கூறினால் குடியியல் சட்டத்தில் மக்கள் சட்ட விதிகளில் நின்றும் சுதந்திரமானவர்கள் என்று கூறுவது போலாகும்;.வேறு வார்த்தையில் நம்பிக்கை என்பது மனிதன் சிந்தனையில் உறுதி செய்யப்பட்ட ஒரு புரிந்துணர்வின் தோற்றப் பாடாகும். நம்பிக்கை என்பது அனுமதிப்பது அல்லது தடை செய்வது அல்லது மனிதனை விடுவிப்பது அல்லது அடிமைப்படுத்துவதுபோன்ற விடயங்களில் இஷ்டத்துக்கு விடப்பட்ட ஒரு விடயம் அல்ல. எது அனுமதிக்கக் கூடியது அல்லது தடுக்கக் கூடியது என்பது நம்பிக்கையில் இருந்து எழுகின்ற செயல்களின் மீதான கட்டாயமாகும். ஒரே நம்பிக்கையின்பால் மக்களுக்கு அழைப்புவிடுதல், நம்பிக்கைக்கு விரோதமானவர்களின் செயல்களோடு போராடுதல் போன்ற காரியங்களை அனுமதிக்கலாம் அல்லது தடுத்து விடலாம்.

இத்தகைய செயல்கள் சமூகத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள சட்டங்களின் ஷரத்துகளுக்கு முரணாக இருந்தால், அல்லது சட்டங்களின் அடிப்படைக்கு எதிராக இருந்தால் நிச்சயமாக அவை சட்டத்தால் பரீட்சிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகின்றது.

இஸ்லாம் அதன் எல்லா சட்ட விதிகளிலும் ஏக தெய்வக் கோட்பாட்டிலன்றி வேறு எதிலும் தங்கியிருக்கவில்லை. இந்த சமயத்தில் ஏக தெய்வக் கொள்கை, நபித்துவம், மீள உயிர்ப்பித்தல், என்ற மூன்று மறுக்கமுடியாத கோட்பாட்டுகளை இம்மூன்று அடிப்படை நம்பிக்கைகளையும், புனித வேதங்களைக் கொண்ட யூதர்களும், கிறிஸ்தவர்களும் மாஜிக்களும் ஏற்றுக் கொள்கின்றனர்.

ஆகவே இஸ்லாத்தில் இன்அனாரு விடுதலை இருக்கின்றது. அதுவே கருத்துச் சுதந்திரம். புpன்னைய கலந்துரையாடலில் இது பற்றி விளக்குவோம். ஏனக் கூறி நாம் முடிக்கின்றோம்.

இஸ்லாமிய சமூகத்தில் மாற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் உரிய வழி எது?

மகிழ்ச்சியான வாழ்க்கைக்குத் தேவையான எல்லா அத்தியவசியமான வழிகளையும் கொண்டதே இஸ்லாமிய வழி என்பது உண்மையாகும். மேலும் இஸ்லாமியச் சமூகம் பொறாமைப்படும் அளவுக்கு அதிஷ்டமானதாகும். ஆனால் இது நம்பிக்கையில் சுதந்திரம் இல்லாத விசாலமான ஒரு ஒழுங்கு முறையாகும். இது சமூகத்தை மந்தமாக்குகின்றது. எல்லா மாற்றஹ்களையும், வளர்ச்சியையும் இது சமூகத்தை மந்தமாக்குகின்றது. எல்லா மாற்றங்களையும், வளர்ச்சிகளையும் தடை செய்கின்றது என்று சிலர் கூறலாம் படிப்படியான வளர்ச்சிக்கு ஒரு விடயத்தை மையமாகக் கொண்ட எதிர் எதிரான சக்திகளின் தொடர்களும், பிணக்குகளும் அவசியமாகின்றது. அப்போதுதான், குறுக்கம், முடிவு என்பவற்றின் முடிவாக புதியவை உருவாக்கப்படும். அது அந்த பிணக்குகளின் முடிவாக, மறைந்து போன, அவை உறுவாகியவற்றின் குறைபாடுகளில் இருந்து விடுபடும்.

ஆகவே நாம் இஸ்லாம் அதன் குறைபாடுகளையும் மாறானவைகளையும் அகற்றி, மேலும் குறிப்பாக எதிர் நம்பிக்கைகளில் இருந்து முழுமையாக விடுபட்டுவிட்டது எனக் கூறினால், அந்தக் கூற்றுக்கு அவசியமாகத் தேவைப்படுவது, இஸ்லாம் உறுவாக்கிய சமூகம், பரிணாம வளர்ச்சிப் பாதையில் இருந்து தடுக்கப்படும் என்பதாகும். தர்க்கரீதியான உலகாயத வாதத்தினால் உரிமை கோரப்படுவதும் இதுவே.

எங்களுடைய பதில், இந்தக் கனவான்கள், குறிப்பிட்ட விடயத்திலிருந்து ஆச்சரியப்படத்தக்க வகையில் வழிதவரியுள்ளனர். மனித நம்பிக்கைகளும், போதனைகளும் இரண்டு வகையானவை உலகாயத வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதற்காக அமர்த்தப்பட்டுள்ள கைத்தொழில் தொழில் நுட்ப விஞ்ஞானங்களும் இயற்கை கணித விஞ்ஞானங்கள் போன்ற மனித இன நலன்களுக்கானவையும் இதில் அடங்கும். இந்த விஞ்ஞானங்களும், தொழிநுட்பங்களும், மற்றும் இது போன்றவையும் மாற்றக் கூடியவை என்ற ஒரே வகுப்பில் சேறுகின்றன. மேலும் இவை மாற்ம் அடைகின்ற அளவுக்கு குறைபாடுகள் நீங்கி பூரணமாகின்றன. இந்த வகையில் இதற்கு ஏற்ப சமூக வாழ்வும் முன்னேற்றமடைகின்றது.

இன்னொரு வகையான போதனை, மாற்றங்களும் உட்படாதவை ஒரு வகையில் தெய்வீகப் போதனைகளே பரிபூரணமாக இருந்த போதிலும், அவை பரிணாம வளர்ச்சிக்கும் மேன்மைக்கும் உட்பட்ட போதிலும், அவற்றின் மூலாதாரத்தைப் பொறுத்தமட்டில் அவற்றுக்கு தீர்க்கமான, நியாயமான, மாற்றமுடியாத ஒரு வடிவம் உள்ளன. இந்தப் போதனைகள் சமூகத்தைப் பொதுவாக மட்டுமே பாதிக்கின்றன.

ஆகவே இந்தக் கருத்துக்களும், போதனைகளும் சஞசலமின்றி நிலைத்திருக்குமானால், அது சமூகத்தை அதன் பரிமான வளர்ச்சியில்ருந்து தடுக்காது. நிலையான பொது சட்டங்கள் பல சமூக முன்னேற்றத்துக்கு தடையின்றி இருப்பதை நாம் அவதானிக்கலாம். உதாரணத்துக்கு மனிதன் தனது ஆயளைக் காப்பாற்றிக் கொள்ள உழகை;க வேண்டும் என்பது எல்லா மனிதர்களுக்கும் அவசியமான பொதுவிதியாகும்;. இன்னொரு உதாரணம், ஒரு செயல் ஒரு நன்மையைப் பெற்றுக் கொள்வதற்காகவே இருக்க வேண்டும் மேலும் இன்னொன்று, ஒரு மனிதன் சமூகத்தில் வாழ வேண்டியது அவசியம் என்பதாகும். அல்லது பிரபஞ்சம் உண்மையிலேயே இருசக்கின்றது அது கற்பனையோ, மாயையோ அல்ல என்று நாம் கூறலாம்: அலல்லது மனிதனுக்கு அங்கங்கள் உண்டு, சக்திகளும் உபாயஙகளும் உள்ளன. அல்லது ஏனைய நிலையான கருத்துக்களிலும் போதனைகளிலும் அவற்றின் நிலையான தன்மையும், தேக்கமற்றதன்மையும், சமூகத்தின் உறுதியையும் மந்தமற்ற நிலைமையினையும் பாதிப்பதில்லை. நிலையான சமய போதனைகள் ஒரே வகையினைச் சார்ந்தவை. ஊதாரணத்துக்கு நாம் இவ்வாறு கூறலாம். பிரபஞ்சத்துக்கு ஒரு இறைவனே இருக்கின்றான். சந்தோஷத்தின் எல்லா வழிமுறைகளையும் உள்ளடக்கிய தெய்வீகப் போதனையே இறைவன் மக்களுக்கு அனுப்பியுள்ளான். இது நபித்துவத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இறைவன் ஒரு தினத்தில் எல்லா படைப்பினங்களையும் அவற்றின் செயல்களுக்காக கணக்குக் கேட்க ஒன்று திரட்டுவான்.

இஸ்லாம் அதன் சமூகத்தை அமைத்;து, அதன் எல்லா விடயங்களிலும் பாதுகாப்பினை அமைத்திருப்பதும் இந்த ஒரு வார்த்தையில் தான். இந்தச் சொல்லில் மறுப்பும் உறுதி மொழியும் வெளிப்படுமானால், மேலும் சாதக பாதகமான கருத்துக்கள் மோதிக் கொண்டு அதன் பெறுபேறு மூன்றாவது கோட்பாடு ஒன்றின் மூலம் உறுவானால் அதன் விளைவு சமூகத்தில் அழிவாகவே இருக்கும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next