இஸ்லாத்தில் சமூக உறவுகள்.ஆனால் இந்த அனுமானம் தவறானது என்பதை முன்னைய விளக்கங்கள் காட்டுகின்றன. வேதத்தையும் மரபினையும் படிக்கின்ற ஒரு விவேகமிக்க விவாதக்காரருக்கு, அதிலும் குறிப்பாக நபியவர்களின் பண்பினைப் படிக்கின்றவருக்;கு மேற் கூறிய அனுமானம் பிழையானது என்பதற்கு மேலதிக அத்தாட்சிகளோ காரணங்களோ தேவையில்லை.

மேலும் இத்தகைய ஒரு கூற்று ஏகதெய்வக் கொள்கையையுதம், சமயக் கோட்பாடிலிருந்து உரிய ஒழுக்கத்தினையும் நீக்கி அதன் தொடர்ச்சியாக, ஏக தெய்வக் கோட்பாட்டான சமய இலக்கினை, உலக வாழ்க்கையின் மகிழ்ச்சி எனக் கருதும் குடியியல் இலக்காக உறுமாற்றுகின்றது. இவ்விரு இலக்குகளும் விஷேடமான வேற்றுமை உள்ளவை என்பதும், கொள்கை அடிப்படையிலும் விளக்கத்திலும், முடிவாகவும் இசைவற்றவை என்பதும் ஒரு அறிவுமிக்க வாசகருக்குத் தெளிவாகப் புரியும். 

இஸ்லாத்தில் விடுதலை என்பதன் கருத்து

விடுதலை என்ற சொல் இன்று இருக்கும் அதே கருத்தோடு பல நூற்றாண்டுகளுக்கு முன்பும் பொதுவாக வழக்கத்தில் இருந்த ஒரு சொல்லாகும். இது புதிப்பிக்கப்படுவதற்கான காரணம் இரண்டு அல்லது மூன்று நூற்றாண்டுகளுக்கு முன் தோன்றிய ஐரோப்பய மறுமலர்ச்சியாகும். ஆனால் இந்த சொல்லின் கருத்து பண்டைய யுகம் முதல் மனித சிந்தனையில் இடம் பிடித்துள்ளதோடு, மணப்பூர்வமான இலட்சியத்தினையும் கொண்டுள்ளது.

படைப்பின் இயற்கைக் கோட்பாட்டிலிருந்து பெரப்பட்ட இக்கருத்து மனிதன் மனோதிடம் கொண்டவன் என்பதைக் குறித்து நிற்கிறது. இந்த சக்தியே மனிதனை இயக்குகிறது.

மனோதிடம் குறையும் போது விவேகம், கிரகிப்பு என்பவற்றிலும் குறைபாட்டை ஏற்படுத்துகின்றது. அதன் மூலம் அவனுடைய மனிதப் பண்புகளும் அழிந்து விடுகின்றன.

ஆனால் மனிதன் ஒரு சமூக ஜீவன் என்றவகையில், அவனுடைய இயல்பான பண்பு, அவனை சமூக வாழ்க்கைக்கு இட்டுச் செல்வதோடு ஒரு தனி நபர் தன்னுடைய மனோதிடத்தையும், செயலையும் மற்றவர்களின் மனோதிடத்தோடும், செயலோடும் கலக்கிவிட வேண்டும் என்று அவனுக்கு கூறுகின்றது. இந்த வகையான செயல்கள் ஒரு மனிதனை சட்டத்தின் முன் பணிவாகவும், அடக்கமாகவும் இருக்க வழிவகுக்கின்றது. அது மக்களின் மனோதிடத்துக்கும், செயலுக்கும் வரையறைகளை விதித்து, மனோதிடங்களையும், செயல்களையும் ஒழுங்குபடுத்துகின்றது. ஆகவே மனோதிடத்துக்கும், செயலுக்கும் முழுமையான சுதந்திரத்தைக் கொடுக்கும் அதே இயல்புதான் அவற்றின் மீது வரையறைகளையும் மேலும் ஆரம்ப விடுதலையையும் கட்டுப்படுத்துகின்றது.

தற்கால குடியியல் சட்டங்கள் அவற்றின் கட்டளைகளை உலகாயத நலன்களின் அடிப்படையில் கொண்டுள்ளன. என்பதை வாசகர் அறிவர். சுமயப் போதனைகளில் இருந்து நாடுகளை விடுவிப்பதே இதன் பெறுபேராகின்றது. சட்டத்துக்குப் புறம்பாக அவர்கள் விரும்புகின்ற எந்த உலகாயத வஸ்தினையும் தெரிவு செய்ய விடுகின்றது. இந்த எல்லா வரம்பு, எல்லையிலும் மக்களுக்கு விடுதலையும், சுதந்திரமும் உண்டு. மேலும் இதுவே நாகரிகத்தின் பார்வையில் விடுதலை என்ற சொல்லின் கருத்தாகும்.

ஆனால், இஸ்லாம் ஏற்கனவே விளக்கியது போல முதலாவது, அதன் சட்டங்களுக்கான அத்திவாரத்தை ஏக தெய்வக் கொள்கையின் அடிப்படையில் அமைத்துள்ளது. இரண்டாவதாக உயர் ஒழுக்கங்களின் அடிப்படையிலும் அதற்கடுத்து சிறிய, பெரிய தனி மனிதர்களிலும் எல்லா வகையான சமூகக் காரியங்களிலும் கவனம் செலுத்துகின்றது. ஆகவே மனிதனோடு தொடர்பற்ற, அல்லது அவன் தொடர்புபடாத ஒரு விடயம் இல்லை என்றாகின்றது. இஸ்லாமியச் சட்டங்களோ அல்லது அவற்றின் அடிச்சுவடுகளோ வெளிப்படாத ஒரு நிலையைத் தவிர மனிதன் தொடர்பு படாத ஒன்றில்லை என்ற நிலையே இருக்கின்றது. இவ்வாராக விடுதலைக்கு அதன் முந்திய கருத்தில், மக்களின் மனோதிடத்திலும், செயலிலும் எவ்வித இடமும் இல்லை.

வுணக்க எல்லையில் இருந்து, இவை எல்லாவற்றிலும் சுதந்திரம் அடைந்த மனிதன் ஏன் இறைவன் அல்லாத ஏனையவற்றுக்கு சேவகம் புரிய வேண்டும்? இது ஒரே ஒரு வார்த்தை தான். ஆனால் ஒருவர் இஸ்லாமிய முறைகள் மரபுகள் என்பன பற்றி ஆழமாகச் சிந்தித்தால், மேலும் சிபாரிசு செய்யப்பட்டுள்ளதும், ஸ்தாபிக்கப்பட்டதுமான நடைமுறை வழிகள் பற்றியும் தனிநபருக்கும், சமூக வர்க்கங்களுக்கும் ;இடையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளவை பற்றியும் ஆதிக்கம் செலுத்துகின்ற மனோபாவங்களுடனும், நாகரிக சமூகங்களின் ஒழுங்கீனங்களுடன் தனிப்பட்டவர்களுக்கும் அவர்களின் வர்க்கங்களுக்கும் இடையிலான உறவுகளையும் சேர்ந்து இஸ்லாமிய பாதையுடன் ஒப்பிட்டுப்பார்த்தால், பலமிக்க நாடுகளுக்கும், பலவீனமான நாடுகளுக்கும் இடையிலான உறவினை ஒப்பட்டுப் பார்த்தால், நம்பிக்கையின், சுதந்திரம் என்ற கூற்றின் விசாலமான கருத்து இறைவன் அல்லாத வற்றை வணங்கும் வரையறையில் சுதந்திரம் என்பதே, என்ற விடயத்தை அவரால் புரிந்து கொள்ள முடியும். கட்டளைகளின் கண்ணோட்டத்திலும் கூட இஸ்லாத்தில் நியாயமான முறையில் பாடுபட்டு சம்பாதித்த வாழ்க்கை வசதிகளையும், நவீனத்தையும் இறைவன் அனுமதித்துள்ளான். ஆனால் அவற்றுள் மித மிஞ்சிய தொலைவுக்கு செல்லக் கூடாது.

இந்த தலைப்பிலான சில விளக்கவுரையாளர்களும், விவாதங்களில் ஈடுபடுவோரும் இஸ்லாத்தில் நம்பிக்கை சுதந்திரம் இருக்கின்றது என்பதை நிரூபிக்க மிகக் கடினமாக முயன்றுள்ளனர். மேலும் அவர்கள் மார்க்கத்தில் பொறுப்பில்லை என்ற வசனத்திலேயே பெரும்பாலும் தங்கியுள்ளனர். அல்மீஸானின் இரண்டாவது தொகுதியைப் புரட்டுவதன் மூலம் வாசகருக்கு இந்த வசனத்தின் மிக ஆழமான கருத்தினையும், மதிப்பீட்டினையும் உணர்ந்து கொள்ளலாம். இங்கு நாம் கூறக் கூடியது என்னவெனில் நாம் தெளிவுபடுத்திய ஏக தெய்வக் கொள்கையே எல்லா இஸ்லாமிய சட்டங்களினதும் அடிப்படையாகும் என்பதே.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next