இஸ்லாத்தில் சமூக உறவுகள்.00- ஐக்கியம் பரஸ்பர விசுவாசம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு சமூகத்தின் ஆன்மீக உலகாயத நலன்களையும் பாதுகாப்பையும் பேணும் வகையில் இஸ்லாமிய சமூகம் ஒன்றை அமைப்பதற்கான அறிவுறுத்தல்கள் . 49:10 ,8:46 , 5:2 , 3:104 மேலும் பல..

தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இஸ்லாத்தின் கண்ணியம்

தெய்வீக இயக்கம் முதலில் பல அடிப்படையான பகுதிகளை உருவாக்குகின்றது. அவை ஒவ்வொன்றும் குறிப்பிட்ட சில பண்புகளைக் கொண்டுள்ளன. பின்னர் அவை அவற்றின் எல்லா வேறுபாடுகளையும் மீறி ஒன்றினைகின்றன. அப்போது அவை அவற்றின் தனிப்பட்ட தன்மைக்கும், தனித்தனியான பாவனைக்கும் மேலதிகமான புதிய பயன்பாடுகளை உண்டாக்குகின்றன.

உதாரணமாக, ஒரு மனிதனுக்கு பல்வேறு அங்கங்களும், அவையங்களும் சக்திகளும் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான ஆத்மீக, உலக பயன்பாடுகளை கொண்டுள்ளன. சிறு பகுதிகளைக் கொண்ட ஒரு பாரமான பொருளைப் போல அவை ஒண்றினைக்கப்பட்டு வலிமையான பாரிய சக்தியினை உருவாக்க முடியும். அததுடன் அது ஒரு ஒரு குறிப்பிட்டதிக்கினை நோக்கி நகரக் கூடிய சக்தி உள்ளதாவும் அமைகின்றது.;

அவை இணைவதற்கு மறுக்கவும் கூடும். அவை பிரிந்திருப்பதையும், வித்தியாசத்தையும் பாதுகாக்கவும் கூடும். காதையும், கண்ணையும் போல கேட்டலும், பார்வையும், மனோதிடமும் இச்சையும் போல ஒவ்வொன்றும் தனித்தனியான செயற்பாட்டினைக் கொண்டு தனியாகவே செயற்படுகின்றன. ஆனால் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் அவை எல்லாம் ஐக்கியமாகத் தொடுக்கப்படும் போது மனிதன் என்ற புதிய ஒரு அலகின் மூலம் அவை ஆளப்படுகின்றன. மேலும் எல்லா சக்திகளின் மீதுமான இதே ஆதிக்கம் எந்த ஒரு பகுதியும் தன்னகத்தே கொண்டிராத நன்மைகளை உருவாக்குகின்றது. இந்த நன்மைகள் ஆன்மீக, உலகாயத ரீதியாக எண்ணிலடங்காதவை. ஆவற்றின் ஒற்றுமை அதிசயிக்கத்தக்க வகையிலான பிரயோசனங்களையும், நலன்களையும் கொண்டிருப்பது மிகவும் முக்கியமான ஒரு நன்மையாகும. தாயின் வயிற்றிலிருக்கும் சிசு தனது அபிவிருத்தியையும் வளர்ச்சியையும் பூர்த்தி செய்ததும், அது தன்னிலிருந்து ஒரு பகுதியை பிரிந்து, மூலதார வஸ்துவினால் செய்யக் கூடிய மனோரீதியான, உலகாயித காரியங்களை எல்லாம் செய்யக் கூடிய இன்னொரு பரிபூரனமா ஜீவனைத் தயாரிக்கக் கூடியதாக உள்ளது. ஆகவே மனித இனம் என்பது அதன் பல்லேறு வகைகளையும் மீறி ஒன்றாகவே உள்ளது என்ற முடிவுக்கு நாம் வருகின்றோம். மனிதன் ஒன்றே, ஒரு இனமும் கூட தனிப்பட்ட நபர்களின் செயற்பாடுகள் எண்ணிலடங்காதவை, ஆனால் அவற்றின் வகைகளில் ஒத்த தன்மையைக் காணலாம்.

இந்த செயற்பாடுகள் எல்லாம் ஒன்றிணைந்து ஒரு தொடர்பினையும் உறவினையும் உருவாக்குகின்றன. தண்ணீரைப் பிரித்து பல பாத்திரங்களில் வடிக்கலாம். இந்த முறையில் எண்ணிக்கைகள் அதிகரிக்கலாம். ஆனால் எல்லாம் ஒரே வகையின. அவற்றின் இயல்பும் ஒன்றாகவே இருக்கின்றது. தண்ணீர் எல்லாம் ஒரே இடத்தில் சேறுமானால் அவற்றின் சக்தி மிகவும் வலுவானதாக இருக்கும்.

மனிதர்களுக்கு அறிவூட்டுவதிலும், மகிழ்ச்சியை நோக்கி அவர்களை வழி நடத்துவதிலும, இந்த உண்மையின் மீது, இஸ்லாம் மிகக் கூடிய சிரத்தைக் காட்டியுள்ளது. அதாவது மனிதன் என்பவன் சட்டங்களுக்கு கட்டுப்பட்ட ஒரு தனிப்பிரவியாகும். (எல்லா சமூகங்களுக்கும் மரணம் உண்டு 7:34, எல்லா வமூகங்களுக்கு கேள்வி கணக்கு உண்டு அத்தியாயம் 45;:28) இஸ்லாம் ஒரு போதும் தனி மனிதனுக்காக சட்டங்களை ஸ்தாபிக்கவில்லை.

ஒரு தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையில் நிலவுகின்ற இந்த உண்மையான உறவு, சமூகத்தில் ஒரு வித்தியாசமான தனி மனிதனை உருவாக்குகின்றது. தனிப்பட்டவர்கள் தங்களது எல்லா சக்திகளையும், பண்புகளையும் கொண்டு சமூகம் நிலைத்திருப்பதற்காக உழகை;கின்றார்கள். இதை ஒத்த சக்திகளும், பண்புகளும் அந்த சமூகத்திலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

ஆகவே குர்ஆன் ஒரு மனிதனி;ன் மரணத்தில், புணித வேதத்தில், விவேகத்தில் புரிந்துணர்வில், செயற்பாட்டின், பக்தியில, பாவத்தில் நம்பிக்கை கொள்வதை நீங்கள் காணலாம். அத்தியாயங்கள் 3:95, 25:54,49:13

இவ்வாராக குர்ஆன் தனிப்பட்டவர்களின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்தியிருப்பதை நாம் உணர்கின்றோம். அது நாடுகளின் வரலாற்றிலும் சிரத்தை காட்டியுள்ளது. குர்ஆனின் இந்த விஷேட சிரத்தை, வரலாறு என்பது பிரபல மனிதர்களினதும, அரசர்களினதும் நடவடிக்கைகளைத் தவிர வேறு எதனையும் கொண்டிராத ஒரு கால கட்டத்திலும், வரலாற்று ஆய்வாளர்களுக்கு சமூகங்களினதும் நாடுகளினதும் வரலாற்றில் எவ்வித அக்கறையும் இல்லாத ஒரு காலகட்டத்தில் செலுத்தப்பட்டுள்ளது, எவ்வாறாயினும், குர்ஆனுக்குப் பின் மசூதி, இப்னு கல்தூண் போன்ற சில வரலாற்றாய்வாளர்கள் இந்த விடயத்தில் ஒரு குறிப்பிட்ட எல்லைவரைக்கும் வரலாற்றில் அன்மைய மாற்றங்கள் நிகழும் வரைக்கும், மேலும் அது நாடுகளுக்கான விவரணத்தில் தனிப்பட்டவர்களின் சுயசரிதையாக உருமாற்றப்படும் வரைக்கும் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டனர்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next