இஸ்லாத்தில் சமூக உறவுகள்.உண்மையைப் பராமரிப்பதிலும், ஆதரிப்பதிலும் பலவீனத்தையும், தாமதத்தையும் காட்ட நினைக்கும் அவரே எதிரியோடு சண்டையிட மறுத்து, அவர்களோடு வஞசனையாக உரவாட நினைப்பவரே இந்தச் சாட்டினைக் கூறுகின்றார். காலம் அவரைப் பார்த்து சிரிக்கும். மேலும் அவரை ஒரு மத்திய கால ஞாபகச் சின்னமாகவோ அல்லது புராதனக் கதைகளை வழபடுத்தும் யுகத்துக்கு உரியவராகவோ தான் காலம் அவரைக் கருதும்.

ஆகவே சரியான முடிவு, எல்லா செயல்களும், சாதகமானதாயினும் சரி, பாதகமானதாயினும் சரி இது இறைவனுக்கு மட்டுமே உரியதாகவும், அவனுக்கே அர்ப்பணிப்பதாகவும் இருக்க வேண்டும். மேலும் அவனால் வேண்டப்படும் உண்மையைப் பின்பற்றுவதாக இருக்க வேண்டும். இஸராத்தின் சிறப்பான படிப்பினைகள் மக்களை நபியவர்களிடம் வந்து தங்களது குற்றங்களையும், பாவங்களையும் ஏற்றுக் கொண்டு மன்னிப்புக் கோரச் செய்தது. மேலும் அவர்கள் மீது தணிக்கப்பட்ட வரையறைகளின் கசப்பினைச் சுவைக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். அது மரணமாயினும் சரி, கசையடியாயினும் சரி, அப்போதுதான் இறைவன் அவர்களை மன்னிப்பான். அவர்களுக்கு தங்களது பாவ அழுக்குகளில் இருந்தும், குற்றக்கரைகளில் இருந்தும் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருந்தது. ஒரு மனிதன் கடந்தகால நினைவுகளைப் பற்றி ஆழமாக சிந்தித்தால், சமயக் கருத்துக்கள் மக்களின் சிந்தனைகளில் எந்தளவுக்கு வியக்கத்தக்க செல்வாக்கினைக் கொண்டிருந்தன என்பதை அவனால் உணர முடியும். சமயக் கருத்துக்கள் மக்களுக்கு அவர்கள் விலைமதிப்பற்றதாகக் கருதி விவகாரங்களில் தன்னலம் இன்மையையும், பரந்த மனப்பான்மையையும் காட்ட உதவின. மேலும் அதனை அவர்கள் பெரிதும் விரும்பினர்.

முக்களுக்கு வாழ்க்கைய விட விருப்பமானது ஏதாவது இருப்பதாக நீங்கள் நினைக்கின்றீர்களா? அவர்கள் அத்தகைய வாழ்க்கையைக் கூட தியாகம் செய்யத் தயாராக இருந்தனர்.

ஒருவர் மற்றவர்களிடம் துரத்தப்படும் போது ஏன் இறைவனிடம் இழப்பீட்டை எதிர்பார்க்க வேண்டும்?

மனிதனுடைய சமூக வாழ்வின் பொதுவான நோக்கமாக மறு உலகின் வெகுமதி அமைக்கப் பட்டிருக்கலாம் என யாராவது கூறலாம். இது மனிதனுடைய இயற்கையான கட்டமைப்பில் தங்கியிருக்கும் உலக வாழ்வின் ஏனைய நோக்கங்கள் அழித்து விடக் கூடியவை. மேலும் இந்த நோக்கங்கள் அழிக்கப்பட்டால், அது சமூக ஒழுங்கினைக் குழப்பும். மேலும் அது சமூக வாழ்வை கற்கால வாழ்க்கை நிலைக்கு தரம் குரைத்துவிடும். இயல்பான பல குறிக்கோள்களில் ஒன்றில் மட்டும் கவனம் செலுத்தி ஏனையவற்றை எவ்வாறு மனிதனால் நிராகரிக்க முடியும்? இது முரண்பாடாக அன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? ஆனால் இந்த அனுமானம் தெய்வீக ஞானத்தினதும், குர்ஆனின் போதனைகளால் வெளியாக்கப்பட்ட அற்புதங்களினதும் அறியாமையின் தொடர்ச்சியால் ஏற்பட்ட அனுமானமே.

இஸ்லாம் தனது தெய்வீக சட்டங்களை படைப்பின் அடிப்படையிலேயே அமைத்துள்ளது. மனிதனை உயிர் வாழ வைப்பதில் படைப்புக்களின் உண்மையான காரணிகள் இணைந்துள்ளன. இந்த உபாயங்கள், மக்களை அவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள வாழ்க்கையின் இலக்கினை நோக்கி முறையாக நெரிப்படுத்துகின்றன. ஆகவே மனிதன் தன்னுடைய வாழ்க்கையை, அர்ப்பணித்தல் எனும் வட்டத்துக்குள் ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டியது கடமையாகின்றது. மேலும் இந்தக் காரணிகள், அவனை விரும்பச் செய்யும் கோட்பாடுகளைப் பின்பற்றுவதை தெரிவு செய்யவும் வேண்டும். மொத்தத்தில் இந்தக் காரணிகளோடு மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கும் இந்தக் காரணிகளுக்கும் எவ்வித மாற்றமும் இன்றி அழிவுகளையும், துரதிஷ்டங்களையும் தவிர்த்துக் கொள்கின்றான். ஒருவனுடைய மனம் பிழையான ஓர் அனுமானத்தால் தவராக வழிநடத்தப்படுமானால் இந்தக் கூற்று இஸலாமிய மார்க்கமே என்பதை அவன் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இதில் முக்கியமானது என்னவெனில், எல்லாக் காரணிகளுக்கும் மேலான ஒரு காரணி இருக்கின்றது. அதுவே இந்தக் காரணிகளை உருவாக்கியது. மேலும் சிறிது பெரிய எல்லாவற்றையும் ஒழுங்குபடுத்தியதும் அதுவே.

இந்த தனித்துவமான காரணியானது, அதிபுனிதமிக்க இறைவனாகும். ஆவனே எல்லாக் காரணிகளுக்கும் மேலான முற்றிலும் பூரணமான காரணி. ஏனவே இறைவன் முன்னிலையில் அவனுக்கு அடிபணிந்து நிற்பது மனிதனின் கடமையாகின்றது. முஸ்லிமுக்குரிய ஒரே ஒரு மார்க்கம் இஸ்லாமே என்று கூறும் போதும், அது இந்தக் கருத்தினையே கொடுக்கின்றது.

மேலே சொன்ன விடயத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தித்தால் ஏக தெய்வக் கொள்கை இறைவனிடம் சரனடைதல், வாழ்க்கையை இறைவனை நோக்கித் திருப்புதல் என்பன உலகாயதக் காரணிகளுக்கு எதிர்ப்புடையதாக மட்டுமன்றி அவை எல்லாவற்றோடும் இசைந்ததாக இருப்பதும் தெளிவாகின்றது. ஓர் இறைக் கோட்பாட்டாளர் ஓர் அஞ்ஞானியாகவோ, அறிவீனராகவோ இல்லாமல் எல்லா உரிமையுள்ள மனிதர்களுக்கும் அவர்களின் உரிமையை வழங்கி உலகாயத காரணிகளுக்கும் அவற்றுக்கு உரிய இடத்தை அளித்து இறைவனின் கட்டளைகளுக்கு இணங்க அவற்றின் மீது கவனம் செலுத்துகின்றார்.

இவ்வாராக ஒரு முஸ்லிமுக்கு பல உலகக் குறிக்கோள்களும், இன்னும் பல உலக இலட்சியங்களும் உள்ளன. அவை உலகாயத, ஆத்மீகக் குறிக்கோள்களை உடையவை. ஆனால் அவன் உலகாயத அலட்சியங்களை நோக்கி லேதிகமான முயற்சிகளை மேற்கொள்வதில்லை. ஆக! இஸ்லாம் மகத்தான இறைவனை வணங்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுப்பதை நாம் காணுகின்றோம். மேலும் ஏனையவற்றிலிருந்து விலகி அவன் பக்கம் திரும்பி, அவன் மீது பக்தி செலுத்தி, அவனைத்தவிர ஏனைய எல்லாக் காரணிகளையும் இலக்குகளையும் நிராகரித்து, வாழ்க்கையின் சட்டங்களைப் பின்பற்றி நடக்குமாறு இஸ்லாம் கட்டளையிடுகிறது.

அப்போது இஸ்லாமிய சமூகத்தின் உறுப்பினர்கள் இன்மையிலும் மறுமையிலும் உண்மையான சந்தோஷத்தை அடைந்து கொள்கிறார்கள் என்பதும் தெளிவாகின்றது. மேலும் அவர்களின் இறுதி இலக்கான சர்வ வல்லமையும், அதிகாரமும் கொண்ட இறைவனின் பக்கம் திரும்புவது என்பது, அவர்களுடைய வாழ்வின் ஏனைய குறிக்கோள்களோடு முரண்பாடு உடையதாகவும் இல்லை. ஆகவே உலக குறிக்கோள்கள் சட்ட பூர்வமானவையாக இருப்பின் இரண்டு குறிக்கோள்களுமே இசைவுடையதாகவும் இருக்கும்.

இந்த விடயத்தைப் பற்றி கலந்துரையாடிய பல சமூகவியலாளர்கள் சமூக நீதியை நிலை நாட்டுவதே சமயத்தின் யதார்த்தமும், அதன் பிரதான குறிக்கோள் ஆகும் எனவும் தொழுகை, நோன்பு போன்ற பக்திமிக்க செயல்கள் அதன் துணைச் செயல்கள் என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். எனவே யாராவது சமூக நீதிக்காகப் பாடுபட்டால் அவர், விசுவாசம் அற்றவராகவும் பக்திமிக்க செயல்களில் ஈடுபடாதிருந்தாலும் கூட அவர் சமயப்பற்றுள்ளவரே.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next