இஸ்லாத்தில் சமூக உறவுகள்.ஆனால் நியாயவாத தர்க்கம் அவனை உண்மையைப் பின்பற்றுமாறு கூறுகிறது. முனிதனுக்கு நன்மை பயக்கக்; கூடிய மிகச் சிறந்த சாதனம் உண்மையைப் பின்பற்றுவதே என சக்தி மிக்க நியாயவாததர்க்கம் கூறுகிறது. ஆது உலகாயத நன்மையைக் கொண்டு வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி இறைவனுடன் இருப்பதே மிகச் சிறந்ததும் நிரந்தரமானதும் என நியாயம் கூறுகிறது.

நாம் உங்களுக்கு இரண்டு உதாரணங்களைத் தருகின்றோம். ஒன்று நியாயவாதம் மற்றது உணர்ச்சி ரீதியானது. இரண்டு உதாரணங்களுமே யுத்தத்தைப் பற்றியது.

உளப்பற்றோடு சம்பந்தப்பட்ட அன்தெரா என்ற அரபி தன்னை ஆறதல் படுத்திக் கொள்ளும் வகையில் கூறுகின்றார், நான் யுத்தத்தால் முழுமையாக ஒடுங்கிப் போய் கவலைப்பட்ட போதெல்லாம், எனக்கு நானே கூறிக்கொள்வேன்: உன்னுடைய நிலையை வைத்துக் கொள். ஓன்றில் நீ கொல்லப்படுவாய் அப்படி கொல்லப்பட்டால் அவர்கள் உன்னைப் புகழ்வார்கள். அல்லது நீ கொல்லுவாய், அப்போது நீ பதிலளிப்பாய் இவ்வாராக அவர் கூற வேண்டும். யுத்தத்தின் சந்தடியில் என்னுடைய தன்னிpலை விகாரம் அடையும் போதெல்லாம், உறுதியாக இருந்து கொள்ளுமாறு என்னை நானே அறிவுறுத்திக் கொள்வேன், நான் மரணத்தால் என்னுடைய உறுதிக்காகவும், விட்டுவிட்டு ஓடவதை தவிர்த்தமைக்காகவும் நான் மக்கலால் பெருமையாகப் பேசப்படுவேன். மேலும் நான் எதிரியைக் கொலை செய்தால்

அப்போது என்னுடைய விருப்பத்தை அடைந்து கொண்டதாக ஆறதலடைவேன். மேலும் இவ்விரு நிலைகளிலும் உண்மை நடத்தை மேனம்பட்டதாகும். இது ஒரு வகையான தர்க்கம்.

மற்றத்தர்க்கம் முழுமையாக நியாயத்தைக் அடிப்படையாகக் கொண்டது. அது குர்ஆனில் பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: இறைவனால் விதிக்கப்பட்டவை அன்றி வேறு எதுவும் உம்மை வந்து சேர்வதில்லை. இறைவனே எமது எஜமானும், பாதுகாவலனும் ஆவான். நம்பிக்கையாளர்கள் இறைவனில் தங்கியிருக்க வேண்டும். (எதிரிகளுக்கு) கூறுங்கள். எங்களுக்கு கிடைக்கக் கூடிய இரண்டு நன்மைகளைத் தவிர நீங்கள் வேறு எதையாவது எதிர்பார்க்கின்றீர்களா? ஒன்றில் நாங்கள் கொன்றுவிட்டு சுவர்க்கம் செல்வோம். அல்லது கொல்லப்பட்டு சுவர்க்கம் செல்வோம். ஆனால் இறைவன் அவனாகவோ அல்லது எங்கள் மூலமாகவோஉங்களுக்கு தன்டனையை அனுப்ப வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். ஆகவே நீங்கள் காத்திருக்கலாம் நாங்களும் காத்திருப்போம்.

இந்த தர்க்கவியல் கூறுகின்றது: எங்களுக்கு வழிகாட்டுவதும் உதவுகின்ற விடயமும் இறைவனின் கரங்களிலேயே இருக்கின்றன. எங்களுக்கு வரக் கூடிய நன்மையான, அல்லது தீமையான காரியங்களில் நாம் ஆத்மீக வெகுமதியைத் தவிர வேறு எதனையும் எதிர் பார்க்கவில்லை. அந்த வெகுமதி இஸ்லாத்துக்கு மாற்றக் கூடிய அவனுடைய (இறைவனுடைய) மாற்றத்துக்கு கட்டுப்பட்ட வெகுமதியாக இருக்க வேண்டும். இறைவன் கூறுகின்றான்: இறைவனுடைய பாதையில் போராடுகின்ற முஸ்லிம் யுத்த வீரர்கள் அனுபவிக்கின்ற எல்லா வகையான இன்னல்களுக்கும், கஷ்டங்களுக்கும் அல்லது இறை நம்பிக்கை அற்றவர்களின் வசதியீனத்தை தூண்டுவதற்காக எடுக்கின்ற எல்லா நடவடிக்கைகளுக்கும் நன்மை என்ற வார்தட்தை அவர்களுடைய கணக்கில் வரவு வைக்கப்படுகின்றது. நன்மை செய்கிரவரின் வெகுமதியை இறைவன் கொள்ளையடித்து விடுவதில்லை. ஒரு சிறு விடமேனும் அதற்குரிய வெகுமதியைப் பெறாமல் இருந்து விடுவதுமில்லை, அவற்றுக்குரிய வெகுமதிகள் எல்லா வழியிலும் கிpடைத்துவிடுகின்றன.

இந்த மிகுதியான வெகுமதிகள் அவர்கள் செய்த நல்ல காரியங்களுக்காக இறைவனால் அருளப்படுகின்றன. இப்போது இதுதான் விடயம். நீங்கள் எங்களைக் கொலை செய்தால் அல்லது எமக்கு பிரச்சனைகளையும் கஷ்டங்களையும் உருவாக்கினால், நாம் அவனிடம் இருந்து மிகப் பெரிய வெகுமதியையும், சந்தோசமான முடிவினையும் பெற்றுக் கொள்வோம். மேலும் நாம் உங்களைக் கொலை செய்தால் அல்லது உங்களிடமிருந்து போரில் கைப்பற்றிய பொருள்களைப் பெற்றுக் கொண்டால், மீண்டும் அவனிடமிருந்து மிகப் பெரிய வெகுமதியையும், சந்தோசமான முடிவினையும் நாம் பெற்றுக் கொள்வோம். இந்த உலகில் நாம் எதிரியை வெற்றி கொண்டு, சந்தோசத்தை அடைந்து கொள்வோம். அது மற்றவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தும். எங்களோடு சண்டையிடும் நீங்கள் இந்த விடயத்தில் எமக்கு விலைமதிப்பற்ற பரிசுப் பொருளை கொண்டு வந்துள்ளீர்கள். மேலும் நாங்கள் இந்தப் பரிசுப் பொருளை பெற்றுக் கொள்வதைத்தவிர வேறு எதனையும் நீங்கள் எதிர்பார்க்க முடியாது.

இந்த பரிசுப் பொருள் பின்வரும் இரண்டில் இன்றாக இருக்கலாம்: ஒன்று இரைவனுடைய பாதையில் உயிர்த்தியாகமும் சாசுவதமான சந்தோஷமும் அல்லது வெற்றியும் மீண்டும் முடிவற்ற மகிழ்ச்சியும் ஆகவே இவ்விரண்டு நிலையிலும் நாம் அதிஷ்டசாலிகளும், மகிழ்ச்சிக்கு உரியவர்களும் தான். ஆனால் நீங்கள் உங்களின் கருத்துப்படி ஒரே ஒரு வழியில் தான் மகிழ்ச்சியை அடைய முடியும். அது நீங்கள் உங்களுக்கு சாதகமான முறையில் எமக்கு இழப்புக்களை ஏற்படுத்தி யுத்தத்தில் வெற்றிகண்டு முடிப்பதாகும். ஆகவே நாம் எமக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தக் கூடிய ஒன்றுக்காகக் காத்திருக்கின்றோம். இவை தான் இருவகையான தர்க்கவியலும்: ஒன்று உறுதியான உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. உறுதியான ஒருநபர் இரண்டு நன்மைகளைப் பெற்று கொள்வதாக அது நம்புகின்றது. அவையாவன ஒன்றில் அவன் மக்களால் புகழப்படுகின்றான் அல்லது எதிரிகளிடம் இருந்து அவன் விடுபடுகின்றான்.

ஒரு யத்தவீரன் தன்னை மரண ஆபத்தில் ஈடுபடுத்திக் கொள்ளும்போது மட்டும் தான் இந்த நன்மை, ஆனால் இத்தகைய ஒரு இலாபம் இல்லாவிட்டால். மக்கள் பாராட்டத் தவறிவிட்ட ஒரு நிலையில், அல்லது ஒரு புனித யுத்தம் அவர்களுக்குப் பெருமதியற்றதான ஒரு நிலையில், அல்லது அவர்களுக்கு சேவையும், தேசத்துரோகமும் ஒன்றான ஒரு நிலையில் அல்லது அத்தகைய ஒரு சேவை அவர்களுக்கு தெளிவாகத் தெரியாத ஒரு நிலையில், அல்லது சேவையையோ, தேசத்துரொகத்தையோ மக்களால் புரிந்து கொள்ள முடியாத நிலையில் அல்லது எதிரியை அழிப்பதால் ஒருவரின் உணர்வு தணிக்கப்படாத போது. இந்த விடயத்தில் உண்மையும் யதார்த்தமும் மட்டுமே உதவியளிக்கின்றன. இந்த எல்லா விடயங்களிலும் இந்தத் தர்க்கம் உண்மையாகவும், பலவீனமானதாகவும் உள்ளது. இதே விடயங்கள் தான் எல்லா அடக்குமறைக்கும், தேசத்துரொகத்துக்கும், குற்றங்களுக்குமான பொதுவான உபாயமாகும்.

சுட்டத்தை அலட்சியம் செய்யும் ஒரு தேசத்துரோகி தனக்குத்தானே கூறிக்கொள்கிறார்: மக்கள் சேவைகளுக்கு அதற்குரிய மதிப்பினை அளிப்பதில்லை, ஒரு சேவகனும் தேசத்துரோகியும் அவர்களுக்கு ஒன்றே அல்லது ஒரு தேசத்துரோகி சிறந்தவனாகக் கூட ஆகிவிடுகிறான். ஒவ்வொரு கிளர்ச்சிக்காரனும், குற்றவாளியும் தனக்கு சட்டத்தில் இருந்து தப்பிவிட முடியும் என்றே கருதுகிறான். அவன் மீது அதிகாரம் செலுத்தும் சக்திகளால் அவனைத் தடுத்துவிட முடியாது என்று நினைக்கிறான். ஆகவே, ஒவ்வொருவரும் தமது செயலை இரகசியமாக்குகின்றனர். மேலும் மக்களுக்கு முன் அவர்கள் வித்தியாசமான முகமூடியை அண்ந்து கொள்கின்றனர்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next