இஸ்லாத்தில் சமூக உறவுகள்.இந்த வகையில் ஒரு மனிதன் மற்றவர்களுடைய உரிமையை மீறுவதில் வெற்றியடைந்தால், அவனை பரிசோதிப்பதற்கோ, தண்டிப்பதற்கோ யாருமே எதுவுமே இல்லையெனில், பாவத்தையும் அடக்குமறையையும் புரிவதில் இருந்து அவனை எதுதான் தடுக்கமுடியும்? ஆந்தப்பாவம் பெரிதானதாகவும், விவாதிப்பவர்களுக்கு தப்பான வழியை முன்வைக்கக் கூடிய கற்பனைத் தடைகள் இருந்த போதிலும் இந்த விடயம் உண்மையானதே. உதாரணமாக நாட்டுபற்று, மனிதாபிமானம், நற்பெயர் முதலியன பல்வேறு உணர்வுகளும், உள்ளார்ந்த ஆசைகளும் ஆகும்.

இந்த உணர்வுகள் கல்வியின் மூலம் பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இந்த விடயத்தில் சக்திமிக்க மாற்ற முடியாத ஒரு காரணி குறைபாடாக உள்ளது. ஆகவே இந்த உணர்வுகள் தற்செயலானவையும், சாதாரண நிலையுடையவையும் மட்டுமே. இவற்றின் மறைவினை எதுவும் தடுக்க முடியாது. ஏன் ஒரு மனிதன் மற்றவருக்காக தன்னைத் தியாகம் செய்ய வேண்டியது அவசியமாகின்றது? அப்போதுதான் அவனுடைய மரணத்துக்குப் பின் மற்றவர்

வாழ்க்கையை அனுபவிக்கலாம்? அதே வேளை அவனுடைய கருத்தில் மரணம் என்பது நிச்சயமாக நிர்மூலமாகும். மேலும் அழிவுமாகும். என்னுடைய நல்ல பெயர் நிலைத்திருக்கும். அது மற்றவர்களின் நாக்கில் நிலைத்திருக்கும். மேலும் ஒருவன் தன்னைத் தியாகம் செய்து, தனது வாழ்வு ஒரு முடிவுக்கு வந்த பின் எந்தப் பலனைப் பெற முடியும்? என அவன் கூறலாம். சுரக்கமாகக் கூறின், ஆழமான சிந்தனையும், தெளிவான நோக்குமுடைய மனிதன் ஒருவன், ஒன்றிலிருந்து தன்னையே அபகரித்துக் கொள்ளவில்லை என்பதிலும், அதில் அவன் வெகுமதியையோ, நன்மையையோ அடைந்து கொள்வான் என்பதிலும் சந்தேகம் கொள்ள முடியாது.

மேற் சொன்ன சந்தர்ப்பத்தில், ஒருவர் தன்னுடைய கௌரவம்,நன்மதிப்பு என்பன இந்த உலகத்தில் மட்டும் நிலைத்திருக்கக் கூடியது என கற்பனை பண்ணுவது தவறானதாகும். அது மறு உலகிலும் அவன் அவற்றை வசதியாக அனுபவிக்க வழி வகுக்கின்றது.

முதுவை உட்கொண்ட ஒருவன் போதை நிலையில், செய்கின்ற ஒரு காரியத்தை நிதானமாக இருக்கின்ற வேளையில் செய்யமாட்டான். குடிபோதையில் அவன் ஆச்சரியப்படத்தக்க வகையில் நடந்து கொள்வான். தன்னுடைய கௌரவத்தை இழக்கவும் அவன் தயாராகின்றான். தன்னுடைய செல்வம் உட்பட தன்னுடைய பெறுமதிமிக்க எல்லாவற்றையும் விட்டுக் கொடுக்க அவன் தயாராகின்றான். இந்த மனிதன் குடி போதையில் இருக்கின்றான். அவனிடம் நிதானம் இல்லை. அவன் தனனுடைய செயலை வீரப்பண்புமிக்கதாகவும், ஆண்மைமிக்கதாகவும் கருதுகின்றான். ஆனால் அந்தச் செயல்கள் முட்டால்தனமானதும் பைத்தியக்காரத்தனமானதுமன்றி வேறில்லை.

முனிதன் தனக்காக ஏற்படுத்திக் கொண்ட இவை, அடிப்படையானவையல்ல. அத்துடன் வழி கேட்டையும், தவறுகளையும் தடுக்க முடியாதவை என்று கூறி நாம் முடிக்கின்றோம். நாம் ஏற்கெனவே கூறிய ஏக தெய்வக் கொள்கையைத் தவிர, தவறுகளுக்கு எதிராக மனிதனுக்கு புகழிடம் வழங்கக் கூடியது வேறு எதுவுமே இல்லை. ஆகவே, இஸ்லாம் ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இஸ்லாமிய ஏக தெய்வக் கோட்பாட்டின் ஒரு பகுதியாக ஒழுக்கம் அதன் வழியில் எங்கும் வியாபித்துள்ளது. இதில் ஒரு விடயம் தான் மீள உய்ர்பித்தல்.

இந்த விடயத்தில் அவசியமானது ஒரு மனிதன் நன்மையான காரியங்களுக்கு கீழ்ப்படிந்து தீமைகளைத் தவிர்ப்பதாகும். அதைப்பற்றி எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் தெரிந்திருந்தாலும் சரி, அதற்காகப் பாராட்டப் பட்டாலும் இல்லாவிட்டாலும், அதற்காகப் பலவந்தப்படுத்தப்பட்டாலும் இல்லா விட்டாலும் அது அவரில் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்துவதில்லை. இறைவன் தன்னோடு இருப்பதாக அவன் நம்புகின்றான். அவன் செய்வதை எல்லாம் இறைவன் பார்கின்றான். இறைவன் எல்லாவற்றுக்கும் மேலாக இருந்து அவர்களின் செயல்களை அவதானிக்கின்றான்.

அவனுடைய முன்னைய செயல்களுக்கெல்லாம் பதில் கூற வேண்டிய ஒரு நாள் இருப்பதாக அவன் நம்புகின்றான். நன்மையாயினும் சரி, தீமையாயினும் சரி அதற்குரிய வெகுமதி அவனுக்குக் கிடைக்கும் என அவன் நம்புகின்றான்.

யதார்த்தம் உணமை என்பவற்றின் அடிப்படையிலான இத்தகைய நம்பிக்கையோ, சமூகத்தில் சட்டத்தை நிறைவேற்றுவதற்கும் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாப்பதற்கும் ஒரே வழியாகும். இல்லாவிட்டால் யாராலும் சமூக வாழ்வுக்கும் சட்ட நிறைவேற்றத்துக்கும் உத்தரவாதம் வழங்கமுடியாது.

இருவகையான தர்க்கவியல் நியாயவாத தர்க்கமும், உணர்வு பூர்வமான தர்க்கமும்

மனிதனுடைய புலன்கள் உலக நன்மைகளை நோக்கி அவனை அழைத்து விழிப்படையச் செய்கின்றான். ஒரு காரியம் இலாபத்தில் சம்மந்தப்பட்டு;ள்ளது பற்றி ஒரு மனிதன் உணர்ந்து கொண்டால் அந்த உணர்வு இலாபம் தேடுவதில் ஆழமாகக் கிழர்ந்து எழுகின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next