இஸ்லாத்தில் சமூக உறவுகள்.இன்னும் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்த உலக யுத்தங்களும் மனிதவர்க்கத்தை இன்னும் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மூன்றாவது யுத்தமும் பல நாசங்களையும், அழிவுகளையும் உண்டாக்கி சில தாவரங்களைக் கூட அடியோடு நாசமாக்கியுள்ளது. பெருமை, சுயநலம், பேராசை இவற்றைத் தவிர யுத்தத்துக்கு வேறு காரணிகள் இருக்க முடியுமா?

இவ்விரண்டு சரித்திர ஆதாரங்களில் இருந்தும், சட்டங்களுக்கு அதி உயர்வான ஒழுக்க அடித்தளங்கள் இல்லாத விடத்து, அவற்றின் நிறைவேற்றம், நீடித்த ஆயள் என்பவற்றுக்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை.

நாகரிக சமூகத்தின் சட்டத்திற்கான காரணிகளை இப்போது வாசகர் உணர்ந்திருப்பார். அவர் இஸ்லாமிய சட்டங்களின் அடிப்படையிலும் கவனம் செலுத்த வேண்டும். இஸ்லாம் அதன் சட்டங்களையும் நடை முறை விதிகளையும் ஒழுக்கவியலின் அடிப்படையில் அமைந்துள்ளது. அத்தோடு தூய்மையான ஒழுக்கத்தோடு மக்களை வளர்ப்பதை அது எப்போதும் வலியுறுத்தி வறுகின்றது. நடைமுறையில் உள்ள சட்டங்கள் சிறந்த ஒழுக்கத்தால் உத்தரவாதமளிக்கப்பட்டுள்ளன.

ஒழுக்கம், மனிதனோடு வெளிப்படையாகவும், பொதுவாகவும் தனிப்பட்ட முறையிலும் இணைந்துள்ளது. மேலும் அது ஒழுங்கினை நிலைநாட்டும் பணியை பொலீஸ், அல்லது பொறுப்பு வாய்ந்த வேறு எந்த படையையும் விட சிறப்பாகச் செய்கின்றது.

அந்த நாடுகளில் பொதுக் கல்வி, மக்களுக்கு சிறந்த பண்புகளை ஊட்டும் நோக்கத்தின் அடிப்படையில் உள்ளன என்பதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். மேலும் மக்களை இந்த வழியைப் பின்பற்றுமாறு தூண்டுவதிலும் அது கடினமாக முயன்று வருகின்றது. ஆனால் இந்த முயற்சிகள் அவர்களுள் எந்தப் பலனையும் இல்லாமல் ஆக்கிவிட்டது.

இதற்கு காரணம், அதாவது கெட்ட பண்புகளுக்கான முதலாவது காரணம், உலகாயத வஸ்துக்களில் வரையறைக்கு மீறிய அபகரிப்பும், உலகாயத சிற்றின்பங்களில் மித மிஞ்சிய ஆவலுமேயாகும். சிலர் செல்வம் செறிந்த நிலை, ஓய்வு என்பவற்றின் ஊடாகவும் இன்னும் சிலர் துரதிஷ்டம் உதவியின்மை ஆகியவற்றாலும் தீய பழக்கங்களை நாடுகின்றனர்.

சட்டங்கள் இந்த விடயத்தில் மக்களை முழுமையான சுதந்திரத்தில் விட்டு விட்டன. சுரண்டல்களுக்கும், மகிழ்ச்சிக்கும் சட்டவரையறைகள் கிடையாது. இந்தச் சுதந்திரம் சிலருக்கு செல்வச் செழிப்பை வழங்கி மற்றப் பகுதியை எல்லா விடயங்களிலும் அபகரித்து வருகின்றது. இவ்வாரான நிலையில் ஒழுக்க உயர்வுக்கான அழைப்பும், ஊக்குவிப்பும் இரண்டு முரண்பாடான விவகாரங்களுக்கான அழைப்பாக அன்றி வேறு அர்த்தம் கொண்டதாக இருக்க முடியுமா? சுட்ட ரீதியான சுதந்திரமும், ஒழுக்கத்துக்கான அழைப்பும் இரண்டு முழுமையான எதிர் விடயங்களுக்கான தேவையாகவன்றி வேறு எதுவாக இருக்க முடியும்? மேலும் உங்களுக்குத் தெரியும், அவை சமூக, சிந்தனை உடையவை. ஆனால் அவர்களின் சமூகங்களை சிறிய சமூகங்கள் தொடர்ந்தும் நசுக்கி வருகின்றன. அவர்களின் உரிமைகளை மதித்துவருகின்றன. அவர்களிடம் இருப்பதை எல்லாம் சுரண்டி வருகின்றன.

மேலும் தன்னால் இயன்ற வரைக்கும் அது அவர்கள் மீது அடக்கு முறையை விஸ்தரித்து அவர்களை அடிமைப்படுத்த முயல்கின்றது. இவ்வாரான நிலையில் ஒழுக்கத்துக்கான அழைப்பு ஒரு முரண்பாடான செயலாக இருக்கின்றது. மேலும் இத்தகைய முயற்சி முற்றிலும் பலனற்றதாகும். இரண்டாவதாக, ஒழுக்கம் தொடர்ச்சியானதாகவும், நிலையானதாகவும் இருக்க வேண்டுமானால், பாதுகாப்புக்கும், நிர்வாகத்துக்குமான உத்தரவாதம் அதற்கு அவசியமாகின்றது. இந்தக் கடமையைச் செய்வது ஏக தெய்வக் கொள்கையாகும்.ஏக தெய்வக்கொள்கை என்பது இந்தப் பிரபஞ்சத்துக்கு ஒரே இறைவன்தான் உண்டு என மனிதன் நம்ப வேண்டும். அவனுக்கு பல சிறப்புப் பெயர்கள் இருக்கின்றன, மனிதனுக்கு பரி பூரணத்துவத்தையும், மகிழ்ச்சியையும் அளிப்பதற்காக இறைவன் மனிதனைப் படைத்தான், இறைவன் நன்மையையும், ஒழுக்கத்தையும் விரும்புகின்றான். அவன் தீமையையும் கெட்ட நடத்தையையும் வெறுக்கின்றான். அவன் ஒரு நாளில் எல்லாப் படைப்பிணங்களையும் தீர்க்கமான இருதித்தீர்ப்புக்காக ஒன்று திரட்டி முழுமையான வெகுமதியை அளிப்பான். நன்மைகளுக்கான வெகுமதி நல்லதாகவும், தீமைகளுக்கான தண்டனை மோசமானதாகவும் இருக்கும்.

மீள உய்ர்ப்பித்தலில் நம';பிக்கை இல்லாவிட்டால் பிரதான காரணி இருக்காது. மேலும் எதுவும் தனது இயற்கை மகிழ்வுகளை கட்டுப்படுத்தாது என்பதும் தெளிவாகும்.

முனிதனுடைய இயற்கையான பண்பு அவனின் சொந்த விருப்பத்தையோ சார்ந்திருக்கும். மற்றவர்கள் அதிலிருந்து என்ன நன்மை அடைகிறார்கள் என்பதில் அல்ல. மேலும் அவன் மற்றவர்களுக்காக எதையாவது விரும்பினால், அவனும் கூடவே அதில் இருந்து நன்மைகளை அடைந்து கொள்வான்.இது பற்றி ஆழமாகச் சிந்தியுங்கள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next