இஸ்லாத்தில் சமூக உறவுகள்.சிவில் சட்டங்களில் கபட்டப்பட்ட குறைபாடுகள் அதாவது, நிறைவேற்று அதிகாரத்தால் அவற்றை நிராகரிக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளன அல்லது சட்டங்களை மீறும் மக்டகளின் செயல்களுக்கு நிர்வாகியின் கண்களுக்கு மறைக்கப்படலாம் என்பன போன்ற கண்டனங்கள், இஸ்லாத்திலும் உண்மையானவையே என்றும் மக்கள் மீது அதன் போதனைகளை திணிக்க முடியாத நிலையில் இந்த சமயத்தின் மிகத் தெளிவான அத்தாட்சி பலவீனமடைந்துள்ளது என்றும் அழிக்கப்பட்டுள்ளது என்றும் எமது வாசகர்கள் உரிமைகோரலாம்.

இவர்களுக்கு இந்த பதிலை முன்வைக்கிறோம்: பொதுச் சட்டத்தின் உண்மை அது தெய்வீகமானதாயினும்சரி, மனிதனுடையதாயினும் சரி அது மக்களுடைய மனதிலே பதிவு செய்யப்பட்ட மனோரீதியான தொகுப்புக்களின் வடிவமேயாகும். ஆனால் மனிதன் விரும்புகின்ற அது பின்பற்றக்கூடியதாகவும், உணரக்கூடியதாகவும் ஆகின்றது. மனிதனுடைய விருப்பம் கலகம் செய்யக் கூடியதாக ஆகின்ற போதும, அந்த சட்டங்களை செயற்படுத்த மறுக்கின்ற போதும், சட்டத்தோடு தொடர்பு கொள்ளக் கூடிய எந்தக் காரியமும் தென்படாது.

விடயம் இதுதான்: சட்டத்தை நிறைவேற்றுவதை சாத்தியமாக்கக் கூடிய வகையில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். அப்போதுதான் சட்டம் அதன் சொந்தக் காலில் நிற்க முடியும். சிவில் சட்டத்தின் குறைபாடு இதுதான்

அதாவது அது பெரும்பான்மையினரின் விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்காக அன்றி வேறு நோக்கமும் இதில் இல்லை. இந்த விருப்பய்களைப் பாதுகாப்பது எது என்பதிலும் சிவில் சட்டங்கள் எந்தக் கவனமும் செலுத்தவில்லை.

ஒரு சமூகத்தின் உறுப்பினர்கள் பொறுப்புடனும், பெருந்தன்மையுடனும் வாழ்வதற்காக தமது விருப்பங்களைத் தாங்கி நிற்கின்ற வரைக்கும் சட்டத்தை பராமரிப்பது முதல் ஊழலை அழிப்பது வரைக்குமான தன்னுடைய இலக்கினை அது அடைந்து கொள்ள முடியும். சமூகத் தீமைகளையும், சமூகத்தின் ஒழுக்க மாண்புகள் அழிந்து போகின்ற விடயங்களையும் பொருத்த மட்டில் சட்ட ஆட்சியை அதனால் நிலைநிறுத்த முடியாது.

நிர்வாகத்துக்கு இதனைக் கண்டு பிடித்துக்கொள்ள முடியாத சந்தர்ப்பங்களில் இரகசிய குற்றங்கள் போன்ற சந்தர்ப்பத்தில் அல்லது தனது ஆதிக்கத்தை அவற்றின் மீது விஸ்தரிக்க முடியாத நிலையில் அதாவது தனது செல்வாக்குக்;கு அப்பாற்பட்ட சந்தர்ப்பங்களில் சட்டத்தை அமுல் செய்வதற்கான சாத்தியக் கூறுகளோ, நம்பிக்கையோ அற்றுப்போகின்றன.

மதலாம் இரண்டாம் உலக யுத்தங்களின் பின் இடம் பெற்ற பல சம்பவங்கள் எமது உரிமை கோரலுக்கு சிறப்பான உதாரணங்களாகும்.

மக்களின் விருப்பங்களை, தனது சக்தி என்ற வகையில் பாதுகாப்பது எது என்பதில் சமூகம் கவனம் செலுத்தாமல் போகின்ற போதுதான் ஊழலும் சட்ட மீறலும், சமூக சிதைவுகளும் தலைதூக்குகின்றன. ஏனெனில் அதி உயர் ஒழுக்கங்களே விருப்பங்களைப் பாதுகாப்பவை. உளவியல் தெளிவுபடுத்துவது போல விருப்பம் அதன் நிலைப்பாட்டுக்;கு நிரந்தர தன்மைக்கும் அதன் தொடர்ச்சியான வாழ்க்கைக்கும் ஒரு பொருத்தமான ஒழுக்கவியலைத் தவிர வேறு எந்த உதவியையும் பெற்றுக் கொள்வதில்லை.

சமூகத்தின் மீது ஆட்சி செலுத்துகின்ற சட்டங்களுக்கும், வழிமுறைகளுக்கும் உயர் ஒழுக்கத்துடன் கூடிய உறுதியான அத்திவாரம் இல்லாவிட்டால் அவை நீடித்திருக்க முடியாது வேரற்ற காட்டு மரங்களைப் போன்றவையாகவே இருக்கும் கம்யூனிஸத்தின் தோற்றம் நல்லதொரு எச்சரிக்கையாகும். இந்த சிந்தனை ஜனநாயகத்தாலேயே தயாரிக்கப்பட்டது. அது ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்துக்கு எதிராக மேற்கொண்ட சுரண்டலினால் உண்டான ஆடம்பரம், கேளிக்கை, களியாட்டம் என்பவற்றின் முடிவே.

சுமூகம் ஒன்றுக்கொன்று வெகு தூரத்திலமைந்த முற்றிலும் எதிரான முனைகளை கொண்டிருந்தது. அவற்றுள் ஒன்று கல்நெஞ்சு, கொடூரம், அநீதி, ஏனையவை கோபம், பகை, காழ்ப்புணர்வு.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next