இஸ்லாத்தில் சமூக உறவுகள்.ஆ) சட்டத்தால் ஆளப்படும் மனிதர்கள் சட்டத்துக்கப்பால் சுதந்திரமானவர்கள். இது மனிதனின் புரிந்துணர்வுடனான தேவைகளையும், மனோவிருப்பத்தையும் இவ்விரண்டு சக்;திகளுக்கும் இடையிலான உடன்பாட்டையும் வேண்டி நிற்கின்றது.(அதாவத மக்களின் மனோவிருப்பங்களும், செயல்களும் திருத்தப்பட்ட பின், புரிந்துணர்வையும் தீர்மானத்தையும் கொண்டுள்ள மனிதன் சுதந்திரமாக இருப்பான்). ஆகவே நடைமுறையில் உள்ள சட்டங்கள் தெய்வீக படிப்பினைகளுக்கும், ஒழுக்கவியலுக்கும் எதிரானவையல்ல என்பதை நீங்கள் காணலாம். மேலும் தெய்வீக படிப்பினை, ஒழுக்கவியல் ஆகிய இவ்விரண்டும் முக்கிய விடயங்களும், சட்டம் அவர்களுக்கு வழங்கும் வடிவத்தைப் பெருகின்றன.

தேயவீக படிப்பினைகளும், ஒழுக்கவியலும் அவை தங்கி இருப்பதைப் பொருத்தமட்டில் சட்டத்தோடு ஓர் இணக்கத்துக்கும்,உடன்பாட்டுக்கும் வருகின்றன. இதன் முடிவாக விரைவாகவோ அல்லது காலம் தாழ்த்தியோ ஆத்மீகப் பெறுமானங்கள் குறைவான மேலோட்டமான பல பழக்கவழக்கங்களின் வடிவினைப் பெற வேண்டியுள்ளது.

இந்த காரணத்தினால் தான் அரசியல் சமயத்தோடு விளையாடுவதை நாம் அவதானிக்கின்றோம். ஒரு நாளைக்கு அது சமளத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிடுகின்றது. அதை நசுக்கவும் முயல்கின்றது. மறு நாள் அது சமயத்தின் பக்கம் சார்ந்து அதனை உயர்த்த வேண்டிய அவசியத்தையும் மிகைப்படுத்தப்பட்ட வார்த்தைகளால் வர்ணிக்கின்றது. சில நேரங்களில் அது சமயத்தில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு சமயத்தை அதன்பாட்டில் விட்டுவிடுகின்றது.

இ) இ;ந்த வகையான சட்டம் இயற்றலில் குறைபாடுகள் இல்லாமல் இல்லை. ஒரு தனி மனிதனிடம் அல்லது சில தனி மனிதர்களிடம் சட்ட நிறைவேற்று அதிகாரம் ஒருமுகப்படுத்தப்பட்டிருந்த போதும், இதற்கு எந்த வகையான உத்தரவாதமும் இல்லை. அதாவது இந்த அதிகாரச் சக்தி அல்லது இறைமை நேர்மையில் இருந்து வழிதவறுமானால் மக்களின் அரசாங்கத்தை மக்கள் மீதான அரசாங்கமாக உருமாற்றுமானால், சட்டத்தின் போக்கினை மாற்றுமானால், இந்த உறுமாற்றக் கொடுமையை வெற்றி கொள்ள யார் இருக்கின்றார்கள்? அத்தகையவர்களை நீதிக்கும் சமத்துவத்துக்கும் முன்னால் நிறுத்த யார் இருக்கின்றார்கள்?

இந்தக் கூற்றுக்குப் பல்வேறு வரலாற்று ஆதாரங்களும் மேலதிகமாக, அறிவு, நாகரிகம் னெ;பவற்றின் யுகமான தற்காலத்தில் எண்ணிலடங்காத ஆதாரங்கள் உண்டு. ஆமல் சொன்ன குறைபாட்டுக்கு இன்னும் ஒன்றை நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். அதாவது சட்ட மீரல் எனடபது நிறை வேற்று அதிகாரத்தோடு தொடர்பு பட்டதாவோ அல்லது அதன் ஆட்சிப் பரப்புக்கு அப்பால் செல்லக் கூடியதாகவோ இருக்கலாம்.

எமது கலந்துரையாடலின் ஆரம்பத்துக்கு நாம் திரும்புவோம். ஓற்றுமை உண்டாக்குவதற்காக தனிக் குறிக்கோள் மூலம் சிவில் சமூகம் அமைக்கப்படுகின்றது. அதுவெ அவர்கள் சந்தோஷம் எனக் கருதும் உலக வாழ்க்கையின் நன்மைகளை சுரண்டுவதாகவும் உள்ளது.

ஆனால் இஸ்லாம் வாழ்க்கையின் ஓட்டத்தை ஒலகாயத்தை விட விசாலமான ஒன்றாகக் கருதுகின்றது. மறுமை வாழ்வே யதார்த்தமான வாழ்க்கை என்றும் அது நம்புகின்றது. தெய்வீகப் போதனை முடிவாக ஏகதெய்வக் கொள்கையை ஏற்றுக் கொள்வதைத் தவிர, உலக வாழ்க்கையில் வேறு எவ்வித பலனும் இல்லை என்று இஸ்லாம் நம்புகின்றது. ஒழுக்கப் பண்புகளாலும், தரக்குறைவான துர்க்குணங்களில் இருந்து சுய விடுதலை பெற்ற புனிதத்தாலும் அன்றி இந்தப் போதனைகளைப் காதுகாக்க முடியாது என்றும் இஸ்லாம் நம்புகின்றது. மேலும் இறுதியாக இஸ்லாம் கூறுகின்றது: இறைவனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முறையான வாழ்க்கையின் ஊடாகவன்றி இந்த ஒழுக்கவியல் பரிபூரணத்துவத்தை அடையாது. அந்த வாழ்க்கை இறைவனின் தெய்வீகத்துக்கு முன்னால் தலைகுன்ந்து நிற்கும், அந்த வாழ்க்கை சமூக நீதியின் அடிப்படையில் மக்களை; பராமரிக்கும். இந்த ஆழமான கோட்பாடுகளிலும், நிலையான தெ;திவாரத்திலுமே இஸ்லாம் மனித சமூகத்துக்கு ஒரு குறிக்கோளை வகுத்துள்ளது. மனித சமூகம் உறுவாக்கப்பட்டுள்ள இந்தக் குறிக்கோளின் அடிப்படையும, அதன் ;மூலம் அது பெறுகின்ற ஐக்கியமும் ஏக தெய்வக சமயமாகின்றது.

இஸ்லாம் அதன் எல்லா சட்டங்களையும் ஏக தெய்வக் கோட்பாட்டின் அடிப்படையில் வகுத்துள்ளது. மேலும் சட்டங்களை முன்னேற்றுவதில் அது தன்னை மக்களின் விருப்பத்துக்கும், செயற்பாட்டிற்கும் ஏற்ப சரிப்படுத்திக் கொள்ளும் வகையில் வரையறுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பக்தி மிக்க செயல்களுடனும், முறையான போதனைகளுடனும், ஒழுக்கநெரியுடனும் தன்னை பூரணப்படுத்திக் கொண்டுள்ளது.

இஸ்லாம் சட்டங்களை நிறைவேற்றும் முழுமையான பொறுப்பினை முதன்மையாக இஸ்லாமிய அரசாங்கத்தின் மீது வைத்துள்ளது. இரண்டாவதாக அதனை சமூகத்தின் மீது வைத்துள்ளது. இந்த உத்தரவாதம் முறையான கல்வி, தத்துவம், செயல்முறை என்பவற்றை உள்ளடக்கி, நன்மையை ஏவி தீமையைத் தடுப்பதில் வழி காட்டுகின்றது. இந்த மார்கத்தில் மிகவும் முக்கியமான விடயமானது அதன் பகுதிகள் மிகவும் உள்ளார்ந்த தொடர்புடையதாகவும், அவற்றிடையே முறையான ஐக்கியம் உண்டு பண்ணப்புடுவதுமாகும். இந்த சமயத்தால் ஊக்குவிக்கப்படும் ஏகதெய்வக் கோட்பாடு எல்லா உயர் ஒழுக்கநெரிகளிலும் வியாபித்துள்ளது. மேலும் சமூகத்தின் எல்லா உறுப்பினர்களும் கட்டுப்பட்டுள்ள ஒழுக்கப்பண்பு எல்லா காரியங்களிலும் ஆட்சி செய்கின்றது.

இஸ்லாம் ஏகதெய்வக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இதன் கருத்து ஒரு இறைவனின் விருப்பத்தையும், குறிக்கோளையும் விசுவாசிப்பதை வேண்டி நிற்கும் வெறும் ஒழுக்க நெரிகளுக்கு அப்பால் இஸ்லாம் செல்லுகின்றது. மேலும் வேறுவிதமாகக் கூறின் ஏகதெய்வக் கோட்பாட்டோடு சார்ந்து நிற்கும் அதி உயர் ஒமுக்க நெறி இஸ்லாத்தின் அடிப்படையை அமைக்கின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next