இஸ்லாத்தில் சமூக உறவுகள்.முற்போக்கு நாடுகளின் அகராதியின்படி, மகிழ்ச்சி, நன்மை, சுபீட்சம், தகுதி என்பவற்றின் கருத்து, சுய நலமும், அநியாயமுமே என்றுதான் கூற வேண்டும்28,28,28

6) இஸ்லாமிய சமூகம் எவ்வாறு நிலைபெற்றது? அதன் நிலைபேறு எவ்வாறு தொடர்கிறது?

பல்வேறு உறுப்பினர்களினதும் தினக் குறிக்கோளின் முடிவாகவே ஒவ்வொரு சமூகமும் உருவாக்கப்பட்டது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இந்த தனிக் குறிக்கோள், எல்லாத் திசைகளிலும் பரவி, ஏதோ ஒரு வகையில் அவர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு அபூர்வ உணர்வாகும்.

சமய சார்பற்ற சமூகங்களில் இந்தக் குறிக்கோள் மனிதனின் உலக வாழ்க்கையாக இருக்கின்றது. உண்மையில் இது எல்லா உறுப்பினர்களிடையேயும் பொதுவான வாழ்க்கையே அன்றி தனிப்பட்ட வாழ்க்கை அல்ல. அதாவது உலகாயத நன்மைகளைக் கூட்டாகச் சுரண்டும் ஒரு முறையாகும்.

விpளைவுகளின் கண்ணோட்டத்தில், கூட்டானதும், தனியானதுமான மகிழ்வுக்கும், சுரண்டலுக்கும் இடையில் உள்ள வித்தியாசம் இதுதான். அதாவது மனிதனுக்கு தனியாக வாழ முடியுமானால் அவனுடைய வாழ்க்கையின் எல்லா இன்பங்களிலும் அவன் முழுமையாக சுதந்திரமாக இருப்பான். அவனுக்குப் போட்டியாகவோ, எதிராகவோ யாரும் இல்லையாதலால், ஒரு அங்கம் இன்னொரு அங்கத்தில் வரையறைகளை திணிக்காத வரைக்கும், உதாரணமாக வளிமண்டலத்தில் வளி முழவதையும் மனிதனால் பயன்படுத்தமுடியாது. அவனுடைய சுவாசப்பை எல்லா வளியையும் ஜீரண்க்க முடியாது. (அவனுக்கு அவ்வாரான ஒரு ஆவல் இருந்தாலும் அது சாத்தியமற்றதே). இத்தகைய நிலை வரைக்கும் அவன் இன்பங்களில் முழுமையாக சுதந்திரமாக இருப்பான். இது போலவே மனிதனுக்கு எவ்வளவு தூரம் ஆவல் இருந்தாலும் எல்லா பண்டங்களையும் அவனால் ஒண்ண முடியாது. காரணம் அவனது வய்ற்கென்று ஓர் அளவுண்டு.

ஆனால் வஸ்த்துக்களில் இருந்து நன்மைபெற அவனுக்கு வேறு பங்காளிகள் இல்லை எனக்கொண்டால்.; அப்போது அவன் தனது காரியங்களுக்கு வரம்பினை விதித்துக்கொள்ள வேண்டிய காரணமும் இல்லாமல் போகின்றது. இத்தகைய ஒரு மனிதனின் நிலை சமூகச் சூழலில் நிறுத்தப்பட்ட ஒரு மனிதனின் நிலைக்கு முரணானதாகும். ஆகவே இந்த மனிதனின் செயல்களிலும், நடத்தையிலும் சுதந்திரமாக இருந்தால் அதன் முடிவு தனிநபர்கள் ஒவ்வொருவரும் மற்றவர்களைச் சரிபார்க்க வேண்டியதாகவும், தடுக்க வேண்டியவர்களாகவும் இருக்கும் இத்தகைய ஒரு நிலை வாழ்வையும் அழித்து மனித வர்க்கத்தையும் அழித்து மனித வர்க்கத்தையும் நாசமாக்கிவிடும்.

சட்டத்தை சமூகத்தில் ஸ்தாபிப்பதற்கும், சட்டம் சமூகத்தை ஆட்சி செய்ய வைப்பதற்குரிய ஒரே காரணி தனி இலக்காகும். ஆனால் சுய வளர்ச்சி காணும் சமூகங்களுக்கு தமது சொந்த நிலையை வாதப்பிரதிவாதங்களினூடாகவும், சிந்தனையினூடாகவும் புரிந்து கொள்ள முடியாது. சமூகங்களில் hபரம்பரியங்களும்

வழமைகளும் உறுப்பினர்களும் இடையிலான எண்ணற்ற பினக்குகளாலும், முரண்பாடுகளாலும் உறுவாக்கப்பட்டுள்ளன. இந்த முரண்பாடுகளினதும், போராட்டங்களினதும் முடிவு ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட பாதைக்குக் கீழ்ப்படிய நிர்ப்பந்திப்பதாகும். ஆகவே அந்த கட்டளை ஒரு குறிப்பிட்ட எல்லையில் வைக்கப்படல் வேண்டும். மேலும் இந்த நிபந்தனைகளுக்கும் விவகாரங்களுக்கும் உறுதியான அத்திவாரம் இல்லை. அவை வன்முறைக்கும், நிராகரிப்புக்கும் உட்பட்டவை. மேலும் அவை விரைவாக மாற்றமடைந்து விரைந்துவிடக்கூடியவை.

ஆனால் நாகரிக சமூகங்கள் அவற்றின் சமூக நலன்பாடுகளை உறுதியான, நிலையான அஸ்திவாரத்தின் அடிப்படையில் கொண்டுள்ளன. மேலும் அவர்களுடைய போக்கில் சமூகத்தில் தனி நபரின் மன விருப்பத்துக்கும், செயலுக்கும் இடையிலான வரையறையில் எல்லா அதிகாரங்களுக்கும் ஒரே இடத்தில் ஒரு முகப்படுத்தப்பட்டு, அது சட்டத்தின் ஷரத்துக்களை நிறைவேற்றுவதை உறுதி செய்கின்றது. இதனால் இன்னும் பல விடயங்கள் தெளிவுபடுத்தப்படுகின்றன:

அ) சட்டம் என்பது மக்களின் வீருப்பங்களையும், செயல்களையும் கட்டுப்படுத்தும் ஒன்றாகவும், அதன் மூலம் அவர்களுக்கு இடையிலான இடையூறுகளையும், பிணக்குகளையும் அகற்றுகின்ற ஒன்றாகவும் உள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next