இஸ்லாத்தில் சமூக உறவுகள்.நூடுகளைப் பற்றித் தீர்ப்பளிக்கையில் குர்ஆன் இதனையே செய்துள்ளது. அதாவது யூதர்களைப் போன்ற மக்களும் நாடுகளும், அராபியர்களும், முன்னைய மக்களும் இவர்கள் எல்லோருமே சமூக சிந்தனைக்கு சமய அல்லது தேசிய தப்பெண்ணங்களால் வற்புறுத்தப்பட்டார்கள். குர்ஆன் முன்னைய ஒரு கூட்டத்தின் பாவங்களுக்காக பின்னையவர்களைக் குற்றம் கூறுவதை நீங்கள் காணலாம். மேலும் முன்சென்றவர்களின் செயல்களுக்காக இருப்பவர்களை கடிந்து கொள்கின்றது. இவை எல்லாம் ஏனெனில் சமூக அடிப்படையிலானசிந்தனை உள்ள ஒருவர் இந்த முறையில் தான் மதிப்பிட வேண்டும்.

இங்கே தவிர்த்துவிட முடியாத ஒரு விடயமும் உள்ளது. சமூகமும் தனிநபரும் மதிக்கப்பட வேண்டி இருப்பதால், ஊழல்மிக்க சமூகத்தில் வாழுகின்ற ஒரு சேர்மையான தனிமனிதரின் உரிமைகளை நசுக்கி விடாமல் காப்பதே நீதியானது. அவர்கள் ஊழல் மிக்க ஒரு சமூகத்தில் மோசடியாளர்களோடு கலந்துள்ள போதிலும் அந்தக் கருத்துக்களால் அவர்களின் இதயங்கள் பாதிக்கப்படவில்லை. மேலும் அந்த சமூகத்தில் ஆழமாகப் பரவியிருக்கும் உள்ளார்ந்த நோய்களாலும் அவர்கள் பாதிக்கப்படவில்லை.

இத்தகைய மனிதர்கள் ஊழல் மிக்க சமூகத்தின் மிதமிஞ்சிய பகுதிகளாவர். குர்ஆன் கூட பொதுவான தனது கடிந்துரைக்கும் வசனங்களில், இத்தகைய நன்மையும், ஒழுக்கமும் உள்ள மனிதர்களுக்கு விதவிலக்களித்துள்ளது

மேலே கூறப்பட்டவற்றிலிருந்து நாகரிக சமூகத்தில் யாராவது ஒருவர் தனிநபர் ஒருவரின் பெருமதியை அல்லது பெறுமதியற்ற நிலையை மதிப்பீடு செய்ய விரும்பினால் அத்துடன் முற்போக்குள்ள நாடுகள் ஏனைய நாடுகளிலும் வேறுபட்டவை எனக் கூற விரும்பினால், அவர் தன்னுடைய மதிப்பீட்டை அவர்களின் உள்ளார்ந்த நட்பு, தொடர்புகள், தனிப்பட்ட வாழ்க்கை என்பவற்றின் அடிப்படையில் அமைத்துக் கொள்ளக் கூடாது. ஆவர்சமூக ஆளுமையையே அதன் அடித்தளமாகக் கொள்ள வேண்டும். சமூக ஆளுமை பல வீனமான நாடுகளுடனான அதன் எதிர்த்தாக்குதலிலும், எதிர்ப்புத்தன்மையிலும் உலகின் ஏனைய சமூக ஆளுமைகளுடனான தொடர்பிலும் மிகவும் வெளிப்படையானதாகும்.

சுமூகத்தின் தகுதி, தகுதியின்மை. முகிழ்ச்சி, மகிழ்ச்சியின்மை மதிப்பிடுவதில் சரியானதும், கவனிக்கப்பட வேண்டியதும் என்னவென்றால் கிழக்கத்திய தலைப்புகளில் சிந்திப்போர் அவசியம் இந்த நெரியினைப் பின்பற்றியாக வேண்டும் என்பதுதான். மேலும் இந்த வழிமுறையில் விடயங்களைப் படித்தபின் அவர்கள் வியப்புக்குள்ளாவார்கள்.

உண்மையிலேயே, முறையான வாதப்பிரதி வாதங்களுடன், ஒருவர் நவீன ஐரொப்பிய இயக்கம் முதல், நாகரீக நாடுகளின் சமூக வாழ்க்கை வரலாற்றைப் படிப்பதோடு, பலவீனமான நாடுகளையும், இனங்களையும் அவர்கள் நடத்திய விதம் பற்றி ஆழமான கவனமும் செலுத்துவாரானால் மனித வர்க்கத்தின் மீது கருணையும், தயையும் அவர்கள் செலுத்தினார்களா என்பதை தெளிவாக உணர்ந்து கொள்வார். அது மட்டுமன்றி உரிமைகள் பரிக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உதவிக்காகவும் விடுதலைக்காகவும் தனது வாழ்க்கையையும், செல்வத்தையும் தியாகம் செய்யவும் முன்வருவார்.

அவர்களுக்கு பலவீனமான நிர்க்கதியற்ற மக்களை அடிமைப்படுத்துவதைத் தவிர வேறு எண்ணம் இல்லை என்பதையே இத்தகைய ஒரு ஆய்வு எடுத்துக் காடம்டுகிறது.

அவர்கள் தங்களால் முடியுமான போதெல்லாம் சந்தர்ப்பத்துக் கேற்றவாறு தமது குறிக்கோளை நிறைவேற்றிக் கொண்டனர். ஒருநாள் பலாத்காரமாகவும், அடுத்த நாள் மற்றவர்களின் சொத்துக்களை தமது சொந்தமாக்கி விழுங்கிக் கொண்டதன் மூலமும், இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் மக்கள் பாதுகாப்பாளர் என்ற போர்வையிலும், மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் பொது நலன்களைப் பாதுகாத்தல் என்ற பெயரிலும், மற்றொரு; நேரத்தில் சுதந்திரத்தின் பாதுகாவலன் என்ற பெயரிலும், மேலும் ஒரு சந்தர்ப்பத்தில் சமாதானத்துக்கான அச்சுறுத்தலை நீக்கி சமாதானத்தை நிலை நிறுத்துகின்றோம் என்ற பாசாங்கிலும், இன்னும் சில நேரங்களில் நிர்கதியானவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க குரல் கொடுக்கின்றோம் என்று கூறிக் கொண்டும் தமது குறிக்கோள்களை அவர்கள் நிறைவேற்றிக் கொண்டனர். சுருங்கக் கூறின், அவர்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புதுப் பெயரில் ஏனைய நாடுகளுக்கு பெரும் துன்பங்களையே அளித்தனர். சந்தோஷம் என்பதன் பொருள் பற்றிய சமயத் தீர்ப்புகளும், வெளிப்பாடுகளும், நபித்துவமும் ஒரு புறம் இருக்க சமாதானப் பிரயர்களின் இயல்பான பண்பு, இவ்வாரான விஷேட குணங்களுடைய இத்தகைய சமூகங்களை, நேர்மையானதாகவோ, மகிழ்ச்சியானதாகவோ கருத இடமளிக்கவில்லை

மனித இயல்பு, எவ்வாறு தனிமனிதனுக்குத் தேவையானதை சமமான முறையில் வழங்கி, பின் அவனுக்கு முரணாகச் செயற்பட்டு, தன்னுடைய அபிப்பிராயயத்தை ரத்துச் செய்ய முடியும்? எவ்வாறு அவனுக்கு, மற்றவர்களைத் தமதாக்கிக் கொள்ளும் தகுதியை ஒரு தனி மனிதனுக்கு வழங்கி அவர்களின் இரத்தம், நேர்மை சொத்து என்பவற்றை சட்ட பூர்வமாக அவனுக்கு சொந்தமாக்க முடியும்? இந்த நாடுகளின் வாழ்க்கை மையத்தோடும், வாழ்வோடும் விளையாட வழிவிட்டு ஆரம்ப நூற்றாண்டு கால மனிதனோடு கூட ஒப்பிட முடியாத அளவு குடூர மனமும் சித்தமும் கொண்ட மக்களாக அந்த நாடுகளில் தமது அடியாட்களை மாற்றுமளவுக்கு அந்த நாடுகளின் வாழ்வோடும் நிலைபேற்றுத் தன்மையோடும் விளையாட வழியமைக்க அவர்களால் எப்படி முடியும்?

எமது இந்த உரிமைக் கோரல்களுக்கெல்லாம், நாம் இந்த நாடுகளில் வாழ்க்கை வரலாற்றிலும் இன்றைய தலைமுறையினர் அவர்களால் அடைந்த காயங்களிலும் தான் தங்கியுள்ளோம்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next