இஸ்லாத்தில் சமூக உறவுகள்.



மனித மகிழ்ச்சி என்பது உலகாயத ஆன்மீக மகிழ்ச்சிகளின் சேர்க்கையாகும். ஆத்தகைய மகிழ்ச்சி மனிதனுக்கு உலகாயத ஆசீர்வாதத்தை மட்டும் வழங்கவில்லை. அது அவனை ஒழுக்க மேன்பாடுகளாலும், தெய்வீக போதனைகளாலும் அலங்கரிக்கின்றுது. உடம்பினதும், ஆன்மாவினதும் மகிழ்ச்சி இந்த உலகிலும் மறு உலகிலுமான மனிதனின் மகிழ்ச்சியை உறுதி செய்கின்றது.

இஸ்லாத்தின் கருத்துப்படி உலகாயத மகிழ்ச்சிகளில் முழுமையாக ஈடுபட்டு ஆன்மீக மகிழ்ச்சிகளை நிராகரிப்பது துரதிஷ்டமேயன்றி வேரென்றுமில்லை. முன்னெற்றமடைந்த நாடுகளில் தனி மனிதர்களிடம் நாம் காணும் உண்மை துயை;மை, நேர்மை, மகிழ்ச்சி என்பனவும் இதுபோன்ற வேறு சில பண்புகளும் சில மனிதர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. ஆனால் இந்த விடயத்தில் அவர்கள் உண்மையைத் தவறாகப் புரிந்து கொண்டனர். காரணம் இது பற்றி கலந்துரையாடுகின்ற பல கீழைத்தேச சிந்தனையாளர்கள் சமூக ரிதியாக சிந்திக்க முடியாதுள்ளனர் என்பது தான். அவர்களுடைய சிந்தனை தனி மனித மயமானது நாம் ஒவ்வொருவரும், அவரவர் முன்னிலையில் காண்பது என்னவென்றால் அவனும் எல்லாவற்றிலும் சுதந்திரமான ஒரு மனிதன் என்பதையும் அவனுடைய சுதந்திரத்தை அழிக்கும் வகையில் அது அவனோடு தொடர்புபடவில்லை என்பது தான். ஆனால் இந்த வகையான சிந்தனை முற்றிலும் தவரானதாகும்.

வாழ்க்கையில் நம் ஒவ்வொருவரும் எமது சொந்த இலாபங்களை ஈட்டுவதையும் நட்டங்களைத் தவிர்ப்பதையும் பற்றிசிந்தனையைத் தவிர வேறு சிந்தனை எதுவும் இல்லை. அதன் தொடராக ஒருவருக்கு அவருடைய சொந்த விவகாரங்களைவிட எந்த வேலையும் இல்லாமல் போய்விடுகின்றது. இதுதான் மனித மயமான சிந்தனை என்றும் கூறப்படுகின்றது.

இத்தகைய ஒரு சிந்தனையின் விளைவு ஒருவர் தன்னோடு மற்றவர்களை ஒப்பிட்டுப் பார்ப்பதும், ஒருவர் தன்னை சுதந்திரமானவனாகவும், தனியானவனாகவும் கருதுவதாகும். அவன் மற்றவர்களையும் சுதந்திரமானவர்களாகவே எண்ணுகின்றான், இத்தகைய ஒரு தீர்ப்பு சரியாயின், அது தனிநபர் நிலைப்பாட்டில் மட்டுமே சரியானதாக இருக்கும். ஆனால் சமூக முறையான சிந்தனை இருக்கும் ஒருவர், தனக்குமுன் அவர் காணுகின்றவை ஒரு பகுதியே என்றும் அது சமூகத்தில் இருந்து எந்த வகையிலும் சுதந்திரமானதோ, பிரிக்கக் கூடியதோ அல்ல என்றும் உணறுகின்றார்.

அவர் தனது சொந்த நலனை சமூக நலனின் ஒரு பகுதியாகக் கருதுகின்றார். சமூக நலனை தனது சொந்த நலனாகவும், சமூகத் தீமைகளை தனது சொந்தத் தீமைகளாகவும் அவர் கருதுகின்றார். சுரக்கமாகக் கூறுவதாயின், அவர் சமூகத்தின் எல்லா நிலைமைகளையும், விஷேடங்களையும் தனது சொந்த விடயமாகவே கருதுகின்றார். இத்தகைய ஒரு மனிதர் வித்தியாசமான சிந்தனை முறை உள்ளவராவார்.

மற்றவர்களுடனான உறவில், இத்தகைய ஒரு மனிதர் தனது சொந்தக் குழவிற்கு வெளியே உள்ளவர்களைத் தவிர யாரோடும் தொடர்பு கொள்கின்றார். அதற்குள்ளே இருப்பவர்களின் கவனம் செலுத்துவதுமில்லை.இதனை ஓர் உதாரணம் தெளிவு படுத்துகின்றது. மனிதன் என்பவன் பல உறுப்பினர்களினதும், சக்திகளினதும் சேர்க்கையாவான். ஆவை ஒரு உண்மையான ஐக்கியத்தை உருவாக்க இணைந்துள்ளன. இந்தக் கூட்டைத்தான் நாம் மனித வர்க்கம் என்கின்றோம். இது மொத்தமான இயல்பாகவும், செயல் ரீதியாகவும் எல்லைப்பகுதிகளிலும் ஆதிக்கம் செலுத்தி தனது சுதந்திரத்தால் உறிஞ்சிக் கொள்கின்றது.

கண்கள் பார்க்கின்றன, காதுகள் கேட்கின்றன, கைகள் கீழ்ப்படிகின்றன. கால்கள் நடக்கின்றன, ஆனால் இவை எல்லாமே மனிதனுக்காக தங்களது கடமைகளைச் செய்கின்றன. ஏனெனில் அவற்றினூடான கடமைகளைப் பெற்றிருப்பதில் அவை மகிழ்ச்சியுறுகின்றன. ஒவ்வொரு பகுதியும் வெளிப்பகுதியைத் தொட்டுப்பார்க்க பிரயத்தனம் செய்கின்றன. மனிதன் நன்மையையோ, தீமையையோ தொடர்புபடுத்திக் கொள்ள விரும்பும் வெளிப்பகுதியைத் தொட்டுப்பார்க்க முயல்கின்றன. ஒரு மனிதன் காப்பாற்ற அல்லது துன்புறுத்த விரும்பும் ஒருவருக்காக நன்மையை அல்லது தீமையைக் கண்ணும், காதும், கைகளும், கால்களும் செய்கின்றன. 

ஆனால் மனிதவர்க்கம்; என்ற பதாகையின் கீழ் இருக்கும் இந்த உறுப்பினர்கள் ஒருவர் மற்றவரோடு எப்படி நடந்து கொள்கின்றனர். ஒருவர் மற்றவரைத் துன்புறுத்துவதோ அல்லது ஒருவருகு ஒருவர் நட்டம் ஏற்படுத்திக் கொள்வதோ அரிதாகவே நடக்கின்றது. தனித்துவமான பாதையைப் பின்பற்றுகின்றபோது மனிதனின் பகுதிகள் இப்படித்தான் செயல்படுகின்றன.

மனித சமூகத்தின் உறுப்பினர்கள் சமூக ரீதியாகவும் இதே வழி முறைதான் உண்டு என நினைக்கின்றார்கள். இந்த உறுப்பினர்கள் சமூகத்தை ஒரு தனி மனிதராகக் கருதினால் அவர்களின் தனிப்பட்ட நேர்மை, நேர்மையின்மை, ஒழுக்கம், கபடம், துர்நடத்தை, நன்மை, தீமை எல்லாம் அவர்களின் சமூகத்திலே உள்ளதாகவே இருக்கும்.

(சமூக சிந்தனை, ஒருசிந்தனையாளரை தனி மனித பண்புகளை சமூகத்தில் இருந்து பிரித்து சிந்திக்க விடுவதில்லை. ஒரு தனி மனித நலம் சமூகத்தின் நலத்தினைப் போன்றதே, அவரின் நேர்மையீனமும் சமூகத்தினரைப் போன்றதே).



back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next