இஸ்லாத்தில் சமூக உறவுகள்.பெரும்பான்மையினரின் கருத்துக்கள் எப்போதுமே உண்மையானதல்ல. அல்லது கீழ்படியவேண்டிய அவசியமுள்ள ஒன்றுமல்ல எனபதை சிறப்பான சொற்பொழிவுகள் எடுத்துக்காட்டியுள்ளன. அல்குர்ஆனின் சூரா மூமினீனில் 23:70 வசனம் பின்வருமாறு கூறுகின்றது.

நபியவர்கள் உண்மையைக் கொண்டுவந்தார்கள். ஆனால் அநேக மக்கள் அதற்கு வெரிப்பினைக் காட்டினர்.

பெரும்பாலானவர்களின் கருத்துக்கள் உண்மையின் அடிப்படையில் இருந்தால் உண்மையை வெருப்பதோ அல்லது எதிர்ப்பதோ மக்களுக்கு முடியாத காரியமாகும்.

இயற்கையின் தேவையின் அடிப்படையில் பெரும்பான்மையினரைப் பின்பற்றுவது தவறானது என்பது இப்போது தெளிவாகின்றது. பெரும்பான்மையினரின் சட்டத்துக்கு வெளிவாரியாக அறிவு மட்டுமே சொந்தமாகின்றது. அறிவும் சிந்தனையும் சொந்தமாவதில்லை. மனிதன் தனது இயக்கங்களிலும் தீர்டானங்களிலும் பெரும் பான்மையினரின் கருத்துக்களைப் பின்பற்ற வேண்டும். அதாவது, அவன் பெரும்பான்மையினரின் நலனை தனது நடத்தைகளின் அடிப்படையாகக் கொள்கின்றான்.(மேலும் பெரும்பாலும் அவன் தனது செயல்களும், நடைமுறையும் தன்னுடைய நன்மைக்கே என்பதையும் கவனித்துக் கொள்கின்றான்.) குர்ஆனும் தன்னுடைய சட்டம் இயற்றலின் நன்மையைக் கருதியும் இதனைப் பின்பற்றுகின்றது.

குர்ஆன் கூறுகின்றது. இறைவன் உங்களுக்கு நோவினையையும், துன்பத்தையும் உருவாக்க விரும்பவில்லை. உங்களைத் தூய்மையாக வைத்திருக்கவே இறைவன் விரும்புகின்றான். மேலும் பரிபூரனமாக தனது கொடைகளை உங்களுக்கு வழங்குகின்றான். ஆகவே நீங்கள் நன்றியுடையவராக இருங்கள்

குர்ஆன் கூறுகின்றது உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போலவே, நீங்கள் ஒழுக்கம் உள்ளவர்களாக ஆகும் பொருட்டு உங்களுக்கும் நோன்பு விதியாக்கப்பட்டுள்ளது அப்போது பெரும்பான்மையினரின் நலன்கள், முடிவுகள், நன்மைகளை அடிப்படையாகக் கொண்டே கட்டளைகள் இருப்பதை நீங்கள் பார்க்கலாம்.

ஆகவே பெரும்பான்மையினரின் கருத்துக்களை பின்பற்றுவது உலகின் இயல்பான ஒரு தேவை அல்ல எனக் கூறி நாம் முடிக்கின்றோம்.

3. முன்னேற்றமடைந்து வரும் நாடுகளுக்கு சமூக உத்தரவாதத்தை தற்கால நாகரிகம் வழங்கியுள்ளது என்றும், தனி நபர்களை அது தூய்மைப்படுத்தியுள்ளது என்றும், சமூகம் நிராகரிக்கின்ற துர்க்குணங்களை அது அகற்றியுள்ளது என்றும் கூறப்படுகின்றது. இந்தக் கூற்றில் தவறும் குழப்பங்களும் இல்லை என்று கூற முடியாது.

சனத்தொகையிலும், அதிகாரத்திலும் உலகாயத வழங்களில் இருந்து கூடுதலான இலாபம் உழைத்தும் மற்ற சமூகங்களின் மீது ஆதிக்கம் செலுத்துவதையுமே அவர்கள் சமூக மகிழ்ச்சி எனக் கருதுகின்றார்கள் போலும்.

ஆன்பின் வாசகர்களே ! இஸ்லாம் இந்த நம்பிக்கையை மகிழ்ச்சியாக கருதவில்லை என்று நாம் திரும்ப திரும்ப குறிப்பிட்டுள்ளோம். மேலும் நியாயத்தின் அடிப்படையிலான கலந்துரையாலும் குர்ஆனின் கண்ணோட்டத்தை உறுதி செய்கின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 next