முக்கிய விடயங்கள்இது பற்றி நபிகளாரின் பின்வரும் பொன் மொழியை ஆதாரமாகக் கொள்கிறோம்: 'எனக்கு பூமி சுஜூது செய்யும் இடமாகவும் தூய்மையானதாகவும் ஆக்கப்பட்டுள்ளது.' இந்த ஹதீஸில் வரும் மஸ்ஜித் எனும் பதம் சுஜூது செய்யும் தளத்தைக் குறிக்கின்றது. இந்த ஹதீஸ் அதிகமான கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது. (புஹாரி, பாக.1, பக்.91  பாபுத் தயம்மம், நஸாயீ மண்ணின் மூலம் தயம்மம் செய்தல் எனும் பிரிவு, முஸ்னத் அஹ்மத் பாக.1, பக்.301) ஷீயாக்களின் பல கிரந்தங்களும் இதனைப் பதிவு செய்துள்ளன.

      

சில வேளை, இந்த ஹதீஸில் மஸ்ஜித் என்பதன் பொருள் ஸஜதா செய்யும் இடமல்ல எனவும் இது தொழுகையை ஒரே இடத்தில் மாத்திரம் நிறைவேற்றும் சிலருக்கு எல்லா இடமும் தொழுகைக்கு உகந்தது எனப் போதிக்க வந்தது எனவும் சிலர் முனையலாம்.

ஆனால், பின் வந்திருக்கும் தஹூரா என்பது தயம்மம் செய்யும் மண்ணைக் குறிக்கின்றது என்பதைக் கவனிக்கின்ற போது, மஸ்ஜித் என்பதன் பொருள் ஸஜதா செய்யும் இடமென்பது தெளிவாகின்றது. அதாவது, பூமியானது  தூய்மையானதும், ஸஜ்தா செய்யும் இடமும் ஆகும் என்பதைக் குறிக்கின்றது. அத்துடன் அஹ்லுல்பைத் இமாம்களின் வழியாக வந்திருக்கும் அதிகமான ஹதீஸ்களில் மண்ணில் அல்லது அது போன்ற ஒன்றில் தான் தான் சுஜூது செய்ய வேண்டுமெனக் குறிப்பிடப்பட் டுள்ளமை போதுமான விளக்கமாகும்.

14. புனிதர்களின் கப்றுகளை தரிசித்தல்

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களினதும் அஹ்லுல்பைத் இமாம்கள், ஏனைய உலமாப் பெருந்தகைகள், ஞானிகள், சுஹதாக்கள், பெருந்தகைகள் போன்றோரின் கப்றுகளைத் தரிசிப்பது முஸ்தஹப்பான ஒரு செயலாகும் என நாம் நம்புகின்றோம்.

அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் புனித கப்றைத் தரிசிப்பதன் சிறப்புகளை அறிவிக்கும் பெருந்தொகையான ஹதீஸ்கள் ஷீயா-சுன்னா கிரந்தங்களில் உள்ளன. இவையனைத்தும் தனியே ஒன்று சேர்க்கப்பட்டால், பெரும் நூலுருப் பெற்றுவிடும். அல் கதீர் கிரந்தத்தில் பாக.5, 93 முதல் 207 வரையான பக்கங்களில் 'ஸியாரத்' செய்வது பற்றிய றிவாயத்துகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

வரலாறு நெடுகிலும் இஸ்லாத்தின் பெரும் அறிஞர்களும் பொதுவாக எல்லாத் தரத்தையும் சேர்ந்த மக்களும் இவ்விடயத் திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டிருக்கின்றனர். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களதும் ஏனைய இறைநேசர்களதும் கப்றுகளைத் தரிசிப்பதற்காகச் சென்றவர்களின் அனுபவங்கள் பற்றிய விளக்கங்களால் கிரந்தங்கள் நிரம்பிக்காணப்படுகின்றன. மொத்தத்தில், இந்த விடயத்தில் அனைத்து முஸ்லிம்களும் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.

அதேவேளை, கப்றுகளைத் தரிசித்தல் என்பதற்கு வணங்குவது என பொருள்கொள்ளக் கூடாது. வணக்கம், அல்லாஹ்வுக்கு மாத்திரம் சொந்தமானதும் குறிப்பானதும் ஆகும். ஆனால், கப்றுகளை தரிசிப்பதன் மூலமாக இறைநேசர்களைக் கண்ணியப் படுத்துவதோடு அல்லாஹ்விடம் மன்னிப்பையும் அருளையும் பெற அவர்களின் சிபார்சைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அடைந்து கொள்ளவும் முடிகின்றது.

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும், பல சந்தர்ப்பங்களில் கப்றுகளைத் தரிசிப்பதற்காக, 'ஜன்னதுல் பகீஉ'க்கு அடிக்கடி வந்து போகிறவராகவும் கப்றுவாசிகளுக்கு ஸலாம் சொல்பவராகவும் இருந்தார்கள் என்பதாக ஹதீஸ்களில் அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுப்புகள், முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ, முஸ்னத் அஹ்மத், திர்மிதி, பைஹகி போன்ற கிரந்தங்களில் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

15. முத்ஆ திருமணம்

இஸ்லாமிய சட்டக்கலையில் 'முத்ஆ' எனும் பெயரில் பிரபல்யம் பெற்றிருக்கும் தற்காலிக திருமணம் மார்க்கத்தில் ஆகுமான சட்டபூர்வமான ஓர் அம்சமாகும் என்பது நமது நம்பிக்கையாகும். இதன்படி திருமணம் இருவகைப்படும். ஒன்று, நிரந்தரத் திருமணம். இது, திருமண பந்தத்தின் காலம் வரையறுக்கப்படாததாகும். இரண்டு, தற்காலிக திருமணம். இதன் காலம் இரு தரப்பினரதும் அங்கீகாரத்தோடு வரையறை செய்யப் பட்டிருக்கும்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next