முக்கிய விடயங்கள்விடயம் இவ்வாறிருக்க தகிய்யா என்பது ஷீயாக்களிடம் மட்டுமே காணப்படுகின்ற சர்ச்சைக்குரிய ஓர் அம்சம் எனக் காட்டி விமர்சிக்க முற்பட்டிருப்பது வியப்புக்குரியதாகும். ஆனால், இது அல்குர்ஆனிலும் ஹதீஸிலும் நபித் தோழர்களின் நடைமுறைகளிலும் மட்டுமன்றி உலகின் எல்லா அறிஞர்களிடத்திலும் காணப்படும் வழிமுறையாகும்.

10. தகிய்யா எங்கு ஹராமாகும்?

தகிய்யா செய்வது சில இடங்களில் ஆகுமாக இருக்கின்ற அதேவேளை, வேறு சில இடங்களில் அது ஹராமாகவும் அமைகின்றது. இஸ்லாத்திற்கோ அல்குர்ஆனுக்கோ அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கோ, அதன் அமைப்புக்கோ களங்கம் அல்லது ஆபத்து ஏற்படும் நிலைமகள் தோன்றும் பட்சத்தில் தன் கொள்கையை வெளிப்படுத்துவதன் மூலம் தனக்கு ஏற்படக் கூடிய ஆபத்துகளைப் பற்றி கவனத்திற் கொள்ளக் கூடாது என்பது நமது நம்பிக்கையாகும். ஆசூரா தினத்தில் இமாம் ஹுஸைன் அலைஹிஸ் ஸலாம் செய்த அர்ப்பணிப்பும் இந்த வகையைச் சேர்ந்ததாகும். உமையா ஆட்சியாளர்கள் இஸ்லாமிய உம்மத்தின் அடிப்படைகளையே தகர்க்கலானார்கள். இமாம் ஹுஸைனின் எழுச்சியின் மூலம் உண்மை நிலை அம்பலமாகியது. இடம் பெறவிருந்த பேரழிவிலிருந்து முஸ்லிம் உம்மத் காப்பாற்றப் பட்டது.

      

இது பற்றிய தப்பான அபிப்பிராயங்களுக்குக் காரணம் என்னவெனில், ஷீயாக்களின் கோட்பாடுகள் பற்றிய போதுமான தெளிவு இன்மை அல்லது அவர்களின் எதிரிகள் சொல்கின்ற வற்றை ஆதாரமாகக் கொள்வது ஆகும். இது வரை தரப்பட்ட விளக்கம் உண்மை நிலையைப் புரிந்து கொள்ளப் போதுமான தாகும் என்று நம்புகின்றோம்.

11. இஸ்லாமிய வணக்க வழிபாடுகள்

அல்குர்ஆனும் ஸுன்னாவும் குறிப்பிடுகின்ற இபாதத்துகளை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என நாம் பூரணமாக நம்புகின்றேம். இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலாக முக்கிமான தொடர்பு ஊடகமாகக் கருதப்படுகின்ற நாளாந்த ஐவேளைத் தொழுகை, ஈமானை வலுப்படுத்திக் கொள்ளவும் உளத் தூய்மையையும் இறையச்சத்தையும் வளர்த்துக் கொள்ள வும் மன இச்சைகளை வெல்லவும் சிறந்த சாதனமாகிய நோன்பு என்பன கட்டாயக் கடமைகளைச் சார்ந்ததாகும். ஹஜ், முஸ்லிம்களின் இறையச்சத்தை மெருகூட்டி, அவர்களிடையேயான சர்வதேச உறவைக் கட்டியெழுப்பக் கூடியதாகவும் முஸ்லிம்களின் கண்ணியத்துக்கு எடுத்துக் காட்டாகவும் விளங்குகின்றது. ஸக்காத், குமுஸ், நன்மையை ஏவுதலும் தீமையைத் தடுப்பதும், இஸ்லாத் திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக போர் புரிவோருக்கு எதிராகப் போராடுவதும் அடிப்படைக் கடமைகளில் உள்ளவையாகும்.

பிரஸ்தாப கிரியைகளின் நடைமுறை சம்பந்தப்பட்டட துணை விடயங்களில் நம்மிடம் ஏனைய மத்ஹபுளோடு கருத்து வேறுபாடு காணப்படலாம். இது இத்தகைய அம்சங்களில் அஹ்லுஸ் ஸுன்னாக்களின் நான்கு மத்ஹபுகள் மத்தியில் காணப்படும் கருத்து வேறுபாடுகளை ஒத்ததாகும்.

12. தொழுகைகளை சேர்த்துத் தொழுதல்

ஐவேளைத் தொழுகையையும் தனித்தனியாக அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவதே ஏற்றமானதும் சிறப்பான  தும் ஆகும். எனினும் ளுஹரையும் அஸரையும் அதே போல் மஃரிபையும் இஷாவையும் ஒன்றோடொன்று இணைத்து சேர்த்துத் தொழுவதும் ஆகுமானதாகும் என நாம் நம்புகின்றோம். இது, பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வாழக்கூடிய மனிதர்களின் நிலைமைகளைக் கருத்திற் கொண்டு, இறை தூதரால் வழங்கப் பட்ட விசேஷ அனுமதியாகும் எனவும் நம்புகின்றோம்..

ஸஹீஹ் திர்மிதியில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களிடமிருந்து இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது: 'பயமோ, மழையோ இல்லாத சந்தர்ப்பங்களில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், மதீனாவில் வைத்து, ளுஹர்-அஸர் தொழுகைகளையும், மஃரிப்-இஷா தொழுகைகளையும் சேர்த்துத் தொழுதார்கள். 'இதன்மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களின் நோக்கமென்ன?' என்று இப்னு அப்பாஸிடம் வினவப்பட்ட போது, 'நபிகளார், தமது உம்மத்தினர் சிரமப்படாமலிருக்க வேண்டும் என்பதை நாடியுள்ளார்கள்' எனப் பதிலளித்தார்கள் (ஸுனன் திர்மிதி, பாக.1,பக்.354, பாடம் 138  மற்றும் ஸுனன் பைஹக்கீ - பாக.3, பக்.167)

சமூக வாழ்வு மிகவும் சிக்கலான இந்தக் காலகட்டத்தில் குறிப்பாக அலுவலகங்களிலும் தொழிற்சாலைகளிலும் கடமை புரியும் ஊழியர்களும் அலுவலர்களும் தமது வேலைப் பளுவின் காரணமாக தொழுகைகளை அவற்றுக்குரிய நேரங்களில் தொழ முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இது, நாளடைவில் அவர்கள் தொழுகையை முற்றாக விட்டு விடுவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது. எனவே, தொழுகைகளை சேர்த்துத் தொழுவதற்கு நபியவர்கள் வழங்கியுள்ள அனுமதியை நடைமுறைப் படுத்துவதனூடாக, தொழுகையைத் தவறவிடாது பேணி வரும் சந்தர்ப்பம் கிடைக்கிறது.

13. மண்ணில் சுஜூது செய்தல்

தொழுகையில் சுஜூது செய்யும் போது, மண் அல்லது மண்ணிலிருந்து முளைக்கின்ற ஆனால் உணவாகவோ, உடையாகவோ பயன்படுத்தப்படாத ஒன்றின் மீது நெற்றியை வைக்க வேண்டியது அவசியமாகும் என நாம் நம்புகின்றோம். இதன் காரணமாகவே, விரிப்புகளில் சுஜூது செய்வதை ஷீயாக்கள் ஜாயிஸாகக் கருதுவதில்லை. அத்துடன், சுஜூது செய்வதற்கு மிகவும் ஏற்றமுடையது மண் ஆகும். ஆகவே சிரமத்தைக் குறைக்கும் வண்ணம் ஷீயாக்கள் தூய மண்ணைச் சிறிய களியாகச் செய்து தம்மோடு வைத்துக் கொள்வர். தொழுகையின் போது அதன் மீது சுஜூது செய்வார்கள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next