முக்கிய விடயங்கள்இங்கு 'அவரது ஈமானை மறைத்தார்' எனக் கூறப்படுவதே தகிய்யாவுடைய நிலை ஆகும். எனவே, பிர்அவ்னுடைய குடும்பத்திலிருந்த அந்த விசுவாசி யானவர், தனது ஈமானை மறைக்காது வெளிப்படுத்தி, ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. அது பயனுள்ளதாகவும் இருந்திருக்காது.

      

மேலும், அல்குர்ஆன் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் முஷ்ரிக்குகளிடம் அகப்பட்ட சில முஸ்லிம் வீரர்கள் மற்றும் முஜாஹிதீன்களை தகிய்யாவை பேணுமாறு கட்டளை பிறப்பித்தது.

'முஃமின்கள், தங்களைப் போன்ற முஃமின்களை யன்றி காபிர்களை தங்களது பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டாம். எவரேனும் அவர்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி அவ்வாறு செய்தால், அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் எவ்விதத்திலும் சம்பந்தமில்லை.' (03:28)

இதன் படி 'தகிய்யா' எனும் ஈமானை மறைத்தலானது, பிடிவாதக் குணம் படைத்த அடக்கு முறையாளர்கள் மற்றும் வெறிபிடித்த கூட்டத்தாரிடமிருந்து தனது உயிர், உடைமை மற்றும் மரியாதை என்பவற்றுக்கு ஆபத்து வருவது நிச்சயம் எனவும் ஈமானை வெளிக் காட்டுவதால் குறிப்பிடத்தக்க எந்தப் பிரதிபலனும் கிடைக்காது என்றும் உணரப்படும் போது மாத்திரமே ஆகுமான தென்பது குறிப்பிடப்படுகின்றது. இது போன்ற இடங்களில், ஒருவர் வீணாகத் தன் உயிரைக் கொடுத்து, தன் மூலமாக சமூகம் பெறவுள்ள பயன்களை இல்லாது செய்து விடக்கூடாது.

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் குறிப்பிடுகின்றார்கள். 'தகிய்யா என்பது முஃமினுடைய பாதுகாப்புக் கேடயமாகும்.'  (வசாயில், பாக.11, பக்.461)

கேடயம் என்ற வாசகம் மிகவும் அழகானதாகும். எதிரிகளிடமிருந்து  பாதுகாப்புப் பெறுவதற்கான கேடயமாக இங்கு 'தகிய்யா' வர்ணிக்கப்படுகின்றது.

ஹஸ்ரத் அம்மார் (ரழி) அவர்கள் தகிய்யா செய்து, பின் அதுபற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களிடம் கூறிய போது, நபியவர்கள் அதனை ஆமோதித்த சம்பவம், வரலாற்றில் மிகவும் பிரபல்யமான நிகழ்வாகும். இதை அதிகமான குர்ஆன் விரிவுரையாளர்களும் வரலாற்றாசிரியர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் தத்தமது நூற்களில் குறிப்பிட்டுள்ளனர். வாஹிதீ தனது அஸ்பாபுன்; நுஸூலிலும், தபரி, குர்துபி, ஸமஹ்ஷரி, பஹ்ருர்ராசி, நைஸாபூரி, பைழாவி போன்றோர் தமது பிரசித்தி பெற்ற அல்குர்ஆன் விரிவுரைகளில் சூரா நஹ்ல் 106ம் வசனத்தின் விளக்கவுரையின் கீழ் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

போர் வீரர்கள், போர்க்களத்தில் தம்மையும் தமது ஆயுதங்களையும் மறைத்துக் கொள்வதும் போரின் இரகசியங்களை எதிரிகள் அறிந்து விடாது மறைப்பதும் மனிதர்களது வாழ்வில் அவ்வப்போது நடைபெறும் சம்பவங்களாகும். இவை அனைத்தும் தகிய்யா வகையைச் சேர்ந்ததாகும். மொத்தத்தில் தகிய்யா அல்லது மறைத்தல் என்பது, வெளிப்படுத்துவதன் மூலம் பயன்பாடின்றி ஆபத்தே வரும் எனக் காணும் இடத்தில் மறைக்க வேண்டிய விஷயங்களை வெளிப்படுத்ததாது இரகசியம் பேணுவதைக் குறிக்கிறது. இது அறிவு ரீதியாகவும் மார்க்க ரீதியாக வும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நியதியாகும். ஷீயாக்கள் மாத்திர மன்றி, உலக முஸ்லிம்கள் அனைவருமே, அறிவு ஞானம் படைத்த மனிதர்கள் எல்லோரும் இதனை நடைமுறைப் படுத்து கின்றார்கள்.

      back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next