முக்கிய விடயங்கள்எல்லாக் காலங்களுக்கும் சமுதாயங்களுக்கும் தேவையான சட்ட திட்டங்களையும் வழிகாட்டல்களையும் தன்னகத்தே கொண்டிராவிட்டால், 'பரிபூரணமாக்கி விட்டேன்' என இறைவனால் விதந்துரைக்க முடியுமா?

அண்ணல் நபி ஸல்லல்வாஹு அலைஹி வஆலிஹி தமது இறுதி ஹஜ்ஜின் போது, மக்களைப் பார்த்து இவ்வாறு குறிப்பிட்டார்கள்:

''மனிதர்களே! அல்லாஹ் மீது ஆணையாக, எவை உங்களை சுவர்க்கத்திற்கு சமீபமாக்கி, நரகை விட்டும் தூரமாக் குமோ அவை அனைத்தையும் நான் ஏவியுள்ளேன். மேலும், எவை உங்களை நரகிற்கு சமீபமாக்கி சுவனத்தை விட்டும் தூரமாக் குமோ அவை எல்லாவற்றையும் நான் தடுத்துள்ளேன்.'    (உசூலுல் காஃபீ, பாக.2, பக்.74)

மேலும் இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் குறிப்பிட்டார்கள்:

      

 'இஸ்லாமிய சட்டங்களில், விரலின் நுனியினால் உடம்பில் உராய்ந்தால் அதற்குரிய தண்டம் பற்றிக் கூட, நபியவர்கள் கூற ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் எழுதிக் கொண்டார்.'      (ஜாமிஉல் அஹாதீஸ், பாக.1, பக்.18)

இந்நிலையில் தீர்க்கமான முடிவுகளுக்கு இட்டுச் செல்லாத கியாஸ், இஸ்திஹ்ஸான் போன்ற முறைக ளினால் பெறும் முடிவுகளை மார்க்க சட்டங் களைத் தொகுத்தெடுப்பதற்கான மூலாதாரங்களாகக் கொள்வது பொருத்தமற்றதாகவே நாம் கருதுகிறோம்.

9. தகிய்யா என்பது நயவஞ்சகமா?

பிடிவாதம் பிடித்த முரடர்களிடம் அகப்பட்டுக் கொண்ட ஒருவர் தனது கொள்கையைப் பற்றி வெளிப் படையாகத் தெரியுமிடத்து ஆபத்தான நிலைக்குத் தள்ளப்படும் என்று அஞ்சுகின்ற நிலையில், கொள்கையை வெளியிடுவதால் எப் பிரயோசனமும் ஆகப் போவதில்லை எனக் கண்டால் தன் கொள்கையை மறைத்துக் கொள்வதில் தப்பில்லை. இதுவே 'தகிய்யா' எனப்படுகின்றது. இவ்விடயம், அறிவு ரீதியானது மட்டுமன்றி அல்குர்ஆனின் வசனங்களும் கூட பறைசாற்றும் ஒரு விசயமாகும்.

அல்குர்ஆன், பிர்அவ்னுடைய குடும்பத்திலிருந்த ஒரு முஃமினுடைய விடயத்தை இவ்வாறு விபரிக்கின்றது:

'பிர்அவ்னுடைய குடும்பத்தினரில், தனது ஈமானை மறைத்து வைத்திருந்த முஃமினான மனிதர் சொன்னார், 'ஒரு மனிதரை, அவர் அல்லாஹ்தான் எனது இரட்சகன் என்று கூறியதற்காக நீங்கள் கொலை செய்து விடுவீர்களா? அவரோ உங்கள் இரட்சகனிட மிருந்து தெளிவான அத்தாட்சிகளை திட்டமாகக் கொண்டு வந்திருக்கின்றார்.'  (40:28)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next