முக்கிய விடயங்கள்'அவர்கள் நம்மை மறுத்து விட்டனர். ஆதலால், நாம் பெரும் அழிவை ஏற்படுத்தக் கூடிய வெள்ள த்தை அவர்களுக்கு அனுப்பினோம்.'    (34:16)

வேறு சில அனர்த்தங்களுக்குப் பின்னணியாக அமைவது அவற்றின் மூலம் மக்களிடையே உண்மையின் பால் விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். இவ்வகைச் சோதனைகள் ஒரு புறத்தில் அல்லாஹ்வின் அருளாகவும் கொள்ளப்படுகின்றது.

'மனிதர்களின் கைகள் சம்பாதித்த தீயவற்றின் காரணமாக கரையிலும் கடலிலும் குழப்பம் வெளிப்பட்டு விட்டது. அவர்கள் செய்தவற்றில் சிலதை, அவர்கள் சுவைக்கும் படி செய்வதற்காக, அவன் இவ்வாறு சோதிக்கிறான். அதன் மூலம் அவர்கள் அவன்பால் திரும்பி விடலாம்.'      (30:41)

      

மற்றொரு வகையான அனர்த்தங்கள் மனிதர்கள் தாமாகவே வலிந்து ஏற்படுத்திக் கொண்டவையாகும்.

'நிச்சயமாக, அல்லாஹ் எந்தவொரு கூட்டத்தின ரையும், அவர்கள் தங்களைத் தாங்களே மாற்றிக் கொள்ளாதவரை மாற்றமாட்டான்.'   (13:11)

'உனக்கு யாதொரு நன்மை ஏற்பட்டால், அது அல்லாஹ் வினால் ஏற்பட்டது. இன்னும் உனக்கு யாதொரு தீங்கு ஏற்பட்டால், அது உன்னால் தான் உனக்கு ஏற்பட்டது.'  (04:79)

6. மார்க்க சட்டத்தின் நான்கு மூலாதாரங்கள்

பிக்ஹ் எனப்படும் மார்க்கத்தின் சட்டங்கள் நான்கு மூலாதாரங்களிலிருந்து தொகுக்கப்படுகின்றன. அவை யாவன:

       1. அல்குர்ஆன்:  இது இஸ்லாமிய அறிவு, சட்டதிட்டங்கள் அனைத்தினதும் ஊற்றுக் கண்ணாகும்.

       2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களினதும், அவர்களது அஹ்லுல்பைத்  வழியில் தோன்றிய பரிசுத்த இமாம்களினதும் வழிமுறைகள்.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next