முக்கிய விடயங்கள்பிறிதோர் இடத்தில், இறைவசனங்களை விபரிப்பதன் நோக்கம், மனிதர்களது அறிவு, சிந்தனை, விளங்கும் தன்மையை அதிகரிப்பதற்காகவே என்று கூறுகின்றது.

'அவர்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் நம்முடைய வசனங்களை எவ்வாறு பலவகை களில் திருப்பித் திருப்பிக் கூறுகின்றோம் என்று நீர் கவனிப்பீராக.' (06:65)

தீயவற்றிலிருந்து நல்லவற்றைப் பிரித்தெடுப் பதற்கு சிந்தனையைப் பயன்படுத்துமாறு அனைத்து மனிதர்களு க்கும் அல்குர்ஆன் அழைப்பு விடுக்கின்றது

'குருடனும், பார்வையுடையோனும் சமமாவார் களா? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? என வினவுங்கள்.'  (06:50)

உண்மையை விளங்கிக் கொள்வதற்கு அல்லாஹ்வின் அருட்கொடைகளான அறிவு, கண், காது முதலானவற்றைப் பயன்படுத்தாதவர்களை அல்குர்ஆன், மிக இழிவானவர்களாகக் கருதுகின்றது.

'நிச்சயமாக, அல்லாஹ்விடம், மிருகங்களிலும் மிகக் கெட்டவை, சிந்தித்து விளங்கிக் கொள்ளாது செவிடர்களாக வும் ஊமைகளாகவும் இருப்போர் தான்.'  (08:22)

இவை தவிர, இன்னும் பல வசனங்களும் அறிவின் முக்கியத்துவம் பற்றிப் பேசுகின்றன.அறிவுக்கு இஸ்லாத்தில் இத்தகைய முக்கியத்துவம் வழங்கப் பட்டிருக்கும் போது, இஸ்லாத்தின் அடிப்படையிலும் அதனையொட்டிய பிரிவுகளிலும் அறிவின் பங்கைக் குறைத்து மதிப்பிடுவது எவ்வகையில் நியாயமாகும்?

5. பாரிய அனர்த்தங்கள் ஏன்?

உலகில் நிகழ்கின்ற பூகம்பம், புயல் மற்றும் பாரிய இயற்கை அனர்த்தங்கள் அழிவுகளின் பின்னணி பற்றிய நமது நம்பிக்கையின் படி, அவை சிலவேளை இறைவனின் தண்டனையாக வரும்.

'நம்முடைய கட்டளை வந்ததும், அவர்களது ஊரின் மேற்பகுதியை அதன் கீழ்ப்பகுதியாக தலைகீழாக ஆக்கிவிட்டோம். இன்னும், அதன் மீது சுடப்பட்ட கற்களை மழையாகப் பொழியச் செய்தோம்.' (11:82)

வரம்பு மீறிய 'ஸபஉ' நகரவாசிகளைப் பற்றிக் குறிப்பிடும் அல்குர்ஆன் இவ்வாறு கூறுகின்றது :back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next