முக்கிய விடயங்கள்மனிதர்களுக்கு மாத்திரமல்ல, தான் படைத்த எந்த வோர் உயிரினத்துக்கும் அல்லாஹ் அநீதியிழைக் கமாட்டான்.

'மேலும், இறைவன் உலகத்தாருக்கு அநீதியை நாடமாட்டான்.' (03:108)

அல்லாஹ், மனிதர்களால் செய்ய முடியாத எந்த விடயத்தையும் அவர்களில் திணிப்பதில்லை. அவ்வாறு திணித்து, அவற்றை அவர்கள் செய்யாது விட்டமைக்காக அவன் தண்டனை வழங்குவானானால், அவன் நீதியாளன் என்பதற்கு அர்த்தமில்லாது போய்விடும்.

'இறைவன், மனிதர்களுக்கு அவர்களது சக்திக்கு அப்பாற் பட்டதை ஏவமாட்டான்.' (02: 280)

3. மனிதன் சுதந்திரமானவன்

அல்லாஹ் மனிதனை தெரிவுச் சுதந்திரம் உள்ளவனாகவே படைத்துள்ளான். மனிதர்களது செயல்கள் அனைத்தும் அவர்களது விருப்பத்தின் படியே இடம்பெறுகின்றன என்று நாம் நம்புகின் றோம். இதற்கு மாறாக மனிதனின் செயல்பாடுகளை அவரவரது விதி அல்லது இறை நியதி நிர்ணயிக்கிறது எனக் கொள்ளுமிடத்து மனிதர்களது குற்றத்திற்காக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதும், நல்லவர்களுக்கு நற்கூலி வழங்குவதும் அர்த்தமற்றதாகிவிடும். எனவே, இத்தகைய சீரற்ற போக்குகள் அல்லாஹ்வில் அறவே இருக்க முடியாதவையாகும்.

சுருங்கக் கூறின், அநேகமான விடயங்களைப் பிரித்தறி வதிலே, மனிதனது அறிவு, சிந்தனை என்பன சுதந்திரமாக செயற்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்வது மார்க்கத்தின் தவிர்க்க முடியாத அம்சமாக அமைகின்றது. ஆனால், மனிதனது குறுகிய, வரையறைக்குட்பட்ட அறிவின் மூலமாக எல்லா உண்மை களையும் புரிந்து கொள்ள முடியாதிருப்பதன் காரணமாகவே, அல்லாஹ் தன் நபிமார்களையும் வேதங்களையும் இவ்வுலகுக்கு அனுப்பினான்.

4. அறிவு (அக்ல்) ஒரு மூலாதாரமே

மேற்கூறிய விளக்கங்களின் அடிப்படையில், அறிவு (அக்ல்) என்பதுமார்க்கத்தின் அடிப்படை மூலாதாரங்களில் ஒன்றாகும் என நாம் கருதுகின்றோம். அறிவு, ஒரு விடயத்தை உறுதியாக விளங்கி, அறிந்து, அதைப் பற்றி தீர்ப்பு வழங்கும் தன்மை கொண்டது.

உதாரணமாக, அநியாயம், பொய், கொலை, களவு முதலான செயல்கள் தீயவையென குர்ஆனிலும், ஹதீஸிலும் விளக்கம் தரப்படவில்லையென வைத்துக் கொள்வோம். அத்தகைய சந்தர்ப்பத்தில் அறிவு அவை தீயவையென இனங் காண்பித்திருக்கும். எனவே தான், அறிவு (அக்ல்) என்பது முக்கியத்துவம் மிக்க ஓரிடத்தைப் பெறுகின்றது. இம்முக்கியத் துவத்தை விபரிக்கும் அல்குர்ஆன் வசனங்கள் பல உள்ளன.

ஏகத்துவப் பாதையை ஆய்வு செய்வதற்காக, வானம் பூமியிலிருக்கும் இறை அத்தாட்சிகளைப் படித்து ப்பார்க்க வருமாறு, அல்குர்ஆன் அறிவுடையோருக்கு அழைப்பு விடுக்கின்றது.

'நிச்சயமாக வானங்கள், பூமியைப் படைத்திருப்பதிலும், இரவும் பகலும் மாறி மாறி வருவதிலும் அறிவுடை யோருக்கு பல அத்தாட்சிகள் இருக்கின்றன.' (03:190)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next