முக்கிய விடயங்கள்எனவே, மேற்குறிப்பிடப்பட்டது போன்று, முஸ்லிம்கள் தமது வாழ்நாள் முழுவதும், பாவங்களை விட்டு தூய்மையானவர்களுடனும் உண்மையாளர்க ளுடனும் இருப்பது அவசியமாகும்.

'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ் வைப் பயந்து கொள்ளுங்கள். இன்னும் உண்மையாளர்களுடன் ஆகிவிடுங்கள்.'    (09:119)

எந்த ஒரு விடயத்தையும் உண்மையைக் கொண்டே நுழைந்து, உண்மையைக் கொண்டே வெளியேறுமாறு அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பணிப்பதிலிருந்து, உண்மையின் முக்கியத்துவம் தெளிவாகின்றது.

'என் இறைவனே! என்னை உண்மையின் பிரவேசமாக பிரவேசிக்க வைப்பாயாக. இன்னும் உண்மையான வெளியேற்றுதலாக என்னை வெளியேற்றி வைப்பாயாக என்று (நபியே!) நீர் கூறுவீராக.' (17:80)

அல்லாஹ்வின் புறமிருந்து எந்தவொரு நபியும் தனது அடிப்படைப் பணியில் உண்மை, நம்பிக்கை இல்லாது அனுப்பப் படவில்லை.

'வாக்கில் உண்மை, நல்லவர் கெட்டவர் வேறுபாடின்றி நாணயமாக நடத்தல் என்பவை இல்லாமல் எந்த நபியையும் அல்லாஹ் அனுப்ப வில்லை.'   (பிஹார், பாக.2, பக்.104)

      

இவையனைத்தும் அல்லாஹ்வின் புனித வேதமான அல்குர்ஆனும், பெருமானாரதும் அவர்களது வழிவந்த இமாம்கள தும் வழிமுறைகளும் எடுத்துரைக்கும் முக்கிய அம்சங்களாகும். இவற்றைப் பின்பற்றுவதிலும், பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதிலும், அல்லாஹ் ஈருலக வெற்றியை நிர்ணயித்து வைத்துள்ளான்.

முடிவாக..

      

இச்சிறு நூலில், அஹ்லுல் பைத்துகளைப் பின்பற்றக் கூடிய ஷீயாக்கள் பற்றிய தகவல்களும், அவர்களது கொள்கைகள், நடைமுறைகள் என்பனவும் எவ்வித ஒளிவு மறைவுமின்றி மிகச் சுருக்கமாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. அவற்றுக்கு ஆதாரமாக, அல்குர்ஆன் வசனங்களும் பெருமானாரதும் இமாம்களதும் ஹதீஸ்களும், முஸ்லிம் அறிஞர்களின் நூற்களும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளன. இத்தொகுப்பின் மூலமாக கீழ்க் காணும் பெறுபேறுகள் கிடைக்கும் என நாம் நம்புகின்றோம்.

1.முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவரும் இதனை வாசிப் பதன் மூலம் ஷீயாக்களின் உண்மையான கொள்கையை அறிந்து கொள்ள முடியும் என நம்புகின்றோம்.

2. இது, ஷீயாக்களைப் பற்றிய தெளிவான அறிவில்லாது அவர்களைப் பற்றி தவறான அபிப்பிராயம் கொண்டுள்ளவர்களுக்கும் ஷீயாக்களைப் பற்றிய தகவல்களை அவர்களது எதிரிகளிடமிருந்து பெற்றுக் கொண்டவர்களுக்கும் ஷீயாக்களைப் பற்றிய உண்மையை அறிந்து கொள்வதற்கான தெளிவான வழிகாட்டியாக அமையும் என நம்புகிறோம்.

3. அஹ்லுல்பைத்தைப் பின்பற்றுபவர்களுக்கும் ஏனைய மத்ஹபுகளைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையே காணப்படும் கருத்தொற்றுமை அவர்களிடை யேயான ஒற்றுமைக்கு மேலும் ஒரு தூண்டுகோலாக விளங்க முடியும். ஏனெனில், மத்ஹபுகள் பல இருப்பினும், அவற்றுக்கிடையிலான வேறுபாடுகள் சொற்பமாகவும் ஒற்றுமைகளே அதிகமாகவும் காணப் படுகின்றன.

4- அனைத்து மத்ஹபுகளைச் சேர்ந்த அறிஞர்களும் ஒன்றிணைந்து கூட்டாக ஆய்வுகளை மேற்கொண்டால், முஸ்லிம்களிடையேயுள்ள இச்சிறு வேறுபாடுகளை அகற்றிவிட முடியும். அல்லது வேறுபாடுகளைக் குறைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் முஸ்லிம்களது பிளவை நீக்கி, ஒற்றுமையை அவர்களிடையே கட்டியெழுப்பலாம். ஈரானில் ஸாஹிதான் நகரில் கடந்த காலங்களில் இத்தகைய பல முயற்சிகள் நடைபெற்றன. ஷீயா மற்றும் ஸுன்னி உலமாக்கள் தமக்கிடையே காணப்படும் ஒற்றுமை வேற்றுமைகள் பற்றி ஆய்வு நடாத்தினர். அவர்களது நல்லுறவுக்கு அது பெருந்துணையாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது ரட்சகா, நமக்கும் நமக்கு முன் சென்ற ஈமானிய சகோதரர்களுக்கும் உன் மன்னிப்பை அள்ளி வழங்குவாயாக. விசுவாசிகள் பற்றி நம் மனதில் கசடு ஏற்படாமல் பாதுகாப்பாயாக. ரட்சகா, நீயோ மிக்க கருணையுள்ளோனும் இரக்கமுள்ளோனும் அல்லவா.

முற்றும்.

 back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16