முக்கிய விடயங்கள்'ஜஃபர் இப்னு முஹம்மத் -அலைஹிஸ்ஸலாம்- அவர்களை விட சிறந்த மார்க்க சட்டமேதை எவரையும் நான் கண்டதில்லை.'    (தத்கிரதுல் ஹுப்பாழ், பாக.1, பக்.166)

மாலிகீ மத்ஹபைத் தோற்றுவித்த இமாம் மாலிக் இப்னு அனஸ் அவர்கள் குறிப்பிட்டார்கள், 'நான் சிறிது காலம் இமாம் ஜஃபர் இப்னு முஹம்மத் அஸ்ஸாதிக் (அலைஹிஸ் ஸலாம்) அவர்களிடம் அடிக்கடி சென்று வந்தேன். நான் செல்லும் போதெல்லாம் அவர்கள் தொழுது கொண்டிருப்பார் அல்லது நோன்பாளியாக இருப்பார் அல்லது குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பார். இம்மூன்றுமல்லாத வேறொரு நிலையில் நான் அவர்களைக் காணவில்லை. இமாமவர்களை விட அறிவிலும் வணக்கத்திலும் உயர்ந்த ஒருவரை எவரும் கண்டிருக்கவோ கேள்விப்பட்டிருக்கவோ மாட்டார்கள்.'      (தஹ்தீபுத் தஹ்தீப், பாக.2, பக்.104)

இது சிறியதொரு தொகுப்பாக இருப்பதால், ஏனைய இமாம்களைப் பற்றிய இஸ்லாமிய அறிஞர்களின் கூற்றுக்களைக் குறிப்பிடுவதைத் தவிர்ந்து கொள்கின்றோம்.

20. அறிவுத்துறை வளர்ச்சியில் ஷீயாக்களின் பங்கு

இஸ்லாமிய அறிவுத் துறை வளர்ச்சிக்கு ஷீயாக்கள் அளப்பரிய தொண்டாற்றியுள்ளனர். இஸ்லாமிய அறிவு வளர்ச்சிக்கு, ஷீயாக்களிடமிருந்தே பாரிய பங்களிப்பு வழங்கப் பட்டது எனக் கூறுவோரும் உள்ளனர். இதை நிரூபிக்கும் பல ஆய்வு நூற்களை எழுதியுமுள்ளனர். எவ்வாறாயினும் அறிவுத்துறை வளர்ச்சியின் தோற்றத்தில் ஷீயாக்கள் முக்கிய பங்கு வகித்தார்கள் என்பது உண்மையாகும்.

இஸ்லாமிய அறிவு, மற்றும் இஸ்லாமிய கலைகள் தொடர்பாக ஷீயா அறிஞர்களால் எழுதப்பட்டுள்ள பெருந்தொகையான நூற்கள், இதற்கு சிறந்த சான்றாக விளங்குகின்றன. இவை, பிக்ஹு, தப்ஸீர், உசூல், உலூமுல் குர்ஆன், இல்முல் கலாம் உள்ளிட்ட பல துறைகளையும் உள்ளடக்கிக் காணப்படுகின்றன. இவற்றில் அதிகமானவை, இன்றும் உலகின் பல வாசிகசாலைகளில் ஆய்வுக்கும் வாசிப்புக்குமென பாதுகாத்து வைக்கப் பட்டுள்ளன.

ஷீயா அறிஞர்களால் எழுதப்பட்ட அனைத்து நூற்களின் பெயர்களையும் அட்டவணைப்படுத்தி 'அல் தரீஆ இலா தஸானீபிஷ் ஷீஆ' எனும் பெயரில் கோர்வை செய்து வைக்கப்பட்டுள்ளது. இதில் சுமார் 68 ஆயிரம் கிரந்தங்கள் பற்றிக் குறிப்பிடப் பட்டுள்ளது. 26 பாகங்களில் வெளிவந்துள்ள இந்நூலை ஆகா புஸுர்க் தெஹ்ரானீ எனும் பிரபல்யமான ஷீயா அறிஞர் தொகுத்துள்ளார். இவ்வட்டவணை முந்திய பத்தாண்டு வரை உரியதாகும். அக்காலப்பகுதிக்குரிய அச்சுநூற்கள் மாத்திரமன்றி, கையேட்டுப் பிரதிகளும் தொகுக்கப்பட்டு, அவை தற்போது அச்சுருப் பெற்றுக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் இப்பணி பாரியளவில் தொடர்ச்சியாகமுன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

21. உண்மையும் நம்பிக்கையும்

உண்மை, நம்பிக்கை என்பன இஸ்லாத்தின் முக்கிய தூண்களாகும்.

'அல்லாஹ் கூறுகின்றான், இது உண்மையாளர் களுக்கு அவர்களது உண்மை, பயனளிக்கக் கூடிய நாளாகும்.'  (05:119)

அல்குர்ஆன் வசனங்களில், மறுமை நாளில் கொடுக்கப் படும் அடிப்படைப் பயன்பாடு அவர்களது உண்மைச் செயலுக்கான கூலியாகும் என்ற கருத்து குறிப்பிடப்படுகின்றது. அதாவது, ஈமான், அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கை உட்பட, வாழ்வின் அனைத்து நிலைகளிலும் உண்மையைப் பேணி வருவது இன்றியமையாததாகும்.

'உண்மையாளர்களுக்கு, அவர்களது உண்மை யின் காரணத்தால் அல்லாஹ் நற்கூலி வழங்குகிறான்.'  (33:24)back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next