முக்கிய விடயங்கள்'குதுபுல் அர்பஆ' எனப்படும் நான்கு கிரந்தங்கள் அவற்றில் முக்கியமானவை. அவையாவன, அல் காஃபீ, மன் லா யஹ்ளுருஹுல் பகீஹ், தஹ்தீப், இஸ்திப்ஸார் ஆகியவை யாகும். இவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்கள் ஒவ்வொன்றின தும் ஏற்றுக் கொள்ளும் தன்மை அவற்றினது அறிவிப்பாளர்களின் வரலாற்றை யும் வாழ்வையும் ஆதாரமாகக் கொண்டே தர நிர்ணயம் செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அறிவிப்பாளரது வாழ்க்கை மார்க்கத்துடன் முரண்படாததாகவும் ஒழுக்கம் மிக்கதாக வும் இருக்கும் பட்சத்தில் குறித்த ஹதீஸ் நமபத் தகுந்தது (ஸஹீஹ்) எனவும் இல்லையெனில் மஷ்கூக் (சந்தேகத்திற்குரியது), ழஈப் (பலவீனமானது) எனவும் தீர்மானிக்கப்படும். றிஜால் பற்றிய கிரந்தங்களில் ஹதீஸ் அறிவிப்பாளர்கள் பற்றிய விளக்கங்கள் காணப்படுகின்றன.

ஷீயாக்களது கிரந்தங்களுக்கும் சுன்னாக்களது கிரந்தங் களுக்குமிடையே சில வித்தியாசங்கள் உள்ளன. புஹாரி, முஸ்லிம் போன்ற கிரந்தங்களைத் தொகுத்தவர்கள் ஸஹீஹானவை எனத் தரப்படுத்தப் பட்டவற்றையே கோர்வை செய்தார்கள். அதனால் அவற்றில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ஹதீஸையுமே அஹ்லுஸ் சுன்னாக்களின் கொள்கையை விளங்கிக் கொள்வதற்குப் பயன் படுத்த முடியும். (மேலதிக விபரங்களுக்கு ஸஹீஹ் முஸ்லிம், பத்ஹுல்பாரீ ஃபீ ஷரஹில் புஹாரீ முன்னுரையைப் பார்க்கவும்)

ஆனால், ஷீயாக்களைப் பொறுத்தவரை, பொதுவாக அஹ்லுல் பைத் பாரம்பரியத்துடன் சம்பந்தப்பட்ட றிவாயத்துகளை முதலில் கிரந்தங்களில் கோர்வை செய்துள்ளனர். அவற்றில் சரியானவற்றையும், பலவீனமானவற்றையும் அறிவதை இல்முர் ரிஜால் (ஹதீஸ் அறிவிப்பாளர்களின் நிலைகளை அறிவதற்கான அறிவு) பற்றிய அறிஞர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

19. இரு பெரும் கிரந்தங்கள்

ஷீயாக்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் இரண்டு முக்கிய கிரந்தங்கள் உள்ளன. இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களின் பொன்மொழிகள் அடங்கிய நஹ்ஜுல் பலாகா முதலா வதாகும். சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், மர்ஹூம் சரீப் ரிழா என்பவரால் தொகுக்கப்பட்ட இக்கிரந்தம், இமாம் அலீயின் குத்பாக்கள், கடிதங்கள், பொன்மொழிகள் என மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உயர் இலக்கண இலக்கிய நெறிகளுடனும் அழகிய சொல்லமைப்புகளுடனும் அமைந்துள்ள இமாம் அலீயின் இப்பொன்மொழிப் பேழை, அதை வாசிப்போர் எம்மதத் தையும் எந்த மத்ஹபையும் சேர்ந்தவராக இருப்பினும் அவர்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் அளவுக்கு கருத்தாழமிக்கதாகக் காணப்படுகின்றது. ஏகத்துவம், இம்மை-மறுமை, நல்லொழுக்கம், அரசியல், சமூகவியல் என பல்வேறு விடயங்கள் தொடர்பான தெளிவான கருத்துகளை அது உலகுக்கு வழங்குகின்றது. முஸ்லிம்கள் மட்டுமன்றி, ஏனைய மதத்தவர்களும் படித்துப் பயன்பெறும் அற்புதக் கருத்துகளை அது கொண்டிருக்கின்றது.

நஹ்ஜுல் பலாகாவை அடுத்து, முக்கியத்துவம் பெறும் கிரந்தம், ஷீயாக்களின் நான்காவது இமாமான இமாம் அலீ இப்னு ஹுஸைன் அஸ்ஸஜ்ஜாத் செய்னுல் ஆபிதீன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆத் தொகுப்பான, 'சஹீபதுஸ் ஸஜ்ஜாதிய்யா' ஆகும். இது, சிறந்த கருத்தாழமிக்க துஆக்களின் தொகுப்பாகும். உண்மையில், இது நஹ்ஜுல் பலாகாவில் இருக்கும் குத்பாக்களின் பாணியையே வேறொரு விதத்தில் தெளிவுபடுத்துகின்றது. அதன் ஒவ்வொரு வசனமும் மனிதர்களுக்குப் புதிய கருத்துகளை அறிமுகப் படுத்துகின்றது. அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யும் முறை, அல்லாஹ்வுடன் முனாஜாத் செய்யும் ஒழுங்கு என்பவற்றையும் கற்றுத்தருகின்றது. அதிலுள்ள துஆக்கள், உடலுக்கும் உள்ளத்துக்கும் புத்துணர்ச்சியை யும், ஆரோக்கியத்தையும் வழங்கக் கூடிய சிறப்பியல்பு கொண்டவையாக அமைந்துள்ளமை அதன் முக்கிய சிறப்பம்சமாகும்.

ஷீயாக்களின் அதிகளவிலான ஹதீஸ்கள், ஐந்தாம், ஆறாம் இமாம்களான இமாம் பாக்கிர் அலைஹிஸ் ஸலாம், இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் ஆகியோர் வழியாகவும் எட்டாவது இமாமான இமாம் ரிழா அலைஹிஸ் ஸலாம் அவர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவர்களது காலத்திலேயே, உமையாக்களதும், அப்பாசியர்களதும் கொடுமைகள் ஓரளவு தணிந்திருந்தன. இதனால், ஒப்பீட்டளவில் சுதந்திரமாகவும் பகிரங்கமாகவும் செயற்படுவது இவர்களுக்குச் சாத்திய மாயிற்று.

 

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் அவர்களிடமிருந்தே அதிகமான ஹதீஸ்கள் அறிவிக்கப் பட்டுள்ளமையால், ஷீயாக்களின் மத்ஹப், ஜஃபரியா மத்ஹப் என்று அழைக்கப்படுகின்றது. இமாமவர்கள், அபூஹனீபா, மாலிக் உட்பட சுமார் நான்காயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு ஹதீஸ், பிக்ஹ், மற்றும் பல பாட போதனைகளை நிகழ்த்தியுள்ளார்கள்.

      

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் பற்றி, ஹனபி மத்ஹபின் ஸ்தாபகர் இமாம் அபூஹனீபா அவர்கள் குறிப்பிடுவதாவது:back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next