முக்கிய விடயங்கள்17. ஷீயா மத்ஹபின் பரம்பல்

ஷீயாக்களின் மத்திய தளமாக ஈரான் இருக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இஸ்லாத்தின் ஆரம்ப நூற்றாண்டில், பல மத்திய இடங்களை அது கொண்டிருந்தது. அவற்றில் கூபா, எமன், மதீனா என்பவை முக்கியமானவை. சிரியாவில் ஹாசிமீக்களுக்கு எதிரான உமையாக்களின் கடுமையான பிரசாரம் காணப் பட்ட போதிலும் அங்கும் பல மத்திய நிலையங்கள் காணப்பட்டன. எவ்வாறிருப்பினும் ஷீயாக்களின் பரம்பல் ஈராக் தேசத்தில் இருந்ததை விட அதிகமாக வேறு எங்கும் காணப்படவில்லை.

பரந்து விரிந்த எகிப்திலும் ஷீயாக்களின் ஒரு குழுவினர் எப்போதும் இருந்து வந்தனர். பாத்திமீக்களின் கிலாபத் இடம்பெற்ற காலத்தில் ஷீயா பாரம்பரியங்களைப் பின்பற்றுகின்ற ஒருவரது கையிலே தான் ஆட்சியதிகாரம் கூட இருந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

உமையாக்களுடைய ஆட்சியில், சிரியாவில் வாழ்ந்த ஷீயாக்கள் சொல்லொணாத கொடுமை களுக்கும் அடக்குமுறைகளுக்கும் உள்ளாக்கப்பட்டனர். அப்பாசியரு டைய ஆட்சியிலும் இந்நிலையே தொடர்ந்தது. அதிகமானோர் சிறைச்சாலைகளில் தமது உயிர்களை இழந்து 'ஹீதுகளாயினர். சிலர், இக்கொடுமை களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக கிழக்குத் திசை நோக்கிச் சென்றனர். மேற்குத் திசையில் எகிப்துப் பக்கமாகச் சென்றோரில் இத்ரீஸ் இப்னு அப்தில்லாஹ் இப்னு ஹஸன் குறிப்பிடத்தக்கவராவார். பின் அங்கிருந்து அவர் மொரோக்கோவிற்குச் சென்றார். மொரோக்கோவிலிருந்த ஷீயாக்களின் உதவியுடன் அங்கு அவர் உருவாக்கிய அரசாட்சி 'இத்ரீஸீகளின் ஆட்சி' என வழங்கப்பட்டது. இது ஹிஜ்ரி 2ம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலிருந்து, ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டின் கடைசி வரை நீடித்திருந்தது.

எகிப்திலிருந்த ஷீயாக்கள், பாத்திமா நாயகியின் மகனான இமாம் ஹுஸைனின் வழித் தோன்றல்களாவர். எகிப்தில் ஷீயாக்களுக்கென பிரத்தியேக அமைப்பொன்று இருக்க வேண்டுமென்ற மக்களது ஏகோபித்த கருத்தினடிப்படையில் ஹிஜ்ரி 4ம் நூற்றாண்டில் உத்தியோக பூர்வமாக பாத்திமீக்களின் ஆட்சியை உருவாக் கினர். கெய்ரோ நகரத்தையும் அவர்களே நிர்மாணித்தனர். பாத்திமி கலீபாக்கள் மொத்தமாக 14 நபர்களாவர். அவர்களில் பத்துப் பேர் எகிப்தில் ஆட்சி செலுத்தினர். சுமார் மூன்று நூற்றாண்டுகள் எகிப்திலும் ஆபிரிக்காவின் ஏனைய பகுதிகளிலும் ஆட்சி புரிந்துள்ளனர். அல்அஸ்ஹர் பள்ளிவாசலும் அல்அஸ்ஹர் பல்கலைக்கழகமும் அவர்கள் மூலமாகவே நிர்மாணிக்கப் பட்டன. (தாயிரத்துல் மஆரிப் - தெஹ்ஹொதா - தாயிரத்துல் மஆரிப் - பரீத் வுஜ்தீ)

தற்காலத்தில் உலகின் பல பாகங்களிலும் ஷீயாக்கள் வாழ்ந்து வருகின்றனர். சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணத்திலும் அதிகமான ஷீயாக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். ஏனைய மத்ஹபுகளைக் சேர்ந்தோருடன் சுமுகமான உறவு அங்கு காணப்படுகின்றது.

முஸ்லிம்களின் விரோதிகள், ஷீயாக்களுக்கும் ஏனைய மதஹபுகளைச் சேர்ந்த சகோதரர்களுக்கு மிடையே பிரிவினையை ஏற்படுத்தி, அவர்கள் மத்தியில் குரோதம், கலவரம் என்பவற்றைத் தூண்டி அதன் மூலம் முஸ்லிம்களைப் பலவீனப்படுத்தவும், முஸ்லிம்களது பலவீனத்தில் தம்மைப் பலப்படுத்திக் கொள்ளவும் முனைந்து வருகின்றனர்.

குறிப்பாக நமது யுகத்தில் இஸ்லாம், கீழைத்தேய- மேலைத்தேய பேராதிக்கங்களுக்கு முன்னால் மாபெரும் சக்தியாக வளர்ந்து சக்தி பெற்று வருகின்றது. சடவாத அமைப்புகளிடம் நிராசை யுற்றிருக்கும் மக்களைத் தன் பக்கம் ஈர்த்தெடுக்கின்றது. முஸ்லிம்களின் சக்தியையும் இஸ்லாத்தின் வேகப் பரம்பலையும் கண்டு அச்சமுறும் எதிரிகள், முஸ்லிம்களிடையே மத்ஹப் ரீதியான பிரச்சினைகளை உருவாக்கி, அதன் மூலம் அவர்களைப் பிளவு படுத்தி விட முனைகின்றனர்.

எனவே, அனைத்து இஸ்லாமிய மத்ஹபுகளை யும் பின்பற்றக் கூடியவர்கள், இது பற்றிய விழிப்புணர்ச் சியுடனும் தூரதிருஷ்டியுடனும் செயற்பட்டால் பயங்கர மான விளைவுகளைத் தரும் இச்சதிகளை முறியடிக்க முடியும்.

ஷீயாக்கள் மத்தியிலும் அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மத்தியில் காணப்படுவது போன்று பல பிரிவுகள் காணப்படுகின்றன. பன்னிரண்டு இமாம்களைப் பின்பற்றக் கூடிய 'இஸ்னாஅஷரிய்யாக்கள்' என அழைக்கப் படுவோரே அதிகமாகக் காணப்படுகின்றனர். உலக முஸ்லிம்களின் மொத்த தொகையில் நான்கிலொரு பகுதியாக ஷீயாக்கள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

18. ஹதீஸ் கிரந்தங்கள்

அஹ்லுல் பைத்துகளைப் பின்பற்றக் கூடியவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறிய அதிகமான ஹதீஸ்களை இமாம்களின் மூலமாக அறிவித்துள்ளனர். அதே போல் ஹஸ்ரத் அலீ அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்தும், ஏனைய இமாம்களிடமிருந்தும் கூடுதலான ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். அவை, ஷீயாக்களின் மார்க்க சட்டத்தைத் தொகுப்பதற்கான அடிப்படை மூலாதாரங் களாக விளங்குகின்றன.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next