முக்கிய விடயங்கள்மேலும் பிரசித்தி பெற்ற அல்குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒருவரான இமாம் சுயூதி, தனது அத்துர்ருல் மன்ஸூர் எனும் கிரந்தத்தில், இப்னு அஸாகிர் வழியாக அறிவிக்கின்றார்கள்: 'ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரழி) அவர்கள் கூறுகின்றார்கள், 'ஒரு நாள் நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது, அப்பக்க மாக ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் வந்தார்கள். அவர்களைக் கண்டதும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறினார்கள்:

'எனது உயிர் எவன் வசமிருக்கின்றதோ அவன் மீது சத்தியமாக, நிச்சயமாக இவரும், இவரது (ஷீயா) கூட்டத்தினருமே மறுமை நாளின் வெற்றியாளர்கள்.'

அதன் பின், மேற்கூறப்பட்ட வசனம் இறங்கியது. இந்நிகழ்வுக்குப் பின்னர், ஹஸ்ரத் அலீ அவர்கள் நபிகளாரின் சபைக்கு வரும்போதெல்லாம் 'படைப்பினங்க ளில் மிகவும் சிறந்தவர் வருகின்றார்' என்றே நபித்தோழர்கள் கூறினார்கள்.'    (அத்துர்ருல் மன்ஸூர் - பாக 6 - பக் 379)

இதே கருத்தை இப்னு அப்பாஸ் (ரழி), அபூபர்சஹ், இப்னு மர்தவிய்யா, அதிய்யா அவ்பி போன்றோர் சிறு வித்தியாசத் துடன் அறிவித்துள்ளனர்.

இதன் படி, ஷீயா எனும் பெயரை இமாம் அலீயுடன் தொடர்பு பட்டவர்களுக்கு சூட்டுவது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்திலிருந்தே தோன்றி வழக்கில் இருந்து வந்துள்ளது என்பதை அறிய முடிகின்றது. நபியவர்களே இப்பெயரைச் சூட்டியுள்ளார்கள் என்பது இதன் மற்றொரு சிறப்பாகும். மாறாக, இது கலீபாக்களின் காலத்திலோ, சபவிய்யாக்களின் காலத்திலோ உருவானதல்ல.

இமாம் அலீயைப் பின்பற்றுபவர்களுக்கு சில சிறப்பியல்புகள் இருக்கின்றன. இமாம் அலீ, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது விசேட கண்காணிப்பின் கீழிருந்தமையே இதற்குக் காரணமாகும்.

நாம் ஏனைய மத்ஹபுகளைப் பின்பற்றுவோருக்கு உரிய மரியாதையை வழங்குகின்றோம். அவர்களுடன் ஒரே வரிசையில் நின்று வணக்கத்தில் ஈடுபடுகின்றோம். ஒரே சமயத்தில் ஒரே இடத்தில் சந்தித்துக் கூடி ஹஜ்ஜை நிறைவேற்றுகிறோம். இஸ்லாத் தோடு சம்பந்தப்பட்ட பொதுவான விவகாரங்களில் ஒத்துழைக் கின்றோம். அதே வேளை இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களைப் பின்பற்றுகின்ற அவரது ஷீயாக்கள் பல்வேறு சிறப்பம் சங்களைக் கொண்டவர்கள் எனவும் அண்ணல் நபியவர்களின் தனிப்பட்ட கவனத்தையும் கரிசனையையும் பெற்றிருந்தவர்கள் எனவும் நாம் நம்புகின்றோம். நாம் இந்த சிந்தனைப்; பிரிவைத் தெரிவு செய்ய இதுவே காரணமாகும்.

ஷீயாக்களை எதிர்க்கும் சிலர், அப்துல்லாஹ் இப்னு சபா எனும் ஒருவருடன் இந்த மத்ஹபைத் தொடர்பு படுத்துவதற்கு முனைகின்றனர். அடிப்படையில் யஹூதியாக இருந்து பின்னர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட அப்துல்லாஹ் இப்னு சபா என்ப வரையே ஷீயாக்கள் பின்பற்றுவதாகக் கூறுவார்கள். இது மிகவும் வியப்புக்குரிய ஒரு கருத்தாகும். ஷீயாக்களின் அனைத்து கிரந்தங் களையும் ஆய்வுசெய்கின்ற போது, அவர்கள் இப்னு சபாவுடன் எவ்வகையிலும் தொடர்புபட்டவர்களல்ல என்பதை அறிய முடியும். அத்துடன், ஷீயாக்களின் றிஜால் சம்பந்தப்பட்ட எல்லா நூற்களும் (குத்புர் ரிஜால்), அப்துல்லாஹ் இப்னு சபா என்பவரை வழிகெட்ட மனிதரெனக் குறிப்பிடுகின்றன. சில அறிவிப்புகளின் பிரகாரம் இமாம் அலீ அலைஹிஸ் ஸலாம், அவன் முர்தத் என்பதால் அவனைக் கொல்லுமாறு கட்டளையிட்டதாக குறிப்பிடப்படுகின்றது.

      

அத்தோடு, வரலாற்றில் அப்துல்லாஹ் இப்னு ஸபா பற்றிய தகவல்கள் நூறு வீதம் சந்தேகத்துக்கிடமானவையாகவே உள்ளன. சில ஆய்வாளர்களின் ஆய்வு முடிகளின் படி இப்னு சபா என்பவர் வெறுமனே கட்டுக் கதைப் பாத்திரம் ஆவார். அல்லாமா அஸ்கரீ யாத்துள்ள 'அப்துல்லாஹ் இப்னு ஸபா' பற்றிய ஆய்வு நூலில், யதார்த்தத்தில் அப்படி ஒருவர் உயிர் வாழவில்லை என்பதை சந்தேகத்துக்கிடமின்றி நிறுவியுள்ளார். அவன் ஒரு கற்பனை மனிதன் என்பதை ஏற்றுக் கொள்ளாவிட்டால் குறைந்தது ஏனைய ஆய்வாளர்களின் படி அவன் வழிகெட்ட ஒருவனாவான். நாமே மறுத்துரைக்கும் ஒருவர் நமது மத்ஹபை உருவாக்கினார் எனக் கதை கூறுவது எவ்வளவு அபத்தமானது.back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next