முக்கிய விடயங்கள்இது தற்காலிக திருமணமாக இருந்த போதிலும், பல விடயங்களில் நிரந்தரத் திருமணத்தை ஒத்ததாகும். மஹர் கொடுத்தல், பெண்ணின் சுதந்திரம் முதலான நிபந்தனைகள் கவனிக்கப்படுவதோடு, திருமண பந்தத்திலிருந்து இருவரும் விலகிக் கொள்ளும் போது பெண் இத்தா இருப்பதும் அவசியமாகும். அத்தோடு இத்திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் உரிமை மற்றும் பாதுகாப்பு, பராமரிப்பு போன்றன, நிரந்தர திருமணத்தின் மூலமாகப் பிறக்கின்ற குழந்தைகளின் நிலையை விட எவ்விதத்திலும் மாறுபட்டதல்ல. ஆக, முத்ஆ என்பது அதன் அனைத்து பரிமாணங்களையும் அவதானிக்கும் போது அங்கீககரிக்கப்பட்ட ஒரு திருமண முறையே என்பது புலனாகிறது.

ஆயினும் தற்காலிகத் திருமணமானது, சில விடயங்களில் நிரந்தரத் திருமணத்திலிருந்து வித்தியாசப்படுகிறது. தற்காலிக திருமணத்தில், கணவன் மனைவிக்கு செலவு கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒருவருக்கு மற்றவரிலிருந்து வாரிசு உரிமையும் கிடையாது. எனினும், இருவர் மூலமாகவும் பிறக்கின்ற பிள்ளைகள், தமது பெற்றோரிடமிருந்து வாரிசுரிமையைப் பெற்றுக் கொள்ள முடியும். இத்திருமண முறை பற்றி அல்குர்ஆன் கூறுவதாவது:

'நீங்கள் முத்ஆ செய்யும் பெண்களுக்கு கட்டாயமாக அவர்களது மஹரைக் கொடுத்து விடுங்கள்.'  (04: 24)

      

அநேகமான அல்குர்ஆன் விரிவுரையாளர்களும் ஹதீஸ் கலை வல்லுனர்களும் இவ்வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். தப்ஸீர் தபரீயில் இவ்வசனத்துடன் தொடர்பான அநேக அறிவிப்புகள் கூறப்பட்டுள்ளன. அவையனைத்தும் மேற்கூறப்பட்ட வசனம் முத்ஆ சம்பந்தமானதே என்பதை உறுதிப்படுத்துகின்றன. ஏராளமான நபித்தோழர்களும் இதனை ஆமோதித்துள்ளார்கள். (தப்ஸீர் தபரீ, பாக.5, பக்.9)

தப்ஸீர் அத்துர்ருல் மன்ஸூரிலும், சுனன் பைஹகீயிலும் இது சம்பந்தமான பல ஹதீஸ்கள் வந்துள்ளன. (அத்துர்ருல் மன்ஸூர், பாக.2, பக்.140, சுனன் பைஹகி, பாக.7, பக்.206)

      

மேலும், ஸஹீஹ் புஹாரி, ஸஹீஹ் முஸ்லிம், முஸ்னத் அஹமத் மற்றும் பல கிரந்தங்களிலும் இத் திருமண முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்தில் நடைமுறையிலிருந்ததாக அறிவிக்கும் பல ஹதீஸ்கள் காணப்படு கின்றன. (முஸ்னத் அஹ்மத், பாக.4, பக்.436, ஸஹீஹ் புஹாரிபாக.7, பக்.16, ஸஹீஹ் முஸ்லிம், பாக.2, பக்.1022 பாபு நிகாஹில் முத்ஆ) இதற்கு மாற்றமான கருத்தைத் தொனிக்கும் றிவாயத்துகளும் இல்லாமல் இல்லை.

      

அஹ்லுஸ் சுன்னா மார்க்க சட்டநிபுணர்களில் பலர், முத்ஆ திருமணம், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது காலத்தில் இருந்ததாகவும், பின் மாற்றப்பட்டு விட்டதாகவும் நம்புகின்றனர். மேலும் பலர், இச்சட்டம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் கடைசி நாள் வரைக்கும் இருந்ததாகவும், பின் அதை இரண்டாம் கலீபா அவர்கள் மாற்றி விட்டதாகவும் கூறுகின்றனர். கலீபா அவர்கள் பின்வருமாறு கூறியதாகப் பதியப்பட்டுள்ளது:back 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 next