இமாமத்வேறொரு வகையில் சொல்வதானால், இரு தரப்பினர் யுத்தத்தில் ஈடுபடுகின்ற போது, (உதாரணமாக ஜமல், சிப்பீன் போன்றவை) அவ்விரு தரப்பையும் சரியானவர்கள் என்றோ அவ்விருவரது செயலையும் சரியானது என்றோ எவ்வாறு ஒப்புக்கொள்ள முடியும்? இது முரண்பாடான ஓர் அம்சமாகும். எனினும், இதனை நியாயப்படுத்துவதற்காக இஜ்திஹாதை அவர்கள் ஆதாரமாகக் கொள்ள முனைகின்றனர். இரு கூட்டத் திலும் ஒரு கூட்டத்தினர் உண்மையின் பக்கம் இருக்க, மற்றவர்கள் தமது இஜ்திஹாதில் தவறிழைத்தார்கள். எனவே, அவர்களுக்கு அல்லாஹ்விடம் மன்னிப்பும், நன்மையும் இருக்கின்றன என அவர்கள் வாதிடுகின்றனர். நம்மைப் பொறுத்த வரையில் இது ஏற்றுக் கொள்ளத்தக்க ஒரு வாதம் அல்ல. இது மிகவும் சங்கடமான ஒரு நிலையை தோற்றுவிக்கின்றது.

இஜ்திஹாத் என்பதை சாட்டாகக் கொண்டு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் பிரதிநிதியுடன் செய்த பைஅத்தை முறித்து, யுத்தத்தைத் தொடங்கி, முஸ்லிம்களின் உயிர்களைப் பறிப்பதென்பது எவ்வகையிலும் நியாயமான ஒரு விடயமாகக் கொள்ளப்பட முடியாது. இஜ்திஹாத் தவறாகப் பாவிக்கப் பட்டால் எக்காரியத்தைத் தான் இஜ்தஹாதின் பேரால் நியாயப்படுத்த முடியாது?

நமது நம்பிக்கையின் படி ஒவ்வொரு மனிதனும் -ஸஹாபாக்கள் உட்பட- அவரவர் சம்பாதித்துக் கொண்டவை களுடனேயே இருப்பார்கள். இதன் பிரகாரம், ஒவ்வொருவரும் அவரவரது தக்வாவின் அடிப்படையிலே தர நிர்ணயம் செய்யப் படுகின்றனர். 'உங்களில் சங்கை மிக்கவர் தக்வாவில் உயர்ந்தவர்' எனும் நபி வாக்குக்கேற்ப 'தக்வா' ஒரு மனிதனை அளக்கும் அளவுகோலாகும்.

நபிகளாருடைய காலத்திலும் பின்னரும் இறையச்சம் கொண்டு, அல்லாஹ்வுக்கும் நபியவர்களுக்கும் விசுவாசமாக நடந்தவர்களைப் போற்றி வாழ்த்தும் முஸ்லிம்கள், நபிகளாருடைய காலத்திலும் பின்னரும் வெளிப்புறத்திலிருந்து அவர்களை எதிர்ப்பவர்களாகவும் உள்ளிருந்து அவர்களை வேதனைப்படுத்து வோராகவும் இருந்தவ ர்களை விரும்பாமலிருப்பது நியாயமானதே. எனவே, அவரவரது செயற்பாடுகளே, அவரவரது உண்மை நிலையை அறிந்து கொள்வதற்கு போதிய சான்றுகளாக அமைகின்றன என்பதை எல்லோரும் தெளிவாக விளங்கிக் கொள்கிறோம். 

'(நபியே!) அல்லாஹ்வையும், இறுதி நாளையும் விசுவாசங்கொண்ட சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டார்களே அத்தகையோரை நேசிப்பவர்களாக நீர் காணமாட்டீர். அவர்கள் தங்களது பெற்றோராயினும் அல்லது தங்களது பிள்ளைக ளாயினும் அல்லது தங்களது சகோதரர்களாயினும் அல்லது தங்களது குடும்பத்தவர்க ளாயினும் சரியே. அவர்களது இதயங்களில் அல்லாஹ் ஈமானை எழுதிவிட்டான்.' (58:22)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்திலோ அல்லது பின்னரோ அவர்களை வேதனைக்குள்ளாக் கியவர்கள், முஸ்லிம்க ளால் புகழப்படுவதற்கு எவ்வகையிலும் அருகதையற்ற வர்கள் என்பது நமது தெளிவான நம்பிக்கையாகும்.

எனினும், நபித்தோழர்களில் பெரும்பாலானவர்கள், இஸ்லாத்திற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பு கள் தியாகங்கள் மூலமாக அல்லாஹ்வினாலேயே புகழப்படும் நிலையையும் பெற்றிருந்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு நபிகளார் மீது பரிபூரணமான விசுவாசங் கொண்டு வாழ்ந்த தூய ஸஹாபாக்களும் அவர்களுக்குப் பின் அந்நேர்வழி யைத் தெரிவு செய்து இறையச்சத்தோடு வாழ்ந்தவர்களும் அவ்வழியில் தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களும் எப்போதும் புகழுக்கும் மரியாதைக்கும் உரியவர்களே என்பதில் ஐயமில்லை.

'முஹாஜிரீன்கள், அன்ஸாரிகள், முதலாவதாக முந்திக் கொண்டவர்கள், மற்றும் நற்கருமத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்கள் ஆகியோரை அல்லாஹ் பொருந்திக் கொண்டான், அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டார்கள்.' (09:100)

இது தான் ஸஹாபாக்கள் தொடர்பான எமது நம்பிக்கை பற்றிய சுருக்கமான குறிப்பாகும்.

11. இமாம்களின் அறிவு நபியிடமிருந்து வந்ததே

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், அல்குர்ஆன் மற்றும் அஹ்லுல்பைத் பற்றிக் குறிப்பிட்டுள்ள ஹதீஸின் பிரகாரம், அவ்விரண்டையும் நேர்வழிக்கான வழிகாட்டிகளாக நாம் கொள்கின்றோம்.back 1 2 3 4 5 6 7 8 next