இமாமத்10. இமாம் அலீ இப்னு முஹம்மத் அன்னக்கீ அலைஹிஸ் ஸலாம்.

11. இமாம் ஹஸன் இப்னு அலீ அல்அஸ்கரீ அலைஹிஸ் ஸலாம்.

12. கடைசியானவரான இமாம் முஹம்மத் இப்னு ஹஸன் அல்மஹ்தி அலைஹிஸ் ஸலாம். ஹஸ்ரத் இமாம் மஹ்தீ அலைஹிஸ் ஸலாம் இப்பொழுதும் உயிர் வாழ்கின்றார்கள் என்பது எமது நம்பிக்கையாகும்.

 இறுதிக் காலத்தில் இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் தோன்றி உலகை நீதியால் நிரப்புவார்கள் என்பதை முஸ்லிம்கள் அனைவரும் நம்புகின்றனர். இமாம் மஹ்தியின் தோற்றம் பற்றிய ஹதீஸ் முதவாத்திர் ஆனதென நிறுவும் தனியான கிரந்தங்களையும் அஹ்லுஸ் ஸுன்னா அறிஞர்கள் யாத்துள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன் 'ராபிததுல் ஆலமில் இஸ்லாமி' பத்திரிகையில், இமாம் மஹ்தி பற்றி கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்கு வழங்கப்பட்ட விளக்கத்தில், அவர்கள் வெளிப்பட்டு வருவார்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டதுடன், அதற்கான ஆதாரங்களாக, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் நவின்ற, பிரபல்யமான ஹதீஸ் கிரந்தங்களில் பதிவு செய்யப்பட்ட பல ஹதீஸ்களும் முன்வைக்கப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இத்தகவல் 24 ஷவ்வால் 1396ல் மஜ்மஉல் பிக்ஹில் இஸ்லாமி நிறுவனப் பணிப்பாளர் முஹம்மத் அல் முன்தஸிர் அல் கத்தானீயின் அங்கீகாரத்துடன் வெளியானது.

எனினும், அவர்களில் அதிகமானோர், இமாம் மஹ்தி இன்னும் பிறக்கவில்லையென்றே நம்புகின்றனர். எனினும் இமாம் மஹ்தி அலைஹிஸ் ஸலாம் ஏற்கனவே பிறந்துள்ளார் என்பதும் பன்னிரண்டாவது இமாமான அவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் உலகில் நீதியை நிலை நாட்டுமாறு அல்லாஹ்வின் கட்டளை கிடைத்ததும் அவர்கள் வெளியாகு வார்கள் என்பதும் நமது நம்பிக்கையாகும்.

10. ஹஸ்ரத் அலீ - அதி சிறந்த ஸஹாபி

ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் ஸஹாபாக்கள் அனைவரிலும் மிகச் சிறப்புக்குரியவர்கள் ஆவார். மற்றும் அன்னார் நபிகளாருக்குப் பின்னர் முஸ்லிம் உலகில் முதலிடத்தைப் பெற்றிருந்தார்கள் என்பது நமது நம்பிக்கையாகும். இதுவே அவர்கள் பற்றிய யதார்த்தமாகும்.

இதைவிட மிகைத்துச் சென்று அன்னாரை தெய்வீகத் தன்மை கொண்டவர் எனக் கருதுவதோ அல்லது நபிகளாருடைய தரத்தில் வைத்துப் புகழ்வதோ ஹராமான, ஈமானை இழக்கச் செய்யும் விடயமாகும். அவ்வாறு செய்வோர் வழிகெட்டவர்கள் என்பதில் சந்தேகத்திற்கிடமில்லை. துரதிர்ஷ்டவசமாக, இத்தகை யோரும் ஷீயாக்கள் என்றே உலகில் அறியப்படுவ தனால் உண்மையான ஷீயாக்களின் சிறப்புகளும் யதார்த்தங்களும் ஏனையோரால் கவனிக்கப்படாமல் போய்விடக் கூடிய நிலையேற்படுகின்றது. எனினும் இமாமிய்யா ஷீயாக்கள் இத்தகைய தீவிரக் கருத்துக் கொண்டோரை இஸ்லாத்தைவிட்டும் தூரமானோர் எனக் கருதுகின்றனர்.

11. ஸஹாபாக்கள்

நபித்தோழர்களுக்கு மத்தியில் நல்லவர்கள், சிறப்புக்குரியவர்கள், தியாகிகள் பலர் காணப்பட்டனர். குர்ஆனும், ஹதீஸும் அவர்களை அழகாக சித்தரித்துக் கூறுகின்றன. அதற்காக, நபித் தோழர்கள் அனைவருமே பாவதோசங்களிலிருந்து பரிசுத்தமானவர்களென்றும் அவர்களது செயல் அனைத்துமே சரியானவையாக ஏற்றுக் கொள்ளப் படத்தக்கவையென்றும் கூறிவிட முடியாது. உதாரணமாக அல்குர்ஆனின் சில வசனங்கள் (சூரா பராஅத், நூர், முனாபிகூன் போன்றவை) நயவஞ்சகர்களைப் பற்றிக் கூறுகின்றன. இந்நயவஞ்சகர்களும் நபித்தோழர்களுக்கு மத்தியில் தான் காணப்பட்டனர். அதனால், அவர்களும் நபித் தோழர்களாகவே கருதப்படக்கூடிய நிலை காணப்பட்டது.

அவர்களில் சிலர், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பிறகு அமைதியாக இருந்த முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணத் துணை போன வரலாறும் உண்டு. தமது காலத்து கலீபாவுக்கு செய்த பைஅத்தை மீறி, பல்லாயிரக் கணக்கான அப்பாவி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படக் காரணமாகவும் அமைந்தனர் சிலர். எனவே, இத்தகையோரது வாழ்க்கையையும் செயற்பாடு களையும் புனிதமானவை எனக் கருத முடியுமா?back 1 2 3 4 5 6 7 8 next