இமாமத்8. இமாம் அலீயை நபிகளார் நியமித்தார்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் அவர்களை தமது பிரதிநிதியென இறை கட்டளையின் பிரகாரம் பலதடவைகளில் பிரகடனப் படுத்தியிருக் கின்றார்கள் என நாம் நம்புகின்றோம். அவற்றில் சில:

நபியவர்கள், தமது இறுதி ஹஜ்ஜை முடித்து விட்டு வந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், கதீர்ஹும் எனுமிடத்தில் பல்லாயிரக்கணக்கான நபித்தோழர்களுக்கு மத்தியில் ஒரு பிரசங்கம் செய்தார்கள். அப்போது சொன்னார்கள்:

'மனிதர்களே! நான் உங்களை விடவும் உயர்ந்தவ னில்லையா?' என்று வினவிய போது, அவர்கள் அனைவரும் 'ஆம்' என்றனர். பின்பு சொன்னார்கள், 'எனவே, எவருக்கெல்லாம் நான் தலைவராக இருந்தேனோ, அவர்களுக்கு இனி தலைவராக வும் வழிகாட்டியாகவும் அலீ இருப்பார்.'

இந்த ஹதீஸ், பல வழிகளில் நபியவர்களிடமிருந்து அறிவிக்கப் பட்டிருக்கின்றது. இதை ஸஹாபாக்களில் 110 பேருக்கு அதிகமானவர்களும், தாபிஈன்களில் 84 பேரும் அறிவித்திருக்கின்றார்கள். சுமார் 360க்கும் அதிகமான பிரபல இஸ்லாமிய நூற்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், ஹஸ்ரத் அலீயின் மீது கொண்டிருந்த அன்பின் வெளிப்பாடே இதுவென்றோ, 'மௌலா' என்பதற்கு நட்பு, நேசம் என்ற கருத்தின் அடிப்படையில் இது சாதாரணமான ஒரு ஹதீஸென்றோ இதில் பொதிந்துள்ள கருத்துகளை அலட்சியமாகப் புறந்தள்ளி விட முடியாது. மாறாக, இது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களது ஹஸ்ரத் அலீயுடனான தொடர்பின் உண்மை இயல்பைப் பிரதிபலிப்ப தாகவும், இஸ்லாமிய அகீதா வுடன் நெருக்கம் கொண்ட தாகவும் விளங்குகின்றது.

நபித்துவத்தின் ஆரம்பத்தில் 'உங்களது நெருங்கிய குடும்பத்தினருக்கு எச்சரிக்கை செய்வீராக' எனும் திருமறை வசனம் இறங்கிய போது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் தமது குடும்பத்தார் அனைவரையும் அழைத்து, இஸ்லாத்தை எடுத்துக் கூறினார்கள். பின்னர், 'இவ்விடயத்தில், உங்களில் எவர் எனக்கு உதவி செய்கின்றாரோ அவர், உங்களுக்கு மத்தியில் எனது சகோதரரும் வாரிசும் எனது பிரதிநிதியுமாவார்' என்று அறிவித்த போது, அங்கு கூடியிருந்தவர் களில் ஹஸ்ரத் அலீயைத் தவிர வேறு எவரும் நபியுடைய இந்த அழைப்புக்கு பதில் கொடுக்கவில்லை. ஹஸ்ரத் அலீ நபிகளாரைப் பார்த்துக் கூறினார்கள்:

'அல்லாஹ்வின் நபியே! நான் இவ்விடயத்தில் உங்களுக்கு உதவியாளனாக இருப்பேன்;' என்றார்கள். பின், நபியவர்கள் ஹஸ்ரத் அலீயைச் சுட்டிக்காட்டிச் சொன்னார்கள்:

'நிச்சயமாக, இவர் உங்கள் மத்தியில் எனது சகோதரரும்    பிரதிநிதியுமாவார்.' (காமில் இப்னு அதீர் - பாக 2 - பக் 63  முஸ்னத் அஹ்மத் பாக 1. பக் 11இப்னு அபில் ஹதீத் - ஷரகு நஹ்ஜுல் பலாகா பாக,2.பக்.210, மற்றும் வேறு பலரும் அறிவிக்கின்றனர்)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள் தமது வாழ்வின் இறுதித் தருணத்திலும் கூடியிருந்தவர் களிடம் மீண்டும் இதை உறுதிப்படுத்துவதற்காக விரும்பினார்கள். ஸஹீஹ் புஹாரியில் கூறப்பட்டுள்ளது போல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூடியிருந்தவர் களைப் பார்த்து:

'உங்களுக்கு ஒரு விடயத்தை எழுதுவதற்காக, என்னிடம் ஏதாவது ஒன்றை (எழுது கோலும் ஓலையும்) கொண்டு வாருங்கள். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவற மாட்டீர்கள்' எனக் கட்டளை பிறப்பித்தார்கள். அங்கிருந்த சிலர் நபியவர்களுடைய கட்டளையைப் புறக்கணித்துஅவர்களுக்கு எழுதுவ தற்கான பொருளைக் கொடுப்பதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டனர். அது மாத்திரமின்றி, மிகவும் கீழ்த்தரமான வார்த்தை களை உபயோகித்து தடுத்துவிட்டனர் என இந்த ஹதீஸின் தொடரிலே குறிப்பிடப்படுகின்றது,  (புஹாரி - பாக 5 - பக் 11 நபியின் நோய் பற்றிய பிரிவு, இதை விடத் தெளிவாக ஸஹீஹ் முஸ்லிம் - பாக 3, பக் 1259ல் குறிப்பிடப்பட்டுள்ளது.back 1 2 3 4 5 6 7 8 next