இமாமத்உலுல் அஸ்ம்களான சகல நபிமார்களும் இவ்(இமாமத்) அந்தஸ்து உடையவர்களாக இருந்தனர் என்று நாம் நம்புகின் றோம்.. அன்னோர் தமது தூதைப் பிரசாரம் செய்து, செயல் ரீதியிலே மக்களுக்கு அதை எடுத்துக் காட்டினர். அவர்கள் ஆன்மீக-இலௌகீக ரீதியிலும், உட்புற-வெளிப்புற விடயங்களிலும் மக்களுக்கு வழிகாட்டிகளாகத்  திகழ்ந்தனர். குறிப்பாக, பெருமா னார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள், தமது நபித்துவத்தின் ஆரம்ப காலத்திலிருந்தே இவ் அந்தஸ்தைக் கொண்டிருந்தார்கள். அவர்களது பணி இறைகட்ட ளைகளைப் பரப்புவதில் மாத்திரம் சுருங்கி விடுவதில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னர், இந்த இமாமத் பணி, அவர்களது சந்ததியினரில் தோன்றிய பன்னிரண்டு பரிசுத்த மனிதர்களுக்கு வழங்கப்பட்டது என நாம் நம்புகின்றோம்.

இமாமத் எனும் இவ்வுயர் பதவியை அடைவதற்கு முக்கிய நிபந்தனைகள் பல உள்ளன. அவர், முழுமையான இறையச்சம் கொண்டவராகவும் எவ்வித பாவமும் செய்யாத வராகவும் அறிவிலும் இஸ்லாமிய சட்டதிட்டங்கள் பற்றிய தெளிவிலும் பூரணத்துவமுடையவராகவும் இருப்பதுடன், மனிதர்க ளையும் அவர்களது கால - இட தேவை நிலைகளை யும் உணர்ந்திருப்பதும் அவசியமாகும்.

3. இமாம்கள் பாவத்தில் இருந்து பரிசுத்தமானவர்கள்

இமாம்கள், பாவம் செய்வதிலிருந்தும் தவறிழைப்பதில் இருந்தும் பரிசுத்தமானவர்களாக இருப்பது இது பற்றிய எமது நம்பிக்கையின் முக்கியமான அம்சமாகும். ஏனெனில், மேலே எடுத்தாளப்பட்ட குர்ஆன் வசனத்தில் குறிப்பிடப்பட்டது ஒரு புறமிருக்க, அவர்கள் பாவமிழைப்போராக இருப்பின், மக்கள் அவர்கள் மீது நம்பிக்கையிழந்து விடுவர். அவர்களிடமிருந்து மார்க்கத்தின் அடிப்படைகள் மற்றும் பிரிவுகள் பற்றிய அறிவைக் கற்றுக் கொள்ள அது தடையாகவும் அமையும். இதனால் தான், இமாம்கள் பரிசுத்தமானவர்களாக இருப்பதோடு, அவர்களது சொல், செயல், அங்கீகாரம் முதலானவை மார்க்கத்தின் ஆதாரங்க ளென வலியுறுத்தப் பட்டுள்ளது.

4. இமாம்கள் மார்க்கத்தின் பாதுகாவலர்கள்

இமாம்கள், ஒருபோதும் புதிய மார்க்கத்தை அறிமுகப் படுத்தவோ, புதிய சட்டதிட்டங்களை உருவாக்கவோ மாட்டார்கள். மாறாக, மக்களிடையே தோன்றுகின்ற பிரச்சினை களுக்கு அல்குர்ஆன் மற்றும் நபியவர்களின் ஸுன்னா என்பவற்றை ஆதாரமாகக் கொண்டு தீர்ப்பும் வழிகாட்டலும் வழங்குவார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தைப் பாதுகாப்பது, அவர்களது முக்கிய பணிகளில் ஒன்றாகும். அத்துடன், அம் மார்க்கத்தை மக்களுக்கு போதிப்பதும் நேர்வழியின் பால் மக்களுக்கு அழைப்பு விடுப்பதும் அவர்களது கடமையாகும்.

5. பரிபூரண அறிவுள்ளோர்

இமாம்கள், இஸ்லாமிய சட்டதிட்டங்களை தெளிவுபடுத்துவதற்கும், அல்குர்ஆனின் சரியான பொருளை விளங்கப்படுத்துவதற்கும் பரிபூரண அறிவைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அவர்களுடைய அறிவும், ஞானமும் அல்லாஹ்விடம் இருந்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு வழங்கப்பட்டு, நபியவர்களிடமிருந்து இமாம்களுக்கு கொடுக்கப் பட்டதாகும். அறிவு விடயத்தில் இத்தகைய பூரணத்துவத்துடன் இருக்கின்ற போதே, அவர்கள் மனிதர்களின் நம்பகத்தன்மைக்கு உரியவர்களாக ஆகின்றனர். அவர்களது வழிகாட்டலை தமது வாழ்க்கை நெறிப்படுத்தலுக்காக ஏற்றுக் கொள்ளவும் மனிதர்கள் முன்வருவர்.

6. இமாமை நியமிப்பது யார்?

இமாம் யார் எனக் கூறும் நிர்ணய விசயம் இறைவனால் தெளிவாகக் கூறப்பட்டிருக்க வேண்டியது அவசியமாகும். அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்குப் பின்னால் வரக்கூடிய ஒவ்வொரு இமாமும் அல்லாஹ்வின் புறமிருந்து, நபி மூலம் அறிமுகப்படுத்தப்படல் வேண்டும் என நாம் நம்புகின்றோம். இது நபி இப்ராஹீமுக்கு 'நாம் உம்மை மக்களுக்கு இமாமாக ஆக்கினோம்' என்று கூறுவதை ஒத்ததாகும்.

அத்தோடு, இறையச்சத்தில் உச்சநிலையை அடைந்தவர் களாகவும், ஒரு விடயத்தில் பிழையோ, தவறோ செய்ய முடியாத அறிவைப் பெற்றவர்களாகவும் இமாம்கள் இருக்க வேண்டும். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் பின்னால் இமாம்களே அறிஞர்கள் என்ற வகையில், சமகால மக்கள் அனைவரிலும் உயர்ந்த அறிவுள்ளவர்களாகத் திகழ்வார்கள். இதனடிப்படையில், பரிசுத்த இமாம்கள் தலைமைத்துவத்திற்கு தெரிவு செய்யப்படுவ தென்பது, மனிதர்கள் மூலமாக அல்லாமல், அல்லாஹ்வின் மூலமே இடம்பெறுகின்றது என்பது நமது உறுதியான கோட்பாடாகும்.

7. இமாம்கள் நிர்ணயிக்கப்படல்

பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள், தமக்குப் பின்னால் வரக் கூடிய இமாம்களைப் பற்றிய தகவல்களை உலகுக்கு வழங்கியுள்ளார்கள். 'தகலைன்' எனும் பிரபல்யமான ஹதீஸில் இதுபற்றி நபியவர்கள் விளக்கமளித் துள்ளார்கள்.

ஸஹீஹ் முஸ்லிமிலே குறிப்பிடப்பட்டிருப்பதாவது:back 1 2 3 4 5 6 7 8 next