மறுமை வாழ்வு'இன்னும் உங்களில் எவரும் (சிராத் பாலமான) அதற்கு வரக்கூடியவராக அல்லாது இல்லை. உமது இரட்சகனிடம் இது உறுதியான ஒன்றாகி விட்டது. பின்னர், பயபக்தி உடையோராக இருந்தோரை ஈடேற்றுவோம். அநியாயக் காரர்களை முழந்தாளிட்ட வர்களாக அதில் விட்டு விடுவோம்."      (19:71-72)

சிராத்தைக் கடப்பது இலகுவாக அமைவதோ அல்லது சிரமமாக அமைவதோ அவரவரது செயல்களின் அடிப்படையைப் பொறுத்தது என்பதாக ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'சிலர் அதை மின்னல் வேகத்திலும் சிலர் குதிரை வேகத்திலும் சிலர் தவழ்ந்தும் சிலர் நடந்தும் சிலர் அதைப் பிடித்துத் தொங்கியவர்களாகவும் அதனைக் கடப்பார்கள். அப்போது, நரகம் அவர்களில் சிலரை எடுத்துக் கொள்ளும். சிலரை விட்டு விடும்."

இந்த ஹதீஸ் சிறு மாற்றங்களுடன் அஹ்லுல் 'Pயா மற்றும் அஹ்லுல் சுன்னா கிரந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. உதாரணம்: கன்சுல் உம்மால் -ஹதீஸ் 39036, தப்ஸீர் குர்துபீ பாக 6 - சூரா மர்யம் - வசனம் 71க்கான விளக்கத்துடன், செய்கு சதூகின் ஆமாலீ எனும் நூல் மற்றும் ஸஹீஹ் புஹாரீ பாக 8 - பக் 146 சிராத் நரகின் மீதான பாலம் எனும் தலைப்பின் கீழும் வந்துள்ளது.

மீஸான் என்பது, அதன் பெயரிலிருந்து விளங்கப்படுவது போன்று மனிதர்களது நன்மை-தீமைகளை அளவிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு தராசு ஆகும். அந்நாளில் ஒவ்வொருவரது நன்மை-தீமைகளும் துல்லியமாகக் கணக்கிடப்பட்டு ஒவவொன்றின் அளவுக்கேற்ப கூலியும் வழங்கப்படும்.

'மறுமை நாளில் நீதமான தராசுகளை நாம் வைப்போம். எந்தவோர் ஆத்மாவும் சிறிதளவும் அநியாயம் செய்யப்பட மாட்டாது. ஒரு கடுகின் வித்தளவு அது இருந்த போதிலும் அதனையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுப்பவர் களில் நமக்கு நாமே போதுமாகும்."  (21:47)

'ஆகவே, எவருடைய நன்மையின் எடை கனத்ததோ, அவர் திருப்தியுள்ள வாழ்வில் இருப்பார். எவருடைய எடை இலேசானதோ, அவர் தங்குமிடம் நரகம் தான்."  (102:6-9)

மனிதர்கள் இவ்வுலகில் புரிகின்ற செயல்களின் தன்மை தான் மறுமையில் அவர்களது வெற்றி தோல்வியை நிர்ணயிக் கின்றது. அன்றைய தினம், எதிர்பார்ப்புகளும் உபதேசங்களும் எவ்வித பயனுமளிக்க மாட்டாது. பரிசுத்தத் தன்மையும் தக்வாவும் இன்றி எதற்கும் பெறுமதி கிடையாது.

'ஒவ்வோர் ஆத்மாவும், தான் சம்பாதித்தவற்று க்குப் பிணையாக ஆக்கப்பட்டுள்ளது." (74: 38)

சிராத், மீஸான் பற்றிய முழு விபரங்களையும் தெளிவாக அறிந்து கொள்வதென்பது சாத்தியமற்ற தாகும். ஏனெனில், இவ்வுலகப் பொருட்களுடனான ஒப்புநோக்கின் அடிப்படையிலான, மட்டுப்படுத்தப்பட்ட அறிவே நம்மிடம் உள்ளது.back 1 2 3 4 5 6 7 8 9 next