மறுமை வாழ்வுஅந்தப் பதிவேடு எப்படியிருக்கும், அதில் பொதிந்துள்ள வற்றை எவரும் நிராகரிக்க முடியாதளவுக்கு எவ்வாறு அது எழுதப்பட்டிருக்கும் போன்ற விடயங்கள் மனிதர்களைப் பொறுத்த வரை தெளிவற்றவையாக இருக்கலாம். இது நியாயமானதே.

ஏனெனில், மறுமை நாளின் விசேடத் தன்மைகளின் ஒவ்வொரு பகுதியையும் மனிதர்கள் தெளிவாக அறிந்து கொள்வதென்பது சாத்தியமற்ற தாகும். அது பற்றிய பொதுவான அடிப்படை அறிவு மாத்திரம் அவர்களிடம் இருக்கின்றது.

 

6.மறுமை நாளின் சாட்சிகள்

மறுமை நாளில், மனிதர்கள் அனைவரது செயலுக்குமான முதன்மை சாட்சியாளனாக அல்லாஹ் இருப்பான். அத்தோடு, மனிதர்களின் உறுப்புகளான கை, கால், தோல் முதலானவையும் மனிதர்கள் நடந்து விளையாடும் பூமியும் இன்னும் இன்னோரன்ன அம்சங்களும் சாட்சிகளாக இருக்கும் என நாம் நம்புகின்றோம்..

'அன்றைய தினம் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம். அன்றியும், அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசும், அவர்களது கால்களும் சாட்சி கூறும்."  (36:65)

'அவர்கள் தங்களின் தோல்களிடம் எங்களுக்கு எதிராக ஏன் நீங்கள் சாட்சி கூறுகிறீர்கள் எனக் கேட்பார்கள். அதற்கு அவை, ஒவ்வொரு பொருளையும் பேசச் செய்தவனாகிய அல்லாஹ் தான் எங்களையும் பேசவைத்தான் என்று கூறும்."  (41:21)

'அந்த நாளில் பூமி தன் செய்திகளை அறிவிக்கும். ஏனெனில் நிச்சயமாக உமது இறைவன் அதற்கு இவ்வாறு செய்யுமாறு வஹி மூலம் அறிவித்திருக்கிறான்."  (99: 4-5)

7. சிராத்தும் மீஸான் தராசும்

சிராத் எனும் பாலம், நன்மை-தீமைகளை நிறுக்கும் மீஸான் தராசு என்பனவும் மறுமையில் உள்ளதாக நாம் நம்புகின்றோம்.

சிராத் எனப்படுவது, நரகின் மேல் போடப்பட்டிருக்கும் ஒரு பாலமாகும். கண்டிப்பாக அனைவரும் அதனைக் கடந்தேயாக வேண்டும். உண்மையில் சுவனத்திற்குச் செல்லும் பாதை, நரகின் மேல் போடப்பட்டிருக்கின்றது.back 1 2 3 4 5 6 7 8 9 next