மறுமை வாழ்வு4. ஆச்;சரியமான மறு உலகம்

மரணத்தின் பின்னுள்ள மீளவுயிர்ப்பித்தல், விசாரணை, தீர்ப்பு, சுவனம், நரகம் முதலானவற்றை உள்ளடக்கிய மறுமை வாழ்வானது வரையறுக்கப்பட்ட இவ்வுலகில் நாம் புரிந்து கொள்ள முடிந்ததை விட மிக உயர்ந்ததும் சிறப்பானதும் ஆகும் என நாம் நம்புகின்றோம்.

'எந்தவொரு ஆத்மாவும் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கண்களின் குளிர்ச்சியை அறிய மாட்டாது.' (32: 17)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களின் பிரபல்யமான ஹதீஸ் ஒன்றிலே வந்திருப்பதாவது:

'எனது நல்லடியார்களுக்கு எந்தக் கண்ணும் கண்டிராத, எந்தச் செவியும் கேட்டிராத, மனித எண்ணத்தில் என்றுமே தோன்றாத அருட் கொடைகளை ஏற்பாடு செய்து வைத்துள்ளேன் என்று அல்லாஹ் கூறுகின்றான.;"

புஹாரி, முஸ்லிம் போன்ற ஹதீஸ் கலை அறிஞர்களும் தப்ரீஸீ, ஆலூஸீ, குர்துபி போன்ற பிரபலமான தப்ஸீர் கலை அறிஞர்களும் தங்களது நூற்களில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கையென்பது, தாயின் வயிற்றுக்குள் மட்டுப் படுத்தப் பட்ட சூழலில் உயிர்வாழும் சிசுவின் வாழ்வைப் போன்றதாகும். கற்பத்திலிருக்கும் சிசு, திறமை, சாதுரியம் என எத்தகைய இயல்புடையதாக இருப்பினும் வெளிப்புற உலகிலுள்ள சூரியன், சந்திரன், தென்றல், காற்று, தாவரங்கள், பசுந்தரைகள், கடலலைகள் போன்ற எதனையும் உணர்ந்து கொள்ளமாட்டாது. அதுபோலவே, மனிதனின் இவ்வுலக வாழ்க்கையில் மறுமை பற்றிய உண்மைகளை பூரணமாக அறிந்து கொள்வதென்பதும் சாத்தியமற்றதே. மனிதர்களாகிய நம்மைப் பொறுத்த வரையில் கியாமத் வாழ்வு என்பது கற்பத்திலுள்ள சிசுவுக்கு வெளியுலக வாழ்வு போன்றதாகும்.

5. செயல்களின் பட்டோலை

பட்டோலை என்பது மனிதர்களின் செயல்களை விபரிக்கும் ஒரு ஏடாகும். நல்ல அமல் செய்தோரின் ஏடு அவர்களது வலது கையிலும் பாவிகளின் ஏடு அவர்களது இடது கையிலும் வழங்கப்படும் என்பதாக நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். தத்தமது செயல்களைப் பார்த்து நல்லடியார்கள் சந்தோ'ப் படுவார்கள். பாவிகள் கைசேதப் படுவார்கள்.

'ஆகவே, எவர் தனது பதிவேடு வலக்கையில் கொடுக்கப் பட்டாரோ, அவர் 'வாருங்கள், எனது பதிவேட்டைப் படித்துப் பாருங்கள்" என மற்றவர் களிடம் கூறுவார். நிச்சய மாக நான் எனது கேள்வி கணக்கை சந்திப்பேன் என்று உறுதியாக எண்ணியிருந்தேன் என்றும் அவர் கூறுவார். ஆகவே, உயர்வான சுவனத்தில், திருப்தியான வாழ்வில் அவர் இருப்பார். மேலும், எவர் தனது பதிவேடு இடக்கை யில் கொடுக்கப்பட்டாரோ, அவர் 'எனது பதிவேடு கொடுக்கப்படாது இருந்திருக்க வேண்டுமே" எனக் கூறுவான்."     (69:19-25)back 1 2 3 4 5 6 7 8 9 next