மறுமை வாழ்வு'மேலும், அவன் தன்னுடைய படைப்பை மறந்து விட்டு ஓர் உதாரணத்தையும் நமக்காகக் கூறுகின்றான். 'எலும்புகளை, அவை மக்கிப் போன நிலையில் உயிரூட்டுபவன் யார்?| என்று அவன் கேட்கிறான். (நபியே!) நீர் கூறும். முதன் முதலில் அதனைப் படைத்தானே, அவனே அதை உயிர்ப்பிப்பான். அவன் ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் நன்கறிபவன்." (36: 78,79)

மனிதனது படைப்பு, வானம் பூமியைப் படைத்ததை விடவும் முக்கியமானதும் அற்புதமானதுமாகும். இப்பாரிய உலகத்தை பல ஆச்சரியங்களுடன் படைத்திருக்கும் இறைவன், மனிதன் மரணித்த பின்பும் அவனை உயிர்ப்பிப்ப தற்கும் சக்தியுள்ளவனாவான்.

'நிச்சயமாக வானங்களையும் பூமியையும் படைத்த அல்லாஹ் அவற்றைப் படைத்ததால் சோர்வடைய வில்லையே. இவ்வாறே, மரணித்தோரை உயிர்ப்பிக் கவும் சக்தியுடை யவன் என்பதை அவர்கள் பார்க்க வில்லையா? ஆம், நிச்சயமாக அவன், அனைத்தின் மீதும் வல்லமை கொண்டவன்." (47: 33)

3. உடல் ரீதியான மஆத்

மறுமையில் ஆத்மா மாத்திரம் விசாரணைக்காகச் செல்வதில்லை. உடலும் உயிரும் இணைந்து சென்றே புதியதொரு வாழ்வை ஆரம்பிக்கின்றன. ஏனெனில், இவ்வுலகில் வாழ்ந்த காலங்களில் உடலும், உயிரும் சேர்ந்தே ஒரு விடயத்தைச் செய்தன. ஆதலால் அங்கு கிடைக்கும் நன்மை-தீமைகளும் இரண்டையுமே சென்றடைய வேண்டியது அவசியமாகும்.

குர்ஆனில் மஆதைத் தொடர்பு படுத்தி வந்துள்ள அநேகமான வசனங்களில், உடலும் இணைந்த மஆத் பற்றிய கருத்துகளே பொதிந்திருக்கின்றன. இறந்து போன எலும்புகளை எவ்வாறு புதியதொரு வாழ்வுக்குத் திருப்ப முடியுமென எதிரிகள் ஆச்சரியத்துடனும், சந்தேகத்துடனும் வினாவெழுப்பிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அல்குர்ஆன் இவ்வாறு பதிலளித்தது:

')நபியே!) நீர் சொல்லும், முதலில் அதைப் படைத்தவன் தான் அதனை மீண்டும் உயிர்ப்பிப்பான்."  (36: 79)

'மனிதன், அவனது உக்கிப் போன எலும்புகளை நாம் ஒன்று சேர்க்கமாட்டோம் என்று எண்ணுகின்றானா? ஆம், நாம் அவனது விரல்களின் நுனிகளைக் கூட சீர்படுத்த சக்தியுடையோராய் இருக்கின்றோம்."  (75: 3,4)

இவ்வசனங்களும், இவை போன்ற வேறு பல வசனங்களும் உடலின் மஆதையே குறிப்பிட்டுச் சொல்லுகின்றன. 'நீங்கள் உங்களது கப்றுகளிலிருந்து எழுப்பப்படுவீர்கள்" என்று கூறும் அல்குர்ஆன் வசனங்களும் கூட இதனையே குறிப்பிடுகின்றன. (36:51,52  54:07  70:43)

இவை தவிர, அல்குர்ஆனின் வேறு பல வசனங்களும் உயிர், உடல் இணைந்த மஆதைப் பற்றி விபரிக்கின்றன.back 1 2 3 4 5 6 7 8 9 next