மறுமை வாழ்வுமறுமை நாளென்பது நிச்சயமானது என்பதை நிறுவக் கூடிய ஆதாரங்கள் மிகத் தெளிவானவை என்பது நமது நம்பிக்கையாகும்.

1. படைப்பின் நோக்கமானது, மனிதன், இவ்வுலகில் பிறந்து பிரச்சினைகளுக்கு மத்தியில் சில நாட்கள் வாழ வேண்டும், அதன்பின் அழிந்து விடுவது என்ற குறுகிய போக்கைக் கொண்டதல்ல என்பதற்கு இவ்வாழ்வே போதுமான அத்தாட்சியாகும்.

'உங்களை நாம் படைத்ததெல்லாம் வீணுக்காகத் தான் என்றும் நிச்சயமாக நீங்கள் எம்மிடம் மீளக் கொண்டு வரப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?"   (23: 115)

இங்கு குறிப்பிடத்தக்க விசயம் யாதெனில் மஆத் இல்லையெனில், மனித வாழ்க்கையும், படைப்பும் வீணானதாகவும், அர்த்தமற்றதாகவும் போயிருக்கும் என்பதை இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது.

2. இறைவனது நீதி அவசியமானது. இவ்வுலகில் நல்லவர்களும் தீயவர்களும் சம அந்தஸ்துப் பெற்றவர்களாக இருப்பதையும், சில வேளைகளில் நல்லவர்களை விட தீயவர்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்களாக மாறிவிடுவதையும் அவதானிக்க முடிகின்றது. ஆனால் நல்லோரும் தீயோரும் அவரவரது செயல்களுக்கான வெகுமதிகளைப் பெற்றுக் கொள்ளும் விதத்தில் அல்லாஹ்வினால் நீதியான கூலி வழங்கப்படுவது அவசிய மாகின்றது.

'தீமைகளைச் சம்பாதித்துக் கொண்டவர்கள், விசுவாசம் கொண்டு நற்கருமங்களைச் செய்தவர்களைப் போன்று அவர்களையும் நாம் ஆக்கிவிடுவோம் என்று எண்ணிக் கொண்டார் களா? அவர்கள் உயிர் வாழ்வதும், மரணித்து விடுவதும் சமமே. அவர்கள் இதற்கு மாறாக தீர்ப்புச் செய்து கொண்டது மிகக் கெட்டதாகி விட்டது."   (45: 21)

3. அல்லாஹ்வின் முடிவற்ற அன்பும் அருளும் மனிதன் மரணித்ததுடன் நிறைவு பெறுவதில்லை. அது நல்லவர்களுக்கு தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பது அவசியமாகின்றது.

'அவன், கருணையை தன் மீது கடமையாக்கிக் கொண்டிருக்கின்றான். நிச்சயமாக அவன் மறுமை நாளில் உங்களை ஒன்று சேர்ப்பான். அதில் சந்தேகமில்லை."  (06: 12)

மறுமை நாள் தொடர்பில் சந்தேகம் கொண்டோரைப் பார்த்து அல்குர்ஆன் கூறுகின்றது, 'உங்களது ஆரம்பம் அல்லாஹ்விடமிருந்தே உருவானது. அவ்வாறிருக்க, மரணித்தவர்களை உயிர்ப்பிக்கும் அவனது மகாவல்லமையில் எவ்வாறு உங்களுக்கு சந்தேகம் எழுகின்றது? அவன் தான் ஆரம்பத்தில் உங்களை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர், உங்களை வேறொரு வாழ்வுக்காக மீட்டுகின்றான்.|

'படைப்புகளை முதலாவதாகப் படைத்ததில் நாம் இயலாமலாகி விட்டோமா? அவ்வாறன்று. (இறந்தபின்) மீண்டும் படைப்பது பற்றி இவர்கள் சந்தேகத்தில் இருக்கின்றனர்."  (50:15)back 1 2 3 4 5 6 7 8 9 next