குர்ஆன்இதன்படி, சுய அபிப்பிராயப் படி குர்ஆனுக்கு விரிவுரை செய்வதானது, அதாவது, முறையான மொழி ஞானம், அரபு இலக்கியம் மேலும் அராபியர்கள் புரிந்து கொள்ளும் முறை என்பவற்றுக்கு முற்றிலும் முரண்படுகின்ற விதத்தில் தமது தனிப்பட்ட அல்லது ஒரு குழுவின் பிழையான சிந்தனைகள் மற்றும் கற்பனைகளுக்கு ஏற்ப குர்ஆனிய கருத்துக்களை விரிவுரை செய்வதானது, அல்குர்ஆனின் கருத்துக்கள் திரிபடை வதற்கு காரணமாகின்றது.

சுய அபிப்பிராயத்தின் அடிப்படையில் குர்ஆனுக்கு விரிவுரை வழங்கும் ஷதப்ஸீர் பி அல் ரஃயு" பல கிளைகளைக் கொண்டது. சில அல்குர்ஆன் வசனங்கள் விசயத்தில் பாரபட்சமாக, ஓர வஞ்சனையாக நடந்து கொள்வதும் அத்தகைய ஒன்றாகும். இதனை இவ்வாறு விளக்கலாம். உதாரணமாக சஃபாஅத், தவ்ஹீத், இமாமத் போன்ற சில தலைப்புகள் சம்பந்தப்பட்ட ஆயத்துகளில் தாம் ஏற்கனவே கொண்டுள்ள கொள்கை அல்லது நம்பிக்கைக்குச் சார்பாக அமைபவற்றையே தேர்ந் தெடுப்பர். தமது கொள்கை அல்லது நம்பிக்கைக்கு இயைபுடையதாக அமையாத ஆயத்து களை, அவை வேறுவகையில் சம்பந்தப்பட்ட ஆயத்துகளுக்கு விளக்கமாக அமையக் கூடிய போதிலும் அவற்றைக் கவனத்தில் எடுப்பதில்லை அல்லது கண்டும் காணாதது போல நழுவி விடுகின்றனர்.

குர்ஆனின் சொற்களை அவற்றின் மேலோட்ட வெளி அர்த்தத்தில் மாத்திரம் விளங்கிக் கொள்வதும் அது பற்றி அறிவுபூர்வ அல்லது மூலாதாரம் சார்ந்த பின்னணிகளைக் கவனத்திற் கொள்ளாமல் விடுவதும் எவ்வாறு குர்ஆனின் மூல அர்த்தத்தைத் திரிபுபடுத்துமோ, சுய அபிப்பிராயத்தின் படி அதனை விரிவுரை செய்வதும் அதே போன்ற திரிபு படுத்தலாகவே கருதப்படுகின்றது. இவை அனைத்தும் புனித குர்ஆனின் அதியுயர்ந்த போதனைகளிலிருந்தும் பெறுமானங்களிலிருந்தும் தூரமாக்கி விடுபவையாகும்.

8. குர்ஆனுக்கு விளக்கமாகும் நபிகளாரின் ஸுன்னா

அல்குர்ஆனுக்கு விளக்கவுரையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் வழிமுறைகள் விளங்குகின்றன. அவ்வழிமுறைகளின் அடிப்படையில் நாஸிஹ்-மன்ஸூஹ், பொதுவானவை-சிறப்பானவை (ஆம்மு-காஸ்ஸு) முதலான குர்ஆனியல் சார்ந்த அறிவுகளையும் மார்க்கத்தின் அடிப்படை மற்றும் கிளை அம்சங்கள் பற்றிய போதனைகளையும் புரிந்து கொள்ள முடிகின்றது. எனவே இத்தகைய அம்சங்களைப் புறக்கணித்து விட்டு, குர்ஆன் மாத்திரம் எமக்குப் போதுமானதென யாரும் கூறிவிட முடியாது. திரு நபியின் போதனைகளையும் நடை முறைகளையும் முஸ்லிம்கள் பின்பற்றியொழுக வேண்டிய ஓர் அடிப்படையாகவும் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதற்கும் சட்டங்களைத் தொகுத்துக் கொள்வதற் குமான மூலாதாரங்களில் ஒன்றாகவும் குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

'இறைத்தூதர் உங்களுக்கு எவற்றைக் கொண்டு வந்தாரோ, அவற்றை எடுத்துக் கொள்ளுங்கள். எவற்றை விட்டும் உங்களைத் தடுத்தாரோ அவற்றிலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்."                                     (59: 07)

'அல்லாஹ்வும், அவனது தூதரும் யாதொரு காரியத்தை முடிவெடுத்து விட்டால், அவர்க ளுடைய அக்காரியத்தில் சுயமாக வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிமையில்லை. அல்லாஹ்வுக்கும், தூதருக்கும் எவர் மாறு செய்கிறாரோ, அவர் பகிர ங்கமான வழிகேட்டில் திட்டமாக வழிகெட்டு விட்டார்."  (33:36)

நபிகளாரின் ஸுன்னாவை அலட்சியம் செய்வோர் உண்மையில் அல்குர்ஆனை மதிக்கிறார்களில்லை. அதேவேளை, நபிகளாரின் வழிமுறைகள் பற்றிய தகவல்கள், பல்வேறு அறிவிப்புகள் மூலம் உறுதிப்படுத்தப்படல் அவசியமாகும். நபிகளாரைத் தொடர்புபடுத்திக் கூறப்படும் அனைத்து அறிவப்புக ளையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

ஹஸ்ரத் அலீ அலைஹிஸ் ஸலாம் அறிவிப்பதாவது, 'நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த சந்தர்ப்பத்தில், அவர்கள் மீது சிலர் பொய்யுரைத்தனர். இதனால், நபியவர்கள் ஒருநாள் குத்பாவின் போது இவ்வாறு குறிப்பிட்டார்கள்:

'எவரொருவர் என்மீது வேண்டுமென்று பொய் கூறுகின்றாரோ, அவர் நரகில் தனக்கென ஓரிடத்தைத் தயார்படுத்திக் கொள்கிறார்."    )நஹ்ஜுல் பலாகா, குத்பா 210)

இதேபோன்ற கருத்துள்ள ஹதீஸ் ஒன்று ஸஹீஹ் புஹாரி, முதலாம் பாகத்தின் 28ம் பக்கத்தில்  (நபிகளார் மீது அபாண்டம் சுமத்துவோர் பற்றிய அத்தியாயம்) வந்துள்ளது.

9. அஹ்லுல் பைத் இமாம்களின் வழிமுறைகள்

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களது கட்டளையின்படி, அவர்களது பரிசுத்தக் குடும்பத்தினரான அஹ்லுல் பைத் இமாம்கள் கூறிய ஹதீஸ்களையும் பின்பற்றி நடப்பது கடமையாகும் என நாம் நம்புகின்றோம். இதற்கான ஆதாரங்களாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.

1. ஷீயா-சுன்னா இரு தரப்பினரும் அநேகமான கிரந்தங்களில் அனைவரிடமும் பிரபல்யமாகி மறுப்புக்கு இடமில்லாத (முதவாதிரான) ஹதீஸ் ஒன்று இக்கருத்தை தெளிவுபடுத்தியுள்ளது. ஸஹீஹ் திர்மதியில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் கூறியதாக வந்துள்ளதாவது:

'மனிதர்களே! உங்களுக்கு மத்தியில் ஒன்றை விட்டுச் செல்கின்றேன். அதை நீங்கள் எடுத்து நடக்கும் காலமெல்லாம் வழிதவற மாட்டீர்கள். அது இறைவேதமும், எனது குடும்பத்தினரான அஹ்லுல் பைத்துமாகும்." (ஸஹீஹ் திர்மதி - பாக 5 - பக் 662  ஹதீஸ் 3786)

2. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களின் வழித்தோன்றலாக வந்த இமாம்கள் அனைத்து ஹதீஸ்களையும் நபியவர்களிடமிருந்தே எடுத்துச் சொல்லி யிருக்கின்றார்கள். மேலும் அவர்கள், 'நாங்கள் சொல்வது எல்லாம், நபிகளாரிடமிருந்து எங்களது தந்தையர்களுக்கும், அவர்களிடமிருந்து எமக்கும் கிடைத்தவையாகும்" என்று சொன்னார்கள்.

ஆக, உள்ளடக்கத்திலும் அறிவிப்பாளர் வரிசையிலும் மிக வலுவான திர்மிதியிலுள்ள மேற்படி ஹதீஸை அவதானிக்காது மிகச் சாதாரணமாக விட்டுவிட முடியுமா? எனவே தான், இது விடயத்தில் கூடுதல் அக்கறை காட்டப்பட்டிருப்பின் .ன்று முஸ்லிம்கள் எதிர் நோக்கியுள்ள அகீதா, பிக்ஹ், தப்ஸீர் முதலிய பல்வேறு துறைகளில் எழுந்துள்ள பிரச்சினைகள் நிச்சயமாக இருந்திருக்காது என்று நாம் உறுதியாக நம்புகின்றோம்.

 back 1 2 3 4 5 6 7