குர்ஆன்எனவே, மேலுள்ளவாறான வசனங்கள் குறிப்பிடும் கருத்துகளில் -அது அல்லாஹ்வினது சிபாத்துகளோ, வேறு அம்சங்களோ எதுவாயினும்- அக்ல், நக்ல் உடைய ஆதாரங்களின் அடிப்படையிலான வரையறைகளைக் கவனிக்காது தவிர்த்து விட்டு வெறும் மேலோட்ட மொழியர்த்தத்தில் தங்கி விடுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாததாகும்.

ஏனெனில், உலகின் அனைத்துப் பேச்சாளர்களும் இவ்வாறான போக்கையே கையாளுகின்றனர். அல்குர்ஆனும் இப்போக்கை ஏகமனதாக அங்கீகரிக் கின்றது. ஈண்டு கவனிக்கத் தக்கது என்னவெனில் அத்தகைய வரையறைகளுக்கான ஆதாரங்கள் உறுதியானவையாக இருக்க வேண்டும் என்பதே.

'எந்தவொரு தூதரையும் அவரது சமூகத்தாரின் மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்ப வில்லை."  (14:04)

7. சுய விரிவுரையின் விபரீதங்கள்

அல்குர்ஆனுக்கு சுய அபிப்பிராயத்தின் அடிப் படையில் விளக்கம் கொடுப்பது  மிகவும் ஆபத்தான விடயமாகும். மிகப்பெரிய பாவங்களில் ஒன்றாகவும் அது கணிக்கப்படுகின்றது. அல்லாஹ்வை நெருங்குவ திலிருந்து தூரமாவதற்கும் இது ஒரு காரணமாக அமைந்து விடுகின்றது. அல்லாஹ் கூறுவதாக ஹதீஸுல் குத்ஸியில் குறிப்பிடப்படுகின்றது:

'எவனொருவன், எனது வேதத்திற்கு சுய அபிப்பிராயத் தைக் கொண்டு விரிவுரை கொடுக்கின்றானோ, அவன் என்னை ஈமான் கொள்ளவில்லை."         (வஸாயில் - பாக 18 - பக 28 ஹதீஸ் 22)

உண்மையில் ஒருவர் பூரண ஈமானுடைய வராயின், இறைவசனங்களை தனது சுய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற விதத்தில் அல்லாமல், உள்ளதை உள்ளபடி மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வார்.

மேலும் ஸஹீஹ் திர்மிதி, நஸாயீ, அபூதாவூத் போன்ற பிரபல்யமான கிரந்தங்களிலே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி கூறியதாக ஒரு ஹதீஸ் குறிப்பிடப்படுகின்றது:

'எவனொருவன் குர்ஆனுக்கு தனது சுய விருப்பின் பேரில் விரிவுரை கொடுக்கின்றானோ அல்லது அது பற்றி தனக்குத் தெரியாத ஒன்றைக் கூறுகின்றானோ, அவன் நரகில் தனது ஆசனத்தை ஒதுக்கிக் கொள்கிறார்." (மபாஹிஸ் ஃபீ உலூமில் குர்ஆன் - மன்னாஃ அல்கத்தான் - பக் 304)

எத்தகைய பின்னணியும் ஆதாரமும் இன்றி தமது சொந்த அல்லது தாம் சார்ந்துள்ள குழுவின் விருப்பு வெறுப்புகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் குர்ஆனை விளங்குவதும் அவ்விளக்கத்தின் பிரகாரம் செயல்படுவதுமே இங்கு குறிப்பிடப் படுகிறது. உண்மையில் இத்தகையோர் குர்ஆனைப் பின்பற்றுவோர் அல்லர். மாறாக, குர்ஆன் தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப இசைவுபட வேண்டுமென விரும்புகிறார்கள். குர்ஆன் பற்றி சரியான ஈமான் உள்ள எவரும் இக்காரியத்தில் இறங்க மாட்டார்கள்.

சுயவிருப்பின் பேரிலான விரிவுரைகளுக்கு இடமளிக்கப் படுமானால், அல்குர்ஆன் தனது அந்தஸ்திலிருந்தும் தரத்தில் இருந்தும் முற்றாக விழுந்துவிடக் கூடும். அதாவது, தத்தமது விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ப விளங்கிக்க கொள்பவர் எந்தப் பிழையான கொள்கையையும் குர்ஆனில் இருப்பதாகக் காட்ட முனையலாம்.back 1 2 3 4 5 6 7 next