குர்ஆன்இங்கு குருடன் எனக் கூறப்பட்டிருப்பது, அங்கக் குறைபாடாகிய பார்வை ர்Pதியான குருட்டு நிலையைன்றி, அக ரீதியான குருட்டு நிலையையே குறிக்கின்றது என்பது உறுதி. அதாவது அகப்பார்வையை இழந்தவர்கள் பற்றியே இவ்வசனம் பேசுகின்றது.

ஏனெனில், உலகில் அநேக நல்லடியார்களும் இறை நேசர்களும் கண்பார்வையற்றவர்களாக வாழ்ந்துள்ளார்கள். இங்கே குருடு என்பது மொழி ரீதியாக நாம் புரிந்து கொள்ளும் கருத்தன்றி இதயங்களின் குருட்டுத் தன்மையைக் குறிப்பதென அறிவுபூர்வமாகப் புரிந்து கொண்டோம்.

அதே போன்று, அல்குர்ஆன் இஸ்லாத்திற்கு எதிரான கூட்டத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகின்றது:

'செவிடர்கள், ஊமையர்கள், குருடர்கள். ஆதலால் அவர்கள் எதையும் அறிந்து உணர மாட்டார்கள்."    (2:171)

இவ்வசனத்தை வெளிப்படையாக நோக்குமிடத்து செவிடு, ஊமை, குருடு ஆகிய மூன்று அங்கக் குறைபாடுகளும் உடையோர், எதையும் அறிந்து கொள்ள முடியாதவர்கள், அறிவிலிகள் என்ற கருத்துப் பிரதிபலிக்கின்றது. ஆயினும், இங்கு குறிப்பிடப்படும்  நபர்கள் இத்ததைகய அங்கவீன முற்றவர்களாகக் காணப்படவில்லை. இம்மூன்று குறைபாடு களும் அகநிலை சார்ந்த குறைபாடுகள் பற்றிய வர்ணிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

அல்குர்ஆன், அல்லாஹ்வைப் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு வர்ணிக்கிறது.

'எனினும், அவனது இருகைகளும் விரிக்கப் பட்டிருக்கின்றன... (05:64)

       ')நூஹே!) எமது கண் முன்பாகவே கப்பலை நீர் செய்யும்...(11:37)

இவ்வசனங்கள், அல்லாஹ்வுக்கு கைகள், கண்கள் போன்ற உடலுறுப்புகள் இருப்பதாகக் குறிப்பிடுகின்றன என்று பொருள் கொண்டு விடக் கூடாது. ஏனெனில் உறுப்புகள் உடலில் இருப்பவை. உடலோ அழிந்து விடுவது. இத்தகைய பண்புகளை விட்டும் அல்லாஹ் தூய்மையானவன்.

இங்கு அல்லாஹ்வின் கைகள் எனப்படுவது, அனைத்துலகையும் தனது கட்டளையின் கீழ் கொண்டிருக்கும் அவனது பூரண இறை சக்தியையும், கண்கள் எனப்படுவது, அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய அவனது விசாலமான அறிவையும் குறிப்பிடக் கூடியதாகும்.back 1 2 3 4 5 6 7 next