குர்ஆன்அல்குர்ஆன் அனைத்து முஸ்லிம்களையும் பார்த்துக் கூறுகின்றது:

'எனவே, குர்ஆனிலிருந்து தங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்...  (73: 20)

அல்குர்ஆனை ஓதுவதென்பது, அதன் கருத்தையும், அதில் கூறப்பட்டிருக்கும் விசயங்களையும் பற்றி சிந்திப்பதற்குக் காரணியாக அமைய வேண்டும். சிந்தித்து ஆராய்ச்சி செய்வது அல்குர்ஆனின் வழிகாட்டலின் பிரகாரம் அமல் செய்வதற்கான முதலாவது படியாகும்.

'அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க மாட்டார்களா? அல்லது அவர்களது இதயங்கள் மீது பூட்டுக்கள் இடப்பட்டுள்ளனவா?" (47: 24)

'திட்டமாக நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, இதனைக் கொண்டு படிப்பினை பெறக் கூடியவர் உண்டா?"  (54: 17)

'உமக்கு நாம் இறக்கியிருக்கும் இவ்வேதம் பரக்க த்துப் பெற்றதாகும். எனவே, அதைப் பின்பற்றுங் கள்."   (06:155)

ஆகவே எவர் குர்ஆனை ஓதுவதிலும் அதை மனனம் செய்வதிலும் மாத்திரம் தமது முயற்சியையும் கவனத்தையும் மட்டுப்படுத்திக் கொள்கிறாரோ அவர்கள் அல்குர்ஆனை ஆராய்ந் தறிதல் மற்றும் அமல் செய்தல் ஆகிய இரண்டு முக்கிய விடயங் களையும் விட்டு விடுபவர்களாக இருக்காமல் அவதானித்துக் கொள்ள வேண்டும்.

6.தப்ஸீரின் விதிமுறைகள்

அல்குர்ஆன் வசனங்களை மொழியிலும் வழக்கிலும் உள்ள கருத்துகளிலே விளங்கிக் கொள்வது முக்கியமாகும். ஒரு சொல்லின் அர்த்தத்தை வரையறுக்கின்ற அல்லது வேறொரு பொருளைச் சுட்டுகின்ற விதத்திலான குர்ஆன், ஹதீஸ் மற்றும் அறிவு சார்ந்த ஆதாரங்கள் இருக்கும் பட்சத்தில் மாத்திரம் நாம் அதற்கொப்ப பொருள் கொள்ள முடியும்.

ஆனால், குர்ஆனுக்கு சந்தேகத்துடன் அல்லது சுய அபிப்பிராயத்தின் அடிப்படையில் விளக்கம் கொடுப்பதைத் தவிர்ந்து கொள்வது கடமையாகும். உதாரணமாக, பின்வரும் குர்ஆன் வாக்கியத்தை நோக்குவோம்.

'எவர் இவ்வுலகில் குருடராக இருக்கின்றாரோ, அவர் மறுமையிலும் குருடரே... (17:72)back 1 2 3 4 5 6 7 next