குர்ஆன்')நபியே!) சொல்லைச் செவியுற்று பின்னர் அதில் மிக அழகானதைப் பின்பற்றுகின்ற என் அடியார்களுக்கு நன்மாராயம் கூறுங்கள்."                             (39:17,18)

இன்று நமது சமயக் கல்வி நிறுவனங்களில் அல்குர்ஆனியல் சம்பந்தமான பல பாடபோதனைகளும் ஆய்வுகளும் இடம்பெறுகின்றன. அவற்றில் முக்கிய மானது, அல்குர்ஆனில் மாற்றம் நிகழாது என்பது சம்பந்தமானதாகும்.

இந் நூலாசிரியர் யாத்த ஷஅன்வாருல் உஸூல்" மற்றும் "தப்ஸீர் அல் அம்ஸல்" போன்ற நூல்களிலும் கூட இது பற்றிய விரிவான விளக்கங்கள் உள்ளன.

4. அல்குர்ஆனும் ஆன்மீக-இலௌகீக தேவைகளும்

மனிதனின் ஆன்மீக-இலௌகீக வாழ்க்கைக்குத் தேவையான விடயங்கள் அனைத்தினதும் அடிப்படைகள் அல்குர்ஆனில் தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளன என்பது நமது உறுதியான நம்பிக்கையாகும். ஓர் அரசாங்கத்தை நிர்வகிப்பது, அரசியல் விவகாரங்களைக் கையாள்வது, ஏனைய சமூகத்தவர்களுடனான உறவுகள், சக வாழ்வின் அடிப்படைகள், போரும் சமாதானமும், சட்ட மற்றும் நீதி நிர்வாகம், பொருளாதார விவகாரங்கள் போன்ற இன்னோரன்ன அம்சங்கள் பற்றிய வழிகாட்டல்கள் குர்ஆனில் காணப்படுகின்றன. அவற்றைப் பின்பற்றி ஒழுகும் போது நமது வாழ்வு ஒளிமயமானதாக மாறும்.

')நபியே!) ஒவ்வொரு விடயத்திற்கும் தெளிவாகவும் நேர்வழியாகவும் அருளாகவும் முற்றிலும் தங்களை இரட்சகனிடம் ஒப்படைத்து விட்டவர்களுக்கு நன்மாராய மாகவும் உம் மீது நாம் இவ்வேதத்தை இறக்கினோம்."  (16: 89)

எனவே சமயம் வேறு, அரசியல் வேறு என்ற பகுப்புகளுக்கு இஸ்லாத்தில் இடமில்லை. அரசாட்சியைக் கையிலெடுத்து, இஸ்லாத்தின் உயரிய விழுமியங்களை  அதன் மூலம் உயிர்ப்பிக்குமாறு அது கூறுகின்றது. அவ்உயிரோட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம் சமூகத்தைப் பயிற்றுவித்து, மக்கள் மத்தியில் சமநீதி வழங்குமாறும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

'விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கோ, அல்லது உங்கள் பெற்றோருக்கோ, அல்லது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதிலும், நீதியை நிலைநிறுத்தியவர்களாக, அல்லாஹ்வுக்காகவே சாட்சி கூறுபவர்களாக இருங்கள்...  (04: 135)

'எந்த சமூகத்தவரின் மீதான விரோதமும், நீங்கள் அநீதமாக நடந்து கொள்ள உங்களைத் தூண்டி விட வேண்டாம். நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பயபக்திக்கு மிக நெருக்கமானதாகும்."   (05: 08)

5. அல்குர்ஆனை ஓதுதல், ஆராய்தல், அமல்செய்தல்

அல்குர்ஆனை ஓதுவது மிகச் சிறந்த வணக்கங்களில் ஒன்றாகும். ஏனெனில், குர்ஆனை ஓதும் போது, அது அல்லாஹ் வைப் பற்றிய சிந்தனைக்கும், அறிவுக்கும் தூண்டுகோலாக அமைகின்றது. சிந்தனையென்பது, நற்காரியங்களின் ஊற்றுக் கண்ணாகும். அல்குர்ஆன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களைப் பார்த்துக் கூறுகின்றது:

'இரவில் சொற்ப நேரம் தவிர எழுந்திரும்! அதில் பாதி விழித்திரும். அல்லது அதிலிருந்து சொற்பத்தைக் குறைத்துக் கொள்ளவும். அல்லது, அதை விட அதிகப் படுத்திக் கொள்ளவும்.. அதில் குர்ஆனை நன்கு திருத்தமாக நிறுத்தி நிறுத்தி ஓதுவீராக."  (73: 2-4)back 1 2 3 4 5 6 7 next