குர்ஆன்அல்குர்ஆன் காலவோட்டத்தில் காலாவதி அடைந்து விடும் தன்மை கொண்டதல்ல. மட்டுமன்றி, அதன் உள்ளடக்கம் வர வர மிகத் தெளிவானதாகவும் அற்புதமானதாகவும் உலகுக்கு வெளிப்பட்டு வருகின்றது.

இமாம் ஜஃபர் ஸாதிக் அலைஹிஸ் ஸலாம் கூறுகிறார்கள்: 'நிச்சயமாக அல்லாஹ், இந்தக் குர்ஆனை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ, அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ வழங்க வில்லை. அது ஒவ்வொரு காலத்திலும் புதியதாகவே தோன்றும். ஒவ்வொரு கூட்டத்தினரிடத்திலும் மறுமை நாள் வரை புதிதாக செழுமை பெற்றுக் கொண்டேயிருக்கும்       ."   (பிஹாருல் அன்வார்- பாக 2 - பக் 280)

3. அல்குர்ஆனில் மாற்றம் நிகழாது

இன்று உலக முஸ்லிம்களின் கைகளில் காணப்படும் அல்குர்ஆன், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி  அவர்களுக்கு இறக்கியருளப் பட்ட அதே அல்குர்ஆன் தான் என்பதும் அதில் எவ்வித கூட்டல் குறைத்தலும் இடம்பெற வில்லை என்பதும் எமது நம்பிக்கையாகும்.

வஹீயை எழுதி வந்த ஒரு குழுவினர், அல்குர்ஆன் இறங்கிய காலத்திலேயே அதனை எழுத்துருவாக்கம் செய்து கொண்டிருந்தார்கள். எல்லோரும் அதன் பகுதிகளை தமது நாளாந்த தொழுகைகளில் பல முறை ஓதி வந்தார்கள். பெரும் தொகையினர் அவற்றை மனனமிட்டுக் கொண்டிருந்தனர். அல்குர்ஆனை அழகுற ஓதுவோரும் மனனமிட்ட வர்களும் எப்போதும் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றனர், பெறுகின்றனர். இவ்வாறான காரணங்க ளினால் அல்குர்ஆனில் எவராலும் சிறிய மாற்றத்தைக் கூட ஏற்படுத்த முடியவில்லை.

அத்துடன், உலக முடிவு வரை அல்குர்ஆனைப் பாதுகாக்கும் பணியை அல்லாஹ்வே பொறுப்பேற்று ள்ளான் என்பது அதன் மற்றுமொரு முக்கிய அற்புதமாகும்.

'நிச்சயமாக நாமே இந்த குர்ஆனை இறக்கி வைத்தோம். இன்னும் நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம.;"  (15:19)

முஸ்லிம்களின் தலைசிறந்த அறிஞர்களும் ஆய்வாளர்களும் -ஷீஆ, சுன்னா வேறுபாடின்றி- அல்குர்ஆனில் எவ்வித திரிபுபடுத்தலும் இடம்பெற வில்லையென்ற விசயத்தில் ஏகோபித்த கருத்தையும் முடிவையும் கொண்டுள்ளனர். இவ்விரு கூட்டத்திலு முள்ள சிறு குழுவினர், சில பலவீனமான தகவல்களை ஆதாரமாக வைத்துக் கொண்டு, அல்குர்ஆனில் மாற்றம் நிகழ்ந் துள்ளதாக குற்றம் சாட்ட முனைகின்றனர். ஆனால், அவர்கள் ஆதாரமாகக் கொள்ளும் தகவல்கள் மற்றும் தரவுகள் அனைத்தும் மவ்ழூஉ -கட்டி விடப்பட்ட கற்பனைகள்- என ஹதீஸ் கலை அறிஞர்கள் விளக்கம் தருகின்றனர். மேலும் சில தகவல்கள் தப்ஸீரோடு சம்பந்தப்பட்டவையன்றி புனித குர்ஆனுடன் நேரடியாகத் தொடர்புடையவையன்று.

குறுகிய சிந்தனைப் போக்கும் தெளிவற்ற அறிவும் கொண்ட சிலர், குர்ஆனில் மாற்றம் செய்ததாக ஷீயாக்கள் மீதோ, அஹ்லுஸ் ஸுன்னாக்கள் மீதோ குற்றம் சுமத்துவதற்கு முனைகின்றனர். இத்தகையோர், தமது அறியாமையினால் அல்குர்ஆனின் பரிசுத்தத்திற்கு களங்கம் ஏற்படுத்தி, இஸ்லாத்தின் விரோதிகளுக்கு பல வகைகளில் துணைபோகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களின் காலத்திலிருந்து அல்குர்ஆன் கோர்வை செய்யப்பட்ட வரலாற்றையும் முஸ்லிம்கள் குறிப்பாக வஹி எழுதுபவர்கள் அவற்றைப் பாதுகாப்பதற்காக எழுதுதல், மனனமிடுதல், ஓதுதல் போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வந்த நிகழ்வுகளையும் ஆராயுமிடத்து, அல்குர்ஆனில் மாற்றங்கள் நிகழ்வதென்பது சிறிதும் சாத்தியமற்றதே என்ற உண்மையை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

மேலும், உலகில் இப்போதுள்ள குர்ஆனைத் தவிர, வேறு குர்ஆன் இல்லை. இதற்கான ஆதாரங்கள் தெளிவாக முன்வைக் கப்பட்டிருப்பதுடன், அது பற்றிய ஆய்வுக்கான வழிகளும் தாராளமாகத் திறந்திருக் கின்றன. அல்குர்ஆன், தற்போது முஸ்லிம்கள் அனைவரது இல்லங்களிலும் இருக்கின்றது. பள்ளிவாசல்கள், பொதுநூலகங்கள் என உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்துப் பிரதேசங் களிலும் இருக்கின்றது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட அல்குர்ஆனின் கையெழுத்துப் பிரதிகள் பல நூதனசாலைகளில் காணப்படுகின்றன. எண்ணிலடங்காத மனித நெஞ்சங்களிலும் அது இருக்கின்றது. இவை அனைத்தையும் சான்றாகக் கொண்ட ஆய்வுகளின் முடிவுகள், அல்குர்ஆனின் மாற்றங்களுக்கு உட்படாத புனிதத் தன்மையைத் தெளிவாக பறைசாற்றியிருக்கின்றன. முன்னையரை விட ஆய்வு வசதிகள் அதிகரித்துக் காணப்படுகின்ற இக்கால கட்டத்தில் குர்ஆனைப் பற்றிய இந்த அபாண்டத்தின் பலவீனத்தை இலகுவாகவே நிரூபித்துக் காட்ட முடியும்.back 1 2 3 4 5 6 7 next