குர்ஆன்Deprecated: Function eregi_replace() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 99 Deprecated: Function split() is deprecated in /home/tamalshia/public_html/page.php on line 103 குர்ஆன்
1வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம்
உலகில் மனிதர்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பதற்காக அல்லாஹ் வேதங்களை இறக்கினான். அல்லாஹ் உலகில் இறக்கி வைத்த வேதங்களாவன: தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன். இவற்றோடு நபி நூஹ் (அலை) , நபி இப்ராஹீம் (அலை) போன்றோருக்கு சுஹுபுகளும் வழங்கப் பட்டுள்ளன. இறுதி வேதமான அல்குர்ஆன், அதற்கு முந்தியவற்றை விட பரிபூரணமானதாகும். வேதங்கள் இறக்கப்பட்டிருக்கவில்லையெனில், மனிதர் கள், இறைவனை அறிவதிலும் வணங்குவதிலும் பெருந்தவறு களை இழைத்திருப்பார்கள். மேலும் ஒழுக்கம், இறையச்சம், அறநெறி, சமூக விதிமுறைகள் போன்ற அவசிய விடயங்களில் இருந்து தூரமாகி இருப்பார்கள். எனவே இறைவேதங்கள், இறையச்சம், ஒழுக்க நெறி, சமய சித்தாந்தம், அறிவு நுட்பம், மெய்யியல் போன்ற பல நல்விதைகளை மனிதர் மனங்களில்; விதைத்து, மனிதப் புனிதர்களைப் பயிற்றுவித்து உருவாக்கின. 'ரசூல், தம் இரட்சகனிடமிருந்து தமக்கு இறக்கி வைக்கப்பட்ட வேதத்தை ஈமான் கொள்கின்றார். அவ்வாறே முஃமின்களும் விசுவாசிக்கின்றனர். இவர்கள் ஒவ்வொரு வரும் அல்லாஹ்வையும் அவனது மலக்குகளையும் அவனது வேதங்க ளையும் ரசூல்மாரையும் ஈமான் கொள்கின்றனர்." (02: 285) முந்திய வேதங்கள் அனைத்தும், மனிதர்களின் குறுகிய சிந்தனையினாலும் அறியாமையினாலும் திரிபுக்கு உட்படுத்தப் பட்டிருக்க, அல்குர்ஆன் மாத்திரம் ஓர் அட்சரமும் மாற்றமின்றி பரிசுத்தமாக பேணப்பட்டு வருகின்றது. அது கதிரவன் போன்று யுகம் யுகமாக இருண்ட உள்ளங்களை ஒளிமயமாக்கிய வண்ணம் திகழ்கிறது. 'திட்டமாக, அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவான ஒரு வேதமும் உங்களிடம் வந்திருக்கின்றது. அல்லாஹ், அதன் மூலம் தன்னுடைய பொருத்தத்தினைப் பின்பற்றுகின்றவர்களை சமாதானத்திற்குரிய வழியில் செலுத்துகிறான " (05:15,16) 2. அல்குர்ஆன் - இறுதி நபியின் பேரற்புதம்
இறுதி நபிக்கு வழங்கப்பட்ட மிக முக்கிய அற்புதமாக புனித அல்குர்ஆன் விளங்குகின்றது. இவ் அற்புதமென்பது அதன் இலக்கண இலக்கியச் சிறப்பினால் மட்டும் பெற்றுக் கொள்ளப் பட்டதன்று. அதன் எளிமை, கருத்தாழம் போன்ற இன்னோரன்ன காரணிகள் அதன் அற்புதத் தன்மைக்குச் சான்றாகும். இது பற்றி அகீதா மற்றும் இல்முல் கலாம் பற்றிய நமது நூல்களில் விளக்கப்பட்டுள்ளது. அல்குர்ஆனுக்கு நிகரான வேதமொன்றை, ஏன் ஓர் அத்தியாயத்தைக் கூட உருவாக்குவது எவராலும் முடியாத விடயமாகும் என்று நாம் நம்புகின்றோம். இது தொடர்பாக சந்தேகம் கொண்டவர்களுக்கு அல்குர்ஆன் பல்வேறு கட்டங்களில் சவால் விடுகின்றது. ')நபியே!) நீர் கூறுவீராக! இந்தக் குர்ஆனைப் போன்று ஒன்றைக் கொண்டு வருவதற்கு மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்தாலும், இதனைப் போன்று அவர்கள் கொண்டு வரமாட்டார்கள். அவர்களில் சிலர் சிலருக்கு உதவியாளர்களாக இருந்தாலும் சரியே." (17: 88) 'மேலும், நம் அடியார் மீது நாம் இறக்கி வைத்த இவ்வேதம் பற்றி நீங்கள் சந்தேகத் திலிருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருப்பின், அல்லாஹ்வைத் தவிர, உங்கள் உதவியாளர்களை யெல்லாம் அழைத்துக் கொண்டு, இதுபோன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்... (02:23(
|