நபித்துவம்'')நபியே!) கூறுவீராக! அல்லாஹ் நாடினாலே தவிர, எனக்கு நானே நன்மை-தீமையைத் தடுத்துக் கொள்வதற்கும் சக்தி பெறமாட்டேன்.'    (07:188)

எல்லா மத்ஹபைச் சேர்ந்தவர்களிடத்திலும் வஸீலா தேடும் விசயத்தில் சார்பாகவும் முரணாகவும் அதி தீவிரப் போக்கைக் கடைப்பிடிப்போர் உள்ளனர். இவர்களுக்கு இதன் உண்மை தெளிவுபடுத்தப் பட்டு வழிகாட்டப்படுவது அவசியமாகும்.

நபிமார்களுடைய அழைப்பு

உலகிற்கு அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்க ளினதும் அழைப்பின் நோக்கம் ஒன்றாகவே இருந்துள்ளது என நம்புகின்றோம். மனிதர்களை இறை நம்பிக்கையின் மூலமாகவும், மறுமை விசுவாசத்தின் மூலமாகவும் விமோசனத்தின் பால் கொண்டு சேர்ப்பதாகவே இருந்தது. இந்நோக்கை அடைவதற்காக, கற்பித்தல், முறையான பயிற்றுவித்தல், வழிகாட்டல் என பல்வேறு அர்ப்பணிப்புடனான பணிகளை அவர்கள் மேற்கொண்டார்கள். இதனாலேயே, அனைத்து நபிமார்களும் முஸ்லிம்களிடத்தில் ஏற்றத் தாழ்வின்றி மதிப்பு மிக்கவர்களாகவும் விருப்புக்குரிய வர்களாகவும் விளங்குகின்றார்கள்.

''அவனுடைய தூதர்களில் எவருக்கிடையிலும் நாங்கள் வேற்றுமைப்படுத்தி விடமாட்டோம்.      (02: 285)

காலவோட்டத்தில் மனித இனத்தின் அறிவு வளர்ச்சிக்கு ஏற்புடைத்த விதத்தில், அவர்களுக்கு கட்டம் கட்டமாக வழங்கப்பட்டு வந்த சமய வழிகாட்டல்கள், பின்னையது முன்னையதை விட பரிபூரணத்துவத்தில் கூடியதாகவும் ஆழமிக்கதாகவும் காணப்பட்டது. இறுதியாக, மிகப் பரிபூரணத்துவம் பெற்ற வழிகாட்டலின் அவசியமும் அதற்குரிய நிலைமைகளும் தோன்றிய போது இறுதி வேதமாக இஸ்லாம் அருளப்பட்டது. கட்டம் கட்டமாக முன்னர் வழங்கப்பட்டு வந்த முன்னைய வழிகாட்டல்களை விஞ்சிய அதன் ஏக பரிபூரணத்துவத்தைப் பற்றி பின்வரும் இறைவாக்கு வெளியாகியது.

''இன்றைய நாள், உங்களுக்காக உங்களது மார்க்கத்தை நான் பரிபூரணமாக்கி வைத்து விட்டேன். இன்னும், என்னுடைய அருட் கொடையை  உங்கள் மீது முழுமையாக்கி விட்டேன். மேலும், உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக நான் பொருந்திக் கொண்டேன்.||  (05:03(                            

முந்திய நபிமார்களின் அறிவிப்பு

அநேகமான நபிமார்கள், தமக்குப் பின் வரவுள்ள இறைத்தூதரைப் பற்றிய முன்னறிவிப்புகளை மக்களுக்கு வழங்கியிருக்கின்றார்கள். நபி மூஸா (அலைஹிஸ்ஸலாம்), நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) ஆகியோர் இறுதி இறைத்தூதரான முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி) நபியின் வருகை பற்றி மக்களுக்கு முன்னறிவிப்பு செய்துள்ளார்கள். அவற்றில் சில இப்போதும் அச்சமயத்த வர்களது வேத நூல்களில் காணப்படுகின்றன.

''அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் குறிப்பிடப்பட்டுள்ள உம்மி நபியான இத்தூதரை பின்பற்றுகின்றார்கள்..... அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.||  (07:157)

நபி முஹம்மதின் (ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி) நபித்துவத்திற்கு முன்னர், யஹூதிகளின் மிகப் பெரும் கூட்டமொன்று, மதீனாவில் குடியேறி, முஹம்மத் நபியவர்களின் வருகையை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. ஏனெனில், அவர்களது வேதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த இறைத்தூதர் இம்மண்ணிலிருந்து தான் வருவார் என அவர்கள் நம்பியிருந்தனர்.

நபிகளார், உலகில் தமது தூதுத்துவத்தைப் பகிரங்கப் படுத்திய போது, அவர்களில் சிலர் அதனை ஏற்றுக் கொண்டனர். வேறு சிலரோ தமது நலனையும், சுயலாப த்தையும் கருத்திற் கொண்டு நபியவர்களைப் புறக்கணித்து அலட்சியம் செய்தனர்.back 1 2 3 4 5 6 7 next