நபித்துவம்''மஸீஹும் அல்லாஹ்வுக்கு நெருக்கமான மலக்குகளும் அல்லாஹ்வுக்கு அடிமையாயிருப்பதைக் குறைவாகக் கொள்ளவே மாட்டார்கள்.||  (04:172)

கிறிஸ்தவர்களின் 'திரித்துவம்| (மூவர் கொண்ட தனிக் கடவுள்) எனும் கோட்பாடு, முதலாம் நூற்றாண்டிற்குப் பின்னர் புதிதாகத் தோன்றிய ஒன்றே என வரலாறு கூறுகிறது.

அற்புதங்கள்

நபிமார்கள் அல்லாஹ்வின் அடியார்களேயெனினும் அவர்கள் அல்லாஹ்வின் அனுமதியின் படி சென்றகால, நிகழ்கால, எதிர்கால விசயங்கள் பற்றிய சில தகவல்களைப் பெற்றுக் கொள்ள அது ஒரு போதும் தடையாக இருக்க மாட்டாது என்பதாக அல்குர்ஆன் விபரிக்கின்றது.

'')அல்லாஹ்) மறைவானவற்றை அறிகிறவன். எனவே, தான் மறைத்து வைத்திருப்பவற்றை -தூதர்களில் தான் பொருந்திக் கொண்டோருக்கே தவிர- வேறு ஒருவருக்கும் அவன் வெளிப்படுத்தமாட்டான்.||  (72:26,27)

நபி ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள், மக்களுக்கு பல இரகசிய விசயங்களைப் பற்றி தகவல் கொடுத்தார்கள். அது அவர்களுடைய பிரத்தியேக அற்புதங்களில் ஒன்றாகும். 

''மேலும், நீங்கள் உண்பவற்றையும், உங்கள் வீடுகளில் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன்.||(03:49)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களும், இறைஞானத்தின் மூலமாக மறைவான சில  விசயங்களைப் புரிந்து கொண்டு. அத்தகைய சில விடயங்களை வெளிப்படுத்திச் சொன்னார்கள்.

'')நபியே!) இது நீர் அறியாத மறைவான செய்திகளில் உள்ளதாகும். இதை உமக்கு நாம் வஹி மூலம் அறிவிக்கின்றோம்.|| (12:102)

இதன் பிரகாரம், வஹியின் மூலமாகவும் இறைவனின் அனுமதியோடும் இறைத்தூதர்கள் மறைவான சில விசயங்களை அறிந்து கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது. சில அல்குர்ஆன் வசனங்களின் படி, மறைவானவை பற்றிய அறிவு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்களுக்கு இல்லையென்ற கருத்தை முன்வைப்பது போன்று தோன்றலாம்.

''மறைவானவற்றை நான் அறியமாட்டேன். மேலும், நான் ஒரு மலக்கு என்று உங்களிடம் கூறவும் இல்லை.|| (06:50(                                                                back 1 2 3 4 5 6 7 next