நபித்துவம்அதே வேளை, இஸ்லாம் இயல்பாகவும் சுதந்திரமாகவும் பின்பற்றப்பட வேண்டும். பலாத்காரத்துக்கோ வற்புறுத்தல்களுக்கோ இங்கு இடமில்லை. அல் குர்ஆன் இது பற்றி இவ்வாறு கூறுகின்றது:

''மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் கிடையாது. ஏனெனில், வழிகேட்டில் இருந்து நேர்வழி தெளிவாகி விட்டது.|| (02:256)

இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை முஸ்லிம்கள் பூரணமாக தமது அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்தும் போது, அது இஸ்லாத்தின் மீதான பிறரின் நல்லெண்ணத்துக்கும் புரிந்துணர்வுக்கும்; வழிவகுக்கின்றது.   அவ்வாறிருக்க மார்க்கத்தை யார் மீதும் நிர்ப்பந்தமாகத் திணிக்கும் அவசியம் ஏற்படுவதில்லை.

நபிமார்கள் மஃஸூம்களாவர்

நபிமார்கள் அனைவரும் தமது வாழ்நாள் முழுவதிலும் -நுபுவ்வத்துக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி- பாவச் செயல், மறதி, தவறுகளை விட்டும் பரிசுத்தமானவர்களாக இருந்தார்கள் என்பது எமது நம்பிக்கையாகும். ஏனெனில், பாவச்செயல்களிலோ, தவறிழைப்பதிலோ அவர்கள் ஈடுபடும் பட்சத்தில் நபித்துவத்திற்குரிய அந்தஸ்தும், தகைமையும் அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு விடும். தவிரவும், அவர்களை தமது வழிகாட்டியாகவும், முன்மாதிரி யாகவும் எடுத்துக் கொள்வதில் மனிதர்களும் உடன்பாடற்றவர்களாக மாறிவிடுவார்கள்.

ஆயினும் சில நபிமார்கள், பாவங்களில் அல்லது தவறுகளில் ஈடுபட்டதாக அல்குர்ஆன் வசனங்களிலும் ஹதீஸிலும் வெளிரங்க அர்த்தத்தில் காண முடிகின்றது. இது ''தர்குல் அவ்லா''|| வகையைச் சேர்ந்ததென்பதே எமது நம்பிக்கையாகும். அதாவது நன்மைக்குரிய இரு அம்சங்களில், நன்மை அதிகமுள்ளதை விட்டு, நன்மை குறைவாக இருப்பதைத் தெரிவு செய்வதாகும்.

நபிமார்கள் அல்லாஹ்வின் அடியார்கள்

நபிமார்களும், ரசூல்மார்களும் அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்டு நடக்கக் கூடிய அடியார்கள் என்பது அவர்களுக்குரிய முக்கிய சிறப்பாகும். இதனால் தான், முஸ்லிம்கள் தமது நாளாந்த தொழுகையின் போது பின்வரும் வசனத்தை மீட்டி மீட்டிச் சொல்கின்றனர்.

''நிச்சயமாக முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஆலிஹி அவர்கள் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார்கள் என நான் சாட்சி கூறுகின்றேன்.||

எந்தவொரு இறைத் தூதரும், தன்னை இறைவன் என பிரகடனப்படுத்திக் கொண்டு, தன்னை வணங்கும்படியாக மக்களுக்கு அழைப்பு விடுக்க வில்லை.

''எந்தவொரு மனிதருக்கும் வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருக்க, பின்னர் அவர் மனிதர்களிடம், அல்லாஹ்வையன்றி எனக்கே அடியார்களாகி என்னையே வணங்கி விடுங்கள் என்று கூற இயலாது.|| (03: 79)

ஹஸ்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம், சில கிறிஸ்தவர்களால் இறைவன் என மதித்து வணங்கப் படுகின்றார்கள். ஆனால், ஒரு போதும் அன்னார் தம்மை வணங்குமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. மாறாக, தம்மை அல்லாஹ்வின் தூதர் என்றும் அவனது அடியார் என்றுமே அறிமுகப்படுத்திக் கொண்டு, அல்லாஹ்வை வணங்குமாறே அழைப்பு விடுத்தார்கள்.back 1 2 3 4 5 6 7 next